உலகிலேயே மிகப்பெரிய தங்க நாணயம் ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் வரும் 25ம் தேதி ஏலத்துக்கு வருகிறது. டோரோதியம் என்ற ஏல நிறுவனம் ஏலம் விடுகிறது. இந்த நாணயம் உலகப் புகழ்பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதன் விட்டம் 53 செ.மீ., எடை 100 கிலோ கிராம். இந்த நாணயத்தின் ஒரு புறம் இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தின் உருவம் உள்ளது.
கடந்த 2007ம் ஆண்டில் கனடாவில் தயாரிக்கப்பட்ட இதன் மதிப்பு ரூ.4.55 கோடி. இப்போது இந்த நாணயம் ஆஸ்திரியா முதலீட்டு நிறுவனமான ஏவிடபிள்யு வசம் உள்ளது. பல கோடி ரூபாய்க்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment