மூணார் மலைப்பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் ஆவிகள் இருப்பதாக நம்பப்படுகிறது. அந்த வீட்டுக்கு செல்லும் பலர் மர்மமாக சாகிறார்கள். அங்கு ஆவிகள் இருக்கிறதா என்பதை கண்டுபிடித்து சொல்லும்படி ஆவி ஆராய்ச்சியாளர் சதிஷ்.ஜியை அவ்வீட்டின் உரிமையாளர் அனுப்பி வைக்கிறார்.
சதீஷ்.ஜி, ஆவி ஆராய்ச்சி கருவிகளுடன் அந்த வீட்டில் ஒரு இரவு முகாமிடுகிறார். ஆரம்பத்தில் ஆவி அறி குறிகள் தென் படாமல் இருப்பதால் பேய்கள் இல்லை என ஆராய்ச்சிகளை முடிக்கிறார். அதன் பிறகு பயங்கர சத்தங்கள் கேட்கிறது. வீட்டுக்கு வெளியே திடீர் ஒளி பரவுகிறது. இதனால் அதிர்ச்சியாகிறார். ஆராய்ச்சியை மீண்டும் தொடர்கிறார். அதன் பிறகு நடப்பவை குலைநடுங்க வைக்கின்றன.
ஆவி ஆராய்ச்சிக்கு போய் சதீஷ்.ஜி சாவது போலீஸ் அதிகாரிகளின் பேட்டிகளுடன் டி.வி. நிகழ்ச்சியாக விரிகிறது. அதன் பிறகு சதீஷ்.ஜி, தான் எப்படி இறந்தேன் என்று விளக்குவது போல் சீன்கள் நகர்கின்றன.
சுற்றிலும் கும் இருட்டில் காட்டு பங்களாவுக்குள் அவர் ஆவி ஆராய்ச்சி செய்வது திக்... திக்... காரில் விளக்குகள் பிரகாசிப்பதை பார்த்து ஓடிப்போவதும் காருக்குள் இருப்பவன் ஆவி பார்க்க வந்திருக்கியா திரும் பிப்போ என்று மிரட்டி விட்டு மறைவதும் பயம்.
ஏற்கனவே ஆவி ஆராய்ச்சிக்கு வந்து பலியானவர்களின் வீடியோ கேமராவை கைப்பற்றி அவர்கள் எப்படி செத்தார் கள் என்பதை பார்க்கும்போது நடுக்கம்...
கிளைமாக்சில் ஆவியிடம் சிக்கி சதீஷ்.ஜி அலறுவது இதய துடிப்பை எகிற வைக்கிறது.
ரத்தம், அகோர உருவங்கள் என வழக்கமான பேய் படங்களில் இருந்து வித்தியாசப்படுத்தி காட்சிகளை திகிலாக நகர்த்துகின்றனர் இயக்குனர்கள் ஹரி ஷங்கர், ஹரிஷ் நாராயண், கிருஷ்ணசேகர், ஒற்றை பங்களா, காடு, இருட்டு, ஆவி என கடைசி வரை பயத்தோடு கட்டி போடுகின்றனர். டி.வி. நிகழ்ச்சி மூலம் கதையை பிளாஷ்பேக்கில் நகர்த்துவது சிறப்பு.
ஆவியால் அமானுஷ்ய ஆராய்ச்சியாளர்கள் சாக டிக்கப்படும் சீன்களில் தெளிவு இல்லாமல் குழப்பமாய் இருப்பதை தவிர்த்திருக்கலாம். வசனங்களும் சில இடங்களில் புரியவில்லை.
டி.வி. நிருபராக வரும் ஹெவன் திகா யதார்த்தமாய் பளிச்சிடுகிறார். ஆஷா, இந்திரா, அஜய், ஆனந்த், சந்திரசேகர் ஆகியோரும் உள்ளனர்.
கே. வெங்கட்பிரபு ஷங்சர் இசை, சதீஷ்.ஜி ஒளிப்பதிவு பலம் சேர்க்கின்றன.
0 comments:
Post a Comment