அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

தொன்மா


தொன்மா (Dinosaur, டைனசோர் (கேட்க) என்பது ஏறத்தாழ 230 மில்லியன்ஆண்டுகளுக்கு முன் தொடங்கி 160 மில்லியன் ஆண்டுகள் பூமியின் நிலத் தரையின் மீது முழு வல்லாண்மையுடன் வாழ்ந்து வந்த முதுகெலும்புள்ள விலங்கினங்கள் ஆகும். இவை ஏறத்தாழ 65 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன் ஒரு பேரழிவு நிகழ்வு காரணமாக முற்றிலுமாய் அழிந்து போயிற்று.
தொன்மாக்கள் வாழத் தொடங்கிய காலத்திற்கு சற்று முன்னர்வரை நில உருண்டையில் ஒரேயொரு தொடர்ந்த நிலத்தரைப்பகுதிதான் பெரிய கண்டமாக இருந்ததென்றும், அதனை முற்றுமாய்ச் சூழ்ந்து ஒரேயொரு பெருங்கடல் மட்டும்தான் இருந்தென்றும் அறிஞர்கள் கருதுகின்றனர் தொன்மாக்கள் வாழ்ந்த பொழுது தரைநிலப்பகுதிகள் கண்டங்களாக பிரிந்து நகரத் தொடங்கிய பொழுதும், இயற்கையாக அமைந்த நிலப்பாலங்கள் வழி தொன்மாக்கள் அன்றிருந்த தரைநிலம் முழுவதும் திரிந்தன.

தொன்மா என்னும் பெயரும் அக்காலத்தில் வாழ்ந்த உயிரினங்களும்

தொன்மா என்பது இங்கே முற்றிலுமாய் அழிந்து போன விலங்கினங்களைக் மட்டுமே குறிக்கும் ஒரு சொல்லாகப் பயன்படுகின்றது. மா என்றால் விலங்கு, தொல் என்றால் பழைய, எனவே தொல் + மா = தொன்மா = தொல் பழங்காலத்தில் இருந்த விலங்கினம். தொன்மா என்று கூறினாலும், இவைகளை போலவே தொல் பழங்காலத்தில் இருந்து வாழ்ந்து இன்றும் நம்மோடு இருக்கும் முதலை போன்ற இனங்களை இச்சொல் குறிக்காது. தொன்மாக்கள் வாழ்ந்த காலத்தில் அதே காலத்தில்
முதலைகளும்,தவளைகளும், பல்லிகளும், 
ஆமைகளும், நத்தைகளும், பூச்சிகளும் வாழ்ந்திருந்தன. கடலில் கிளிஞ்சலுயிரி, கணவாய் வகைகள் (squids),
 இளகிநீரிகள் (jelleyfish), விண்மீனிகள் (நட்சத்திர மீன்கள்), 
சுறா மீன்கள், பிற மீன் இனங்கள், இன்று மறைந்துவிட்ட 
கடலில்வாழ்ந்த இச்தியோசோர், பிளெசியோசோர், ஊர்வன உடலமைப்புகொண்டவௌவால் போன்ற இறக்கைகள் கொண்ட இப்டெரோசோர் மட்டுமல்லாமல் சிறிய எலி அளவிலான பாலூட்டி வகைகளும் வாழ்ந்தன. 
அக்காலத்தில் பூக்கும் மரம் செடிகொடிகள்இன்னும் நில உலகில் தோன்றவில்லை. (பார்க்க: நிலவியல் உயிரின ஊழிக் காலங்கள்). தொன்மாக்களில் ஒரு வகையான தெரோபாடு என்னும் ஒரேயொரு இனத்தின் கிளை மட்டும் தப்பி இன்று பறவை இனமாக உள்ளதாக அறிஞர்கள் கருதுகிறார்கள். இத் தொன்மாக்கள் என்பவை மிகப்பெரும்பாலும் நீரில் வாழாது நிலத்தின் தரைமீது வாழ்ந்த உயிரினங்களாகும். பறக்கவல்ல ஒருசில இனங்களும் இருந்தன.
தொல்பழங்காலத்தில் வாழ்ந்து அழிந்துபோன சிலவகை ஊர்வன விலங்குகளாகிய பெலிக்கோசோர், டைமெட்ரான் போன்றனவும், இறக்கைகள் கொண்ட இப்டெரோசோர் முதலியனவும் நீர்வாழ் விலங்காக இருந்த இச்தியோசோர், பிளெசியோசோர், மொசசோர்முதலியனவும் இந்த தொன்மா வகையைச் சேர்ந்தவை அல்ல. தொன்மாவை ஆங்கிலத்தில் டயனசோர் (Dinosaur) என்று அழைப்பர். இவ் ஆங்கிலச்சொல் கிரேக்க மொழியில் உள்ள இருசொற்களின் கூட்டாய்ப் பெறப்பட்டது. டைனோஸ் + சோரா = டைனசோர் . டைனோஸ் (δεινός deinos ) என்றால் “கொடிய” “அச்சமூட்டும்”, “பெரிய” என்று பொருள்படும்; சோரா அல்லது சௌரா ( σαύρα , saura ) என்றால் “பல்லி”, “ஊர்வன” என்று பொருள்படும். எனவே இத் தொன்மாக்களைக் கொடும்பல்லி அல்லது கொடிய ஊர்வன என்றும் சொல்லலாம்.

தொன்மா கண்டுபிடிப்பு

ரிச்சர்டு ஓவன் (Richard Owen) என்னும்   ஆங்கிலேய தொல்லுயிரியல் ஆய்வளர், 1842 ஆம் ஆண்டில் தான் கண்டுபிடித்ததொல்லுயிரெச்சங்களைக் கொண்டு, அவ்விலங்குகள், பல்லி போன்ற ஊர்வன வகையைச் சேர்ந்த சோரியன் என்னும் உயிரினத்தின் ஓர் உட்பிரிவில் டயனோசோரியா என்னும் ஒரு புதிய பிரிவில் சேர்த்தார். எனவே இவரே இந்த புதிய டயனசோர்என்னும் தொன்மாக்களை முதன் முதலில் வகைப்படுத்தியவர். கிரேக்கமொழிச் சொற்களில் இருந்து இப்பெயர் சூட்டியவரும் இவரே. ரிச்சர்டு ஓவன் அவர்கள் டயன்சோர் எனப் பெயர் சூட்டக் காரணம் அதன் கொடிய பற்களும் அது ஊட்டிய அச்சத்தாலும் அல்ல, ஆனால் அது வாழ்ந்த காலத்தில் அது எத்தனை வியப்பூட்டும் பெரிய விலங்காக இருந்திருக்கும் என்னும் பெருமை கருதி கொடும்பெரும்பல்லி என்று பொருள் தரும் டயனசோர் எனப் பெயரிட்டார் ,
தொன்மாக்கள் மிகப்பல விதமான இனங்களைச் சேர்ந்த விலங்குகள் ஆகும். 2006ல் நடத்திய ஆய்வின்படி குறைந்தது கட்டாயம் 527 வெவ்வேறு தொன்மா (டயனசோர்) இனங்கள் உள்ளன. ஆனால் மொத்தம் 1844 தொன்மா இனங்கள் இருந்திருக்கக்கூடும் என கணிக்கின்றனர்
தொன்மாக்களில் சில இனங்கள் இலையுணவு (மரஞ்செடி கொடி உணவுகள்) உண்பனவாகவும், சில ஊனுண்ணிகளாகவும்இருந்தன. சில இருகால்களில் நடப்பனவாகவும், சில நான்கு கால்களில் நடப்பனவாகவும், அம்மோசோரஸ் இகுவானடோன்போன்ற சில தொன்மாக்கள் தேவைக்கேற்றார் போல இருகால்களிலுமோ அல்லது நான்கு கால்களிலுமோ நடக்கவல்லவனவாய் இருந்தன. இன்று அறியப்பட்ட எல்லா தொன்மாக்களும் ஏறத்தாழ நிலத்தில் தரை மீது வாழ்ந்தனவே; நீருள்ளோ, பறந்தோ வாழவில்லை.

உருவ பரும வேறுபாடுகள்


அளவை ஒப்பிட்டுப் பார்க்க டிப்லோடோகஸ்என்னும் தொன்மாவும் மனிதனும்

அளவை ஒப்பிட்டுப் பார்க்கஇயோராப்டர் என்னும் தொன்மாவும் மனிதனும்.
சோராப்போடா போன்ற சில தொன்மாக்கள் இன்றுள்ள திமிங்கிலம் போன்ற ஒரு சில விலங்குகளைத் தவிர மற்ற எல்லாவிலங்குகளைக் காட்டிலும் மிக மிகப்பெரியதாக இருந்தன. நீலத் திமிங்கிலம் என்பது 190,000 கிலோ.கி (209 டன்) எடை கொண்டதாகவும் 33.5 மீட்டர் (110 அடி) நீளம் கொண்டதாகவும் இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். தொன்மாக்களை ஒப்பிட இன்றுள்ள யானை கூட மிகமிகச் சிறியதாகத் தென்படும்.
பெரும்பாலான தொன்மாக்கள் சோராப்போடா போல் பெரியன அல்ல. சராசரியாக பெரும்பாலான தொன்மாக்கள் 500 கிலோ.கி எடையுள்ளனவாக இருந்ததாக கணக்கிடுகின்றனர். தொன்மாக்களில் 63 இனங்களின் சராசரி எடை 850 கிலோ.கி எனவும் அமெரிக்காவின் கிரிஸ்லி கரடி அளவினதே என்றும் கணக்கிட்டுள்ளனர். தொன்மாக்களில் சரி பாதியானவை 2 டன் எடைக்கும் குறைவானதே என்கின்றனர். இன்றுள்ள பபலூட்டிகளின் சராசரி எடை 1 கிலோ கிராமுக்கும் குறைவானதே (863 கிராம்)

தொன்மாக்களின் சிறப்பான உடலமைப்புகள்

இன்றுவரை நிகழ்ந்துள்ள எராளமான கண்டுபிடிப்புகளை கணக்கில் கொண்டால் எல்லாத் தொன்மாக்களுக்கும் பொருந்தி வரும் பொது அமைப்புகள் அரிதாகிவந்தாலும், ஏறத்தாழ எல்லா தொன்மாக்களுமே மிகுதொல் இனமாகியஆர்க்கியோசோர்-வகையான எலும்பு அமைப்பின் மாறுதலாகவே உள்ளன.


Post Comment


2 comments:

Anonymous said...

you are copying from ta.wikipedia.org.
nalla copy adinga aana nalla edit mattum pannidathinga

Dileep said...

Anonymous @ விக்கிபீடியா இருக்கு தகவல் பெற்று கொள்ள தான்..
யாரும் பிறக்ககேயே தகவல தெரின்சு கொண்டு பிறக்குறது இல்ல….
நீங்க என்னமோ ஒரடியா வானத்துல இருந்து குதிச்ச மாதிரி கதைக்கிறின்க….
உங்கட அறிவ நினைச்சு அழுறத சிரிக்குறத என்டு எனக்கு தெரியல

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.