
முக்கோண ஒருநாள் கிரிக்கட் போட்டித் தொடரில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
சிம்பாப்வேக்கு எதிராக இன்றைய தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணி 09 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது.
ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற இன்றைய இறுதிப் போட்டியில் இலங்கை அணியின் தலைவர் டில்சான் நாணய சுழற்சியில் வெற்றியீட்டினார்.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய அணித் தலைவர் டில்சான் முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தார்.
இதன்படி முதலில் களமிறங்கிய சிம்பாப்வே அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 49 ஓவர்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 199 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.
இதில் அணியின் துடுப்பாட்ட வீரர் தாய்பு 71 ஓட்டங்களையும், லம்ப் 37 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் பெர்னான்டோ 03 விக்கெட்டுகளையும், ஜீவன் மெண்டிஸ் மற்றும் அஜந்த மெண்டிஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 34.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 203 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
இதில், அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய அணி தலைவர் தில்சான் 108 ஓட்டங்களையும், தரங்க 72 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
மிக அபாரமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி தனது 07 ஆவது சதத்தைப் பெற்றுக் கொண்ட அணி தலைவர் தில்சான் போட்டியின் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.

போட்டித் தொடரின் ஆட்ட நாயகனாக சிம்பாப்வே அணியின் வீரர் டெய்லர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment