அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

மனிதனுடைய மூளைக்கு அடங்கிய கம்ப்யூட்டர்  இயங்கினாலும் மனித மூளையைவிடப் பன்மடங்கு ஆற்றலுடன் கம்ப்யூட்டர்  செயல்படுகிறது.
மனித மூளையை விடதட தீவிரமாக வேலை செய்யும் கம்ப்யூட்டர் கள் தொழிற்சாலைகளில் இயந்திரங்களின் இயக்கங்களை ஒருங்கிணைத்து அவற்றைக் கட்டுப்படுத்துகின்றன.




மனித மூளை செயல்படுவதைத் துல்லியமாக விளக்க முடியாது. கம்ப்யூட்டர்  செயல்படுவதை விளக்க முடியும்.மூளையில் பதிவாகியிருக்கும் எல்லா தகவல்களையும் பயன்படுத்த முடியாது.பல தகவல் அடி மனதில் பதிவாகி இருக்கும்.அவற்றை எளிதில் 
மீட்டுக் கொண்டு வர முடியாது. கம்ப்யூட்டர் நினைவகத்தில் பதிவாகியுள்ள எந்தத் தகவலையும் எந்த நேரத்திலும் மீட்டுக் கொண்டு வரமுடியும்.அது முழுமையானதாகவும் இருக்கும்.இந்த வகையில் மனித மூளையை விடக் கம்ப்யூட்டரே சிறந்தது என்று கூறலாம்.




மனித மூளை தன் நினைவில் உள்ள ஒன்றை சற்று மாறுபட்டாலும் கூட இனங் கண்டு கொள்ளும். கம்ப்யூட்டரினால் அது முடியாது.மூளை செயல்படுவதற்குத் தேவையான ஆற்றல் முழுவதும் மூளையிலேயே உற்பத்தி செய்து கொள்ளப்படுகிறது. கம்ப்யூட்டர்  இயங்குவதற்கு தேவையான ஆற்றலை வெளியிலிருந்து நாம் கம்ப்யூட்டருக்குக் கொடுக்க வேண்டும்.


செயற்கை நுண்ணறிவு


கம்ப்யூட்டரில் பிழை மிகச் சிறிய அளவில் ஏற்பட்டு விட்டாலும் அவை வெளியிடும் தகவல்கள் முடிவுகள் அர்த்தமில்லாதவையாக இருக்கும். ஆனால் மனித மூளையில் சிறு சிறு தவறுகளினால் பெரும் பிழைகள் ஏற்பட வாய்ப்பில்லை.


கம்ப்யூட்டர் தானாகச் சிந்தித்து ஒரு சிக்கலுக்கு முடிவெடுக்கும் திறன் அற்றதாக இருக்கின்றது.ஆனால் மனிதனின் அன்றாட செயற்பாட்டில் சூழ்நிலை பணியின் தன்மை முதலியவற்றிற்கேற்ப சிந்தித்து செயற்படுதல் முக்கியமாகிறது.


இத்தகைய சூழ்நிலைகளில் பல இலட்சம் கட்டளைகளை ஒரு வினாடியில் செயற்படுத்தும் ஆற்றல் கொண்ட கம்ப்யூட்டரின் செயல் வேகமோ பல இலட்சம் செய்திகளைப் பதிவு செய்யும் நினைவக வசதியோ உதவியாக இருப்பதில்லை.



மனித மூளையைப் போன்று சிந்தித்துச் செயலாற்றும் நுண்ணறிவு கம்ப்யூட்டருக்குத் தேவைப்படுகிறது. கம்ப்யூட்டரில் பயன்படுத்துகிற இந்த மனித நுண்ணறிவினை நாம் செயற்கை நுண்ணறிவு என்கிறோம்.


செயற்கை நுண்ணறிவுத் திறனின் மூலம் உயிரற்ற கருவியாகிய கம்ப்யூட்டரை மனிதனைப் போன்று சிந்தித்துச் செயற்படுத்துவதற்கேற்ப நுண்ணறிவு வாய்ந்த கருவியாக வடிவமைக்க முடியும்.


இவ்வகையான கணிப்பொறிகள் மனிதனின் ஜம்புலன்களின் செயல்திறான பார்த்தல் கேட்டல் தொடு உணர்ச்சி பேசுதல் முதலிய அனைத்தையும் பெற்று விளங்கும்.


இயந்திர மனிதர்களுக்கு இந்த செயற்கை நுண்ணறிவினைக் கொடுத்து மனிதர்களைப் போலவே படங்களையும் செய்திகளையும் காட்சிகளையும் தனது நினைவகத்தில் வைத்துகொள்ளவும் செய்யலாம்.


இன்னும் சில ஆண்டுகளில் மனிதனைப் போன்று சிந்தித்து செயல்படும் செயற்கை நுண்ணறிவு வாய்ந்த கணணிகள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இவ்வகையான கணணிகள் பயன்பாட்டிற்கு வரும்பொழுது கற்பனைக்கெட்டாத பல கடினமான பணிகளையும் மனித முயற்சியால் இதுவரை முற்றிலும் முடியாமல் போன பல ஆராச்சிகளையும் வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும். 


Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.