உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் இரண்டாவது சுற்று ஆட்டத்தில், பாரகுவே 5-3 என்ற கோல் கணக்கில் பெனால்டிக் மூலம் ஜப்பானை வீழ்த்தி உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் முறையாக கால்இறுதி போட்டிக்கு முன்னேறியது.
உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி பிரிட்டோரியாவில் நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் ஜப்பான்-பாரகுவே அணிகள் மோதின. ஏற்கனவே ஆசியாவை சேர்ந்த தென்கொரியா இரண்டாவது சுற்றில் உருகுவேயிடம் தோல்வி கண்டு வெளியேறி விட்டது. இறுதியாக ஜப்பான் மட்டுமே எஞ்சியிருந்தது. இந்த இரு அணிகளுமே 80 ஆண்டுகால உலகக் கிண்ண வரலாற்றில் கால் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது இல்லை.
போட்டி ஆரம்பமானதும் விறுவிறுப்பாக இருந்தது. ஆனால் இரு அணிகளுமே கோல் அடிப்பதில் கோட்டை விட்டன. இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக அமையவில்லை. 90 நிமிட ஆட்டத்திலும் கோல் அடிக்காததால் கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது.
கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. எனவே வெற்றி தோல்வியை தீர்மானிக்க பெனால்டிக் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் பாரகுவே அணி 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஜப்பான் வீரர் யூச்சி கானமோ அடித்த பெனால்டி கோல்கம்பத்தில் மோதி வெளியேறியது ஆசியாவின் இறுதி நம்பிக்கையை தகர்த்தது.
பரகுவே வீரர்கள் பாரட்டோ, பாரியாஸ் ,ரிவெரோஸ்,வால்டெஸ்,கார்டஸ் ஆகியோர் 5 வாய்ப்புகளையும் கோலாக்கினர். ஜப்பான் அணியில் யாஷிதோ ஈன்டோ,மகாதோ ஹசாபி,கவாஷிகி ஹோண்டா ஆகியோர் கோல் அடித்தனர். வெற்றி கண்ட பரகுவே அணி உலகக் கிண்ண போட்டியில் முதல் முறையாக கால் இறுதிக்கு முன்னேறி உள்ளது. இதனால் பாரகுவேயில் உற்சாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ,
0 comments:
Post a Comment