அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube


Argentina


ஆர்ஜென்டீனா Vs மெக்சிகோ


உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் 3-1 என்ற கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது ஆர்ஜென்டீனா.

ஆர்ஜென்டீனாவின் கார்லஸ் டெவெஸ் அபாரமாக ஆடி இருகோல்கள் அடித்து தனது அணியின் வெற்றியை எளிதாக்கினார்.
இந்த முறை உலகக் கோப்பையை வெல்லும் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஆர்ஜென்டீனா, மற்றொரு பலம் வாய்ந்த அணியான மெக்சிகோவை காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஞாயிற்றுக்கிழமை எதிர்கொண்டது.


ஆட்டம் துவங்கியதில் இருந்தே ஆர்ஜென்டீன வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். குறிப்பாக ஆர்ஜென்டீனாவின் லயோனல் மெஸ்ஸி, கொன்ஸôலோ ஹிகுயின், கார்லஸ் டெவெஸ் ஆகியோர் அபாரமாக ஆடினர்.
ஆட்டத்தின் 26-வது நிமிடத்தில் கிடைத்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திய டெவெஸ் கார்லஸ், மெஸ்ஸி அடித்த பந்தை தலையால் முட்டி கோலாக மாற்றினார்.


அடுத்த 7-வது நிமிடத்தில் (33-வது நிமிடம்) கொன்ஸôலோ கோல் அடித்து ஆர்ஜென்டீன ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் ஆர்ஜென்டீனா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதி ஆட்டத்தின் 52-வது நிமிடத்தில் கோல் கம்பத்தை நோக்கி வேகமாக பந்தை எடுத்துச் சென்றார் ஆர்ஜென்டீனாவின் டெவெஸ், இடைமறித்த மெக்சிகோ வீரர்களை ஏமாற்றி 25 அடி தூரத்தில் இருந்து அதிரடியாக கோல் அடித்து மெக்சிகோ வீரர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.


தொடர்ந்து கோலடிக்க போராடிய மெக்சிகோ அணிக்கு 71-வது நிமிடத்தில் கோல் அடித்து ஆறுதல் அளித்தார் அந்த அணியின் ஜேவியர் ஹெர்னாண்டஸ்.
அதன்பிறகு இரு அணிகளுக்கும் கோல் கிடைக்கவில்லை. இறுதியில் ஆர்ஜென்டீனா 3-1 என்ற கோல்கள் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தது. ஜூலை 3-ம் தேதி நடைபெறவுள்ள காலிறுதி ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா, பலம் வாய்ந்த ஜெர்மனியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாய் அமையும் என்பதில் சந்தேகமில்லை. 

-----------------------------------------------------------------------------------------------------
நெதர்லாந்து Vs ஸ்லோவேகியா 


Returning Robben helps sink Slovakia

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்லோவேகியாவை வென்று காலிறுதிக்குள் நுழைந்தது.


தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள பலம் வாய்ந்த அணியான நெதர்லாந்து, தரவரிசையில் 34-வது இடத்தில் ஸ்லோவேகியாவை எதிர்கொண்டது.


ஆட்டம் துவங்கியதிலிருந்தே அபாரமாக ஆடிய நெதர்லாந்து அணிக்கு 18-வது நிமிடத்தில் அந்த அணியின் ராபென் கோல் அடித்தார்.
இதன்பிறகு முதல் பாதி ஆட்டம் முழுவதும் இரு அணிகளுக்கும் கோல் கிடைக்கவில்லை.


இரண்டாவது பாதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஸ்லோவேகியா, நெதர்லாந்து அணிக்கு கடும் சவாலை அளித்தது. 84-வது நிமிடத்தில் நெதர்லாந்தின் வெஸ்லே கோல் அடித்தார். இதனால் நெதர்லாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.


கடைசி வரை தொடர்ந்து போராடிய ஸ்லோவேகியா அணிக்கு ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் கோல் கிடைத்தது.


அந்த அணியின் ராபர்ட் இந்த கோலை அடித்தார். இறுதியில் 2-1 என்ற கணக்கில் ஸ்லோவேகியாவை வீழ்த்தி நெதர்லாந்து காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தது.Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.