அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

Victors stay word perfect


ஆப்பிரிக்க சிங்கம் என்று வருணிக்கப்படும் காமரூன் அணி ஜப்பானிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது. உலக கிண்ண கால்பந்து போட்டியில் புளுயம்பான்டைன் நகரில் இன்று நடந்த இ பிரிவு ஆட்டம் ஒன்றில் ஆசியாவை சேர்ந்த ஜப்பான் அணியை ஆப்பிரிக்க சிங்கம் காமரூன் சந்தித்தது.


இரு அணியிலுமே நட்சத்திர வீரர்கள் இருந்தாலும் காமரூனின் இன்டர்மிலான் 'ஸ்டிரைக்கர்' சாமுவேல் ஈடோ பெரிதும் எதிர்பார்க்கப்பட்டார் காமரூனின் முன்களம் ஈடோவை நம்பியே சுழலும்.கிளப் ஆட்டங்களில் ஜொலிக்கும் சாமுவேல் ஈடோ தாய்நாட்டுக்காக ஆடும் போது சோடை போய்விடுகிறார் என்று அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் ரோஜர் மில்லா உலக கிண்ணத்துக்கு முன் விமர்சனம் செய்திருந்தார். இந்த விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் ஈடோவுக்கு இருந்தது.

பரபரப்பாக தொடங்கிய ஆட்டம் ஒரு கட்டத்தில் மந்தநிலை அடைந்தது. கடமைக்கு இரு அணி வீரர்களும் ஆடினார்கள்.ஜப்பான் வீரர்கள் கொஞ்சம் பரவாயில்லை. அவ்வப்போது காமரூன் கோல் கம்பத்தை அவர்கள் முற்றுகையிட்டனர். முதல் பாதியில் 39ஆவது நிமிடத்தில் ஜப்பான் முதல் கோல் அடித்து முன்னிலை பெற்றது. மாட்சூயி கொடுத்த பாசை பெற்ற ஹோண்டா எளிதாக அதனை கோலாக மாற்றினார்.முதல் பாதி ஜப்பான் முன்னிலையுடன் முடிவுற்றது.

பிற்பாதி ஆட்டம் துவங்கியதும் காமரூன் வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தினார்கள். தொடர்ந்து ஜப்பான் கோல்கம்பத்தை முற்றுகையிட்ட வண்ணம் இருந்தனர். 86ஆவது நிமிடத்தில் காமரூன் வீரர் மபியா அடித்த பந்து இடது கோல்கம்பத்தில் மோதி வெளியேறியது. கொஞ்சம் கீழே சென்றிருந்தாலும் கோலுக்குள் புகுந்திருக்கும் காமரூனுக்கு அதிருஷ்டம் இல்லை என்றே சொல்ல வேண்டும். இறுதி 5 நிமிடங்களில் பதில் கோல் திருப்ப காமரூன் கடும் போராட்டம் நடத்தியது.ஆனால் ஜப்பான் கோல்கீப்பர் கவாஸாகி அத்தனை வாய்ப்புகளையும் அற்புதமாக தடுத்து விட்டார். ஆட்ட நேர இறுதியில் ஜப்பான் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

உலக கோப்பை போட்டியில் வெளிநாட்டு மண்ணில் ஜப்பான் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை.ஏற்கனவே ஆசிய அணியான தென்கொரியா கிரீஸ் அணியை தோற்கடித்துள்ளது. இப்போது ஜப்பானும் வெற்றி பெற்றிருப்பது ஆசியாவின் நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. 

Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.