ஃபேஸ்புக் (Facebook) 2004இல் தொடங்கிய இணையவழி சமூக வலையமைப்பு நிறுவனமாகும். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவர் மார்க் சக்கர்பர்க்ஹார்வர்ட் மாணவர்களுக்கு ஆரம்பித்து பின்பு வேறு ஐவி லீக் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அனுமதி கிடைத்தது.
இன்றைய ஃபேஸ்புக்கில் 13 வயதான நபர்கள் சேரலாம். அலெக்சா நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இணைய முழுவதிலும் ஃபேஸ்புக் தான் ஐந்தாம் மிகப் பரவலமா இணையத்தளமாகும்.தமிழ் உட்பட உலகமொழிகள் பலவற்றில் பேஸ்புக்கில் வலம் வரலாம்.டஸ்டின் மாஸ்கோவிட்ஸ்,
செரில் சான்ட்பர்க்,
உங்கள் வீட்டில் கம்ப்யூட்டர் இருக்கிறதா? அதில் இணைய வசதி செய்யப்பட்டு இருக்கிறதா? வயதுக்கு வந்த பிள்ளைகள் உங்க ளுக்கு இருக்கிறார்களா? அவர்களிடம் கேட்டுப் பாருங்கள்... அவர்கள் நிச்சயம் 'ஃபேஸ்புக்' பயன்படுத்துபவராக இருப்பார்கள். அந்த அளவுக்கு இந்த 'சோஷியல் நெட்வொர்க்கிங்' இணைய தளம் இளைஞர்களிடையே பிரபல மாகி வருகிறது. இளைஞர்கள் மட்டுமல்ல... அனைத்துத் தரப்பினரும் இதன் உறுப்பினர் களாக இருக்கிறார்கள். இந்தியாவில் மொபைல் போன் பயன்பாட்டுக்கு அடுத்தபடியாக வெகுவேகமாகப் பரவி வரும் விஷயம் இந்த ஃபேஸ்புக் தான்!செரில் சான்ட்பர்க்,
டைப் அடிக்கத் தெரியாத முதியவர்களும் இன்று கணினியைப் பயன்படுத்தியாக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். நமது நாட்டின் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி, கணினிப் பயன்பாட்டை அதிகரித்துக்கொண்டே போகிறது. மொபைல் போன் அளவுக்கு கணினிப் பயன்பாடு
இல்லையென்றபோதிலும் ஒப்பீட்டளவில் இதன் வளர்ச்சி அபாரமானதாகவே இருக்கிறது. கிராமப்புறங்களில் உள்ள இளைஞர் களும்கூட மின்னஞ்சல் முகவரி ஒன்று வைத்திருக்க வேண்டும் என்பது இன்றைய எதார்த்தமாக மாறியுள்ளது. வேலைக்காக விண்ணப்பிக்கின்ற எவரும் தன்னுடைய பயோடேட்டாவில் இப்போது அஞ்சல் முகவரியோடு மின்னஞ்சலையும், மொபைல் போன் எண்ணையும் தவறாமல் குறிப்பிடுவதைப் பார்க்கிறோம்.
'வரலாறு'
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர் மார்க் ஸுக்கர்பெர்க் என்பவரால் யதேச்சையாக உருவாக்கப்பட்டதுதான் இந்த ஃபேஸ்புக். தன்னை கைவிட்டுப்போன காதலியின் நினைவிலிருந்து மீள்வது எப்படி என்று ஒரு நாள் இரவு யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த ஐடியா அவருக்கு வந்தது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு வழக்கம் உண்டு. அங்கு பயிலும் மாணவர்கள், வேலை செய்யும் ஆசிரியர்கள் தொடர்பான விவரங்கள் அச்சிடப்பட்ட புத்தகம் ஒன்றை மாணவர்களுக்கு அந்தப் பல்கலைக்கழக நிர்வாகம் கொடுத்து வந்தது. அந்தப் புத்தகத்தை மாணவர்கள் ஃபேஸ்புக் என்று குறிப்பிடுவது வழக்கம். இந்த ஐடியாவைத்தான் ஸுக்கர்பெர்க் எடுத்துக் கொண்டார். தனது சக மாணவர்களான எட்வர் டோ சவேரின், டஸ்டின் மொஸ்கோவிட்ஜ், கிறிஸ் ஹ்யூக்ஸ் ஆகியோரை சேர்த்துக் கொண்டு இணைய தளம் ஒன்றை அவர் உருவாக்கினார். முதலில் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமே அதில் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பிறகு மற்ற கல்லூரி மாணவர்களும் அனுமதிக்கப்பட்டனர். அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இப்போதோ 13 வயதுக்கும் மேற்பட்ட எவரும் இதில் உறுப்பி னராக முடியும். அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் முகவரி மட்டும் இருந்தால் போதும்.
காதலில் மனம் உடைந்த இளைஞனால் விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த இணைய தளம், இப்போது அவனை உலகின் முக்கியமான பணக்காரர்களில் ஒருவனாக ஆக்கி இருக்கிறது. அது நம் காலத்தின் (காதலின்?) அதிசயம் என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் ஆறே வருடங்களில் இந்த பிரமாண்ட அதிசயம் நடந்திருக்கிறது. இன்று இந்த இணைய தளத்தை வாங்குவதற்கு உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் போட்டி போடு கின்றன. வணிகரீதியில் மதிப்பு வாய்ந்த எம்.டி.வி. நிறுவனத்துக்கு இணையாக வாங்குவதற்கு போட்டி போடப்படும் கம்பெனிகளில் ஒன்றாக ஃபேஸ்புக் இருக்கிறது. இதில் உலகப்புகழ் பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது. இவ்வளவுக்கும் ஃபேஸ்புக் லாபம் குவிக்கும் நிறுவனமாக இல்லை. 2009-ம் ஆண்டில்தான் முதன்முதலாக அது லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறியது. ஆனால், அதற்கு முன் பிருந்தே இவ்வளவு போட்டி!
'மக்கள் ஏன் விரும்புகிறார்கள்?'
ஃபேஸ்புக் போன்ற சோஷி யல் நெட்வொர்கிங் தளங்களை மக்கள் ஏன் விரும்புகிறார்கள்? மனித உறவுகள் பலவீனம் அடைந்து வரும் இன்றைய உலகில் மனிதர்கள் தீவுகளாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள். பழைய காலத்தைப்போல குடும்பம் என்பது வலுவான அமைப்பாக இப்போது இல்லை. குடும்ப உறவுகள் சிதைந்து கொண்டிருக்கின்றன. இதனால், தனித்து விடப்பட்ட மனிதர்கள் உறவுகளைத் தேடி அலைகிறார்கள். உறவின் பொறுப்புகளை எடுத்துக்கொள்ளாமல், பயன்களை மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிற நவீன மனிதர்களுக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம்தான் இத்தகைய இணைய தளங்கள். இவற்றில் நீங்கள் உங்களது உணர்வுகளை நினைத்த நேரத்தில், நினைத்த விதமாக வெளிப்படுத்தலாம். புதிய நண்பர்களைத் தேடிக்கொள்ளலாம். அவர்களோடு அரட்டை அடிக்கலாம், ஆவேசப்படலாம். புகைப் படங்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.
'எனக்கு இன்று மனசு சரியில்லை' என்று ஒரு செய்தியை இதில் போட்டால் போதும்... குறைந்தது 10 நண்பர்களிடம் இருந்தாவது உங்களுக்கு ஆறுதல் செய்தி வந்துவிடும். நமது பிறந்த நாளை நாமே மறந்துவிட்டாலும்கூட அதை நினைவில் வைத்திருந்து வாழ்த்து சொல்கிற நண்பர்களை ஃபேஸ்புக்கில் பார்க்கலாம்.
நான் ஃபேஸ்புக்கில் உறுப்பினரானவுடன் தமிழ கத்தைக் குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்பது பற்றிப் பிரசாரம் ஒன்றை அதன்மூலம் மேற்கொண்டேன். அதற்காக குழு ஒன்றை அதில் அமைத்தேன். சென்னை குப்பங்கள் பற்றி ஆய்வுசெய்த அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் தன்னிட மிருந்த புள்ளிவிவரங்களை அதன்மூலம் எனக்கு அனுப்பிவைத்தார். அந்தப் பிரசாரத்தைப் பார்த்த சில பத்திரிகையாள நண்பர்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் அதுகுறித்து கட்டுரைகளையும் பேட்டிகளையும் வெளி யிட்டனர். அந்த உற்சாகத்தில்தான் சட்டப்பேரவையில் தொடர்ந்து அந்த விஷயத்தை நான் வலியுறுத்தினேன். இன்று அந்தக் கனவுத் திட்டம் நனவாகிவிட்டது.
ஃபேஸ்புக் என்பது பல்வேறு நிகழ்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கும் பயன்படுகிறது. அதன்மூலம் எளிதில் உங்கள் நண்பர்களை ஒரு நிகழ்வுக்கு அழைத்துவிடலாம். தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் பலர் தங்களது திரைப்படங்கள் பற்றிய செய்திகளை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு விளம்பரப் படுத்தி வருகிறார்கள். தாங்கள் படிக்கும் நல்ல பல கட்டுரைகளை மற்ற நண்பர்களின் பார்வைக்காக ஃபேஸ்புக்கில் போடுவது இப்போது அதிகரித்துவருகிறது. அதற்கேற்ப பத்திரிகைகள் தங்களது இணைய தளங்களை வடிவமைத்துவருகின்றன. ஃபேஸ்புக்கில் நண்பர்களாக இருப்பவர்கள் இப்போது ஏதேனும் ஓர் இடத்தில் கூடிக் குறிப்பிட்ட பிரச்னைகள் பற்றி விவாதிக்கிறார்கள். இப்படியான சந்திப்புகள் இளம் தொழில் முனைவோருக்குப் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகின்றன.
ஃபேஸ்புக் போன்ற தளங்களால் நன்மைகள் மட்டுமின்றி, தொந்தரவுகளும் உண்டு என்பதை மறுப்ப தற்கில்லை. ஃபேஸ்புக்கில் நாம் பகிர்ந்துகொள்கிற விவரங்களை யார் யார் பார்க்கலாம் எனநாமே வரையறுத்துக்கொள்கிற வசதி இருக்கிறது, நம்மு டைய 'ப்ரைவஸி' பாதுகாக்கப்படுகிறது என சொல்லப்பட்டாலும் நாம் அதில் வெளிப்படுத்துகிற விவரங்களை மற்றவர்கள் துஷ்பிரயோகம் செய்யவும் வாய்ப்பிருக்கிறது. அது மட்டுமின்றி, ஃபேஸ்புக்கிலிருந்து நாம் விலகிவிட்டாலும் நாம் வெளியிட்ட தகவல்கள் இணையத்தில் இருந்துகொண்டுதான்இருக்கும். அவற்றை நீக்குவதற்கான வழிமுறைகள் எளிதான வையாக இல்லை. ஆனால், இத்தகைய குறைபாடுகள் ஃபேஸ்புக்கின் பயன்பாட்டை எந்த விதத்திலும் குறைத்துவிடவில்லை. 'அதனால் ஆபத்து... இதனால் தொந்தரவு!' என்று பேசி நம்மை நாமே முடக்கிக் கொள்வதைவிட தொழில்நுட்பம் தரும் அனுகூலங் களையும் சுதந்திரத்தையும் அனுபவிப்பதே புத்திசாலித் தனம்.
0 comments:
Post a Comment