
ரஸ்டன்பர்க் (தென் ஆப்பிரிக்கா): யானைகளால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில்அமெரிக்க கால்பந்து அணியினர் சிக்கிக் கொண்டனர்.
ரஸ்டன்பர்க்கில் அமெரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையிலான போட்டி இன்று நடைபெறுகிறது. இதற்கான பயிற்சிக்காக ரஸ்டன்பர்க், ராயல் பேபோகெங் ஸ்டேடியம் சென்று கொண்டிருந்தனர் இங்கிலாந்து அணியினர்.
அப்போது வழியில் இரு இடங்களில் யானைகள் குறுக்கிட்டதால் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியில் அவர்களது பயணம் தடைபட்டது.
தாங்கள் தங்கியிருந்த பேக்கன்பங் புஷ் லாட்ஜிலிருந்து அவர்கள் கிளம்பியபோது வழியில் முதல் தடவையாக யானை ஒன்று குறுக்கிட்டு மரத்தைப் பிடித்து உலுக்கியதால் வாகனம் தொடர்ந்து செல்வது தடைபட்டது. கிட்டத்தட்ட நான்கு நிமிடங்கள் அவர்களது வாகனம்போக முடியாமல் நின்றிருந்தது.
யானையின் சேஷ்டையைப் பார்த்த அமெரிக்க வீரர்கள், அதை தங்களது டிஜிட்டல் கேமராக்கள், செல்போன்கள் மூலம் ஆர்வத்துடன் படம் பிடித்தனர்.
அதேபோல, மீ்ண்டும் ஒரு முறை யானை குறுக்கிட்டு அவர்களது பயணத்தை தடுத்தது. இருப்பினும் இதனால் அமெரிக்க வீரர்கள் டென்ஷனாகவில்லை. மாறாக யானைகளின் குறும்புத்தனத்தை வாகனத்திலிருந்தபடி ரசித்தனர் என்று அமெரிக்க அணியின் பயிற்சியாளர் பாப் பிராட்லி தெரிவித்தார்.
0 comments:
Post a Comment