சர்வதேச அளவில் மிகச்சிறந்த கோல்கீப்பர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஜெர்மனியின் ஆலிவர் கான்.
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றியிலேயே தங்கப் பந்து விருது வென்ற ஒரே கோல் கீப்பர் இவர்தான். 2002-ம் ஆண்டு உலகக் கோப்பையில் ஆலிவர் கான் இந்தப் பெருமையைப் பெற்றார்.
ஜெர்மனியில் 1969-ம் ஆண்டு பிறந்த ஆலிவர் ரூல்ஃப் கான் சிறுவயது முதலே கால்பந்தின் காதலரானார். 1987-ம் ஆண்டில் ஜெர்மனியில் மிகவும் புகழ்வாய்ந்த கார்ஸ்ருஹே கிளப்பில் அவர் விளையாடினார். அப்போது முதல் அவர் சிறந்த கோல் கீப்பராக ஜொலிக்கத் தொடங்கினர். அவரைத் தாண்டி கோல் அடிப்பது என்பது எதிரணி வீரர்களுக்கு பெரும் சவாலாக அமைந்தது.
அந்த காலகட்டத்தில், ஆலிவர் கான் தடுத்த கோல்களினாலேயே அவர் பங்கேற்ற அணி அதிகம் வெற்றி பெற்றது.
1994-ம் ஆண்டில் அவர் ஜெர்மனி அணியில் இடம் பிடித்தார். 1995-ல் சுவிட்சர்லாந்துக்கு எதிராக தனது முதல் சர்வதேசப் போட்டியில் களம் இறங்கினார். எனினும் அதிக ஆட்டங்களில் அவர் மாற்று ஆட்டக்காரராகவே விளையாடினார். இதனால் அவரது முழுத்திறமையையும் வெளிப்படுத்த முடியாமல் போனது.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் அணியின் கேப்டனாக உயர்ந்தார். 2002-ம் ஆண்டில் அவரது தலைமையில் ஜெர்மனி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. ஆனால் இறுதி ஆட்டத்தில் பிரேசிலிடம் (2-0) வெற்றி வாய்ப்பை இழந்தது.
எனினும், தங்கக் கால்பந்து விருது வெல்லும் முதல் கோல்கீப்பர் என்ற பெருமையை அப்போது ஆலிவர் கான் பெற்றார். உலகக் கோப்பையின் போது சிறந்த கோல் கீப்பர்களுக்கு வழங்கப்படும் யாசின் விருதும் அவருக்கு கிடைத்தது.

0 comments:
Post a Comment