இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான ஆசியக்கிண்ண இறுதிப் போட்டித் தொடரில் நடப்பு சாம்பியனான இலங்கை அணியை இந்திய அணி இலகுவாக வெற்றி கொண்டது.
இன்றைய போட்டியில் இலங்கை அணி நடப்பு சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள போராட்டத்தை நடத்தும் என்பதோடு கடந்த போட்டியில் பந்து வீச்சில் பிரகாசித்த பர்விஸ் மஹ்ரூப் இன்றைய போட்டியிலும் தனது அதிரடி பந்து வீச்சியை தொடருவார் எனவும் கடந்த போட்டி தொடரில் இலங்கை தொடர்ந்து வெற்றிப் பெற்றதொடு இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று ஹெட்ரிக் சாதனையை தக்கவைத்துக் கொள்ள போராட வேண்டிய நிலையிலும் களமிறங்கியது.
இந்நிலையில் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான விரேந்த nஷ்வாக் கடந்த போட்டியின் போது உபாதைக்குள்ளானதால் இன்றைய போட்டியில் களமிறங்கவில்லை எனவே இன்றை போட்டி பெரும் சவாலுக்கு மத்தியில் நடைபெற்றது.
இருப்பினும் எல்லா சவால்களையும் முறியடித்து இந்திய அணி இலங்கை அணியை இலகுவாக வெற்றி கொண்டது.
இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 268 ஓட்டங்களை பெற்றது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய கம்பீர் கடந்த போட்டிகளில் நிதானமாக துடுப்பெடுத்தாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரிப்பதில் பெரிதும் பங்கு வகித்து இருந்தார். எனவே இன்றைய போட்டியிலும் தனது துடுப்பாட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் 15 ஓட்டங்களுடன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்து சென்றார். மறு புறத்தில் இருந்த கார்த்திக் தொடர்ந்து சிறப்பாக துடுப்பெடுத்தாடி 84 பந்துகளில் 09 நான்கு ஓட்டங்களை பெற்று 66 ஓட்டங்களை பெற்றதன் மூலம் ஒரு நாள் போட்டியில் தனது 04 ஆவது அரைச் சதத்தை பெற்று ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய கோலி 28 ஓட்டங்களுடனும், அணி தலைவர் தோனி 38 ஓட்டங்களுடனும், இறுதிவரை போராடி சர்மா 41 ஓட்டங்களையும், ரெய்னா 29 ஓட்டங்களுடனும், ஜடேஜா 25 ஓட்டங்களுடனும் ஆட்மிழந்தனர்.
பந்து வீச்சில் மாலிங்க, கண்டம்பி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிருந்தனர்.
269 எனும் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 00 ஓட்டங்களைள பெற்று தோல்வியை தழுவியது.
துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய டில்சான் இப் போட்டியில் சிறந்த துடுப்பாட்டத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட போது ஓட்டம் எதுவும் பெறாது பரவின் குமார் பந்து வீச்சில் ஹர்பதான சிங்கிடம் பிடி கொடுத்து வந்த வேகத்தில் மீண்டும் திரும்பிச் சென்றார்.
மறு புறத்தில் களமிறங்கிருந்த தரங்க 16 ஓட்டங்களுடனும், அணி தலைவர் குமார் சங்ககார 17 ஓட்டங்களுடனும், ஜெயவர்த்தன 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக பிரகாசித்த மெத்யூஸ் இப் போட்டியில் ஓட்டம் எதுவும் பெறாது நெஹராவின் பந்து வீச்சில் தோனியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். எனவே ஒரு கட்டத்தில் இக்கட்டான நிலையில் இருந்த இலங்கை அணிக்கு வலுகொடுக்கும் வகையில் கண்டம்பி மற்றும் கப்புகெதர ஆகியோர் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய போதும் கண்டம்பி 31 ஓட்டங்களை பெற்றிருந்த போது ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்து சென்றார்.
இந்நிலையில் கப்புகெதரவும் 00 ஓட்டங்களுடன் தனது 06 ஆவது அரைச்சதத்தை பெற்று ஆட்டமிழக்க, மஹ்ரூப் 10 ஓட்டங்களுடனும், குலசேகர 20 ஓட்டங்களுடனும், மாலிங்க 07 ஓட்டங்களுடனும், முரளிதரன் 02 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க இலங்கை அணி இந்திய அணியிடம் 18 ஓட்ட எண்ணிக்கை வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை சுவிகரித்துக் கொண்டது.
இந்திய அணியின் பந்து வீச்சில் அசிஸ் நெஹரா சிறப்பாக பந்து 04 விக்கெட்டுகளையும்,சகிர் கான் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 02 விக்கெட்டுகளையும் கைப்பற்றிருந்தனர். எனவே இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணி வீரர் கார்த்திக் தெரிவு செய்யப்பட்டதோடு, தொடரின் ஆட்ட நாயகனாக பாகிஸ்தான் அணியின் தலைவர் அப்ரிடி தெரிவு செய்யப்பட்டார். ,
0 comments:
Post a Comment