செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா? இல்லையா? என்ற சர்ச்சை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதுகுறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஹலோ ரொபோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் வெளியிட்ட செவ்வாய் கிரகத்தின் படங்களை வைத்து ஆய்வு மேற்கொண்டனர்.
இவை தவிர ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்க செயற்கை கோள் வெளியிட்ட தகவல்கள் மூலமும் ஆராய்ச்சி செய்தனர்.
இவை தவிர ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்க செயற்கை கோள் வெளியிட்ட தகவல்கள் மூலமும் ஆராய்ச்சி செய்தனர்.
இதன் மூலம் 350 கோடி ஆண்டுகளுக்கு முன்பே செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உருவாகி இருக்க வேண்டும் என்ற கருத்து தெரிவித்துள்ளனர். இங்கு வடக்கு துருவத்தில் அட்லாண்டிக் கடல் அளவுக்கு தண்ணீர் இருக்கிறது. இது பூமியில் உள்ள அளவுக்கு சமமானதாகும்.
மேலும் அங்கு 54 ஆறுகளின் டெல்டா படுகைகள் உள்ளன. இதனால் அங்கு ஆறுகள் உற்பத்தியாகி ஓடிக்கொண்டிருக்க வாய்ப்பும் உள்ளது என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 comments:
Really
Post a Comment