
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 48 ஆண்டுகளுக்குப்பின் சிலி அணி தனது வெற்றியைப் பதிவு செய்தது.
நெல்ஸ்புரூட்டில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஹோண்டுராஸ் அணியை சிலி 1-0 என்ற கோல்கணக்கில் வென்றது.
இந்த ஆட்டம் தொடங்கியது முதலே பரபரப்பாக இருந்தது. பந்து இரு அணி வீரர்களிடமும் மாறிமாறி சென்றது. ஆட்டத்தின் 5-வது நிமிஷத்திலேயே சிலி வீரர் கார்மோனா மஞ்சள் அட்டை எச்சரிப்புக்கு உள்ளானார்.
தொடர்ந்து முரட்டு ஆட்டம் ஆடியதாக சிலியின் பெர்ணான்டஸýம் நடுவரால் எச்சரிக்கப்பட்டார். கோல் அடிக்கும் முயற்சியில் முதலில் சிலி வெற்றி பெற்றது. இந்த அணியின் ஜீன் பிஸýஜெர், தனக்குக் கிடைத்த வாய்ப்பை அருமையாகப் பயன்படித்து கோலாக்கினார். 34-வது நிமிடத்தில் இந்த கோல் அடிக்கப்பட்டது. இதன் மூலம் முதல்பாதியில் சிலி 1-0 என்ற கோல்கணக்கில் முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் ஹோண்டுராஸ் அணியினர் கோல் அடிக்க கடுமையாக முயற்சி மேற்கொண்டனர். எனினும் சிலி வீரர்களின் சிறப்பான தடுப்பு ஆட்டத்துக்கு முன் அவர்களின் முயற்சி பலிக்கவில்லை. இறுதியில் 1-0 கோல் கணக்கில் சிலி வென்றது.
இதன் மூலம் உலகக் கோப்பை கால்பந்தில் 48 ஆண்டுகளுக்குப் பின் சிலி தனது மற்றொரு வெற்றியைப் பதிவு செய்துள்ளது. முன்னதாக 1962-ம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்தில் யுகோஸ்லாவியாவை வென்றதே சிலி பெற்ற கடைசி வெற்றியாக இருந்தது.
0 comments:
Post a Comment