பலவிதமான அலர்ஜி (ஒவ்வாமை) நோயினால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு அலர்ஜி நோயை குணப்படுத்த தனித்தனி மருந்துகளை டாக்டர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது ஒரே மருந்து மூலம் அனைத்து விதமான அலர்ஜி நோய்களையும் குணப்படுத்தும் ஊசி மருந்தை விஞ்ஞானி டாக்டர் உல்ப்கேங்க் ரென்னர் தலைமையிலான குழுவினர் கண்டு பிடித்துள்ளனர்.
இந்த மருந்தை தூசி, பூனை முடி, உள்ளிட்ட பல அலர்ஜி நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் ஊசி மூலம் செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டது. அவ்வாறு சிகிச்சை பெற்றவர்களில் 42 சகிதம் பேர் நோயில் இருந்து குணமாகினர்.
இதே மருந்தை ஆஸ்துமா மற்றும் காய்ச்சலினால் அவதிப்பட்டவர்களின் உடலிலும் செலுத்தி சோதிக்கப்பட்டது. அவர்களுக்கும் அந்த நோய் குணமாகி விட்டது. இதை தொடர்ந்து இம்மருந்தை மார்க்கெட்டில் விற்பனைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இன் னும் 4 வருடத்தில் அம்மருந்து விற்பனைக்கு வரும் என விஞ்ஞானி டாக்டர் ரென்னர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதில் இருந்து விரைவில் மீள முடியும்.
நன்றி இணையம்
0 comments:
Post a Comment