அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube


Brazil inflict more misery on Chile

உலக கோப்பை கால்பந்து தொடரில், "ரவுண்டு-16' போட்டியில் பிரேசில் அணி, 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. பதிலுக்கு ஒரு கோல் கூட அடிக்கமுடியாமல் தோல்வியடைந்த சிலி அணி, தொடரில் இருந்து பரிதாபமாக வெளியேறியது.

தென் ஆப்ரிக்காவில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் நேற்று நடந்த "ரவுண்டு-16' போட்டியில் உலகின் "நம்பர்-1' அணியான பிரேசில், 18வது இடத்திலுள்ள சிலியை சந்தித்தது.

போட்டி துவங்கியது முதல் சிலி அணியினர், கோல் அடிப்பதை விட, தற்காப்பு ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்தினர். பிரேசில் அணியினரின் பல கோல் வாய்ப்புகளை, சிலி அணியினர் முறியடித்து வந்தனர். போட்டியின் 9வது நிமிடத்தில் பேபியானோ அடித்த பந்தை, சிலி கோல் கீப்பர் பிராவோ அசத்தலாக தடுத்தார். ஆனால் இது நீண்ட நேரத்துக்கு நீடிக்கவில்லை.

பிரேசில் முன்னிலை:
ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் பிரேசில் அணிக்கு "கார்னர் கிக்' வாய்ப்பு கிடைத்தது. இதை மைகான், சிலியின் கோல் ஏரியாவுக்குள் அடிக்க, அங்கிருந்த ஜுவான் அதை தலையால் முட்டி கோலாக மாற்றினார். அடுத்த சில நிமிடங்களில் (38வது நிமிடம்) பிரேசிலின் பேபியானோ, ஒரு கோல் அடிக்க, பிரேசில் வலுவான முன்னிலை பெற்றது. இது, இத்தொடரில் இவர் அடிக்கும் மூன்றாவது கோல் ஆகும்.

Dutch, Brazil book meeting in style

பதிலடி தர, சிலி அணியினர் நடத்திய தாக்குதல்கள் வீணானது. இதையடுத்து முதல் பாதியில் பிரேசில் அணி, 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்று இருந்தது.


மீண்டும் கோல்:
இரண்டாவது பாதி துவங்கியதும் சிலி அணியினர், பிரேசில் பகுதிக்குள் அடுத்தடுத்து தாக்குதல் தொடுத்தனர். இருப்பினும் கோல் அடிக்க முடியவில்லை. இந்நிலையில் 59 வது நிமிடத்தில் பிரேசிலின் ரொபினியோ, இந்த உலக கோப்பை தொடரில், தனது முதல் கோல் அடிக்க, பிரேசில் 3-0 என அசைக்கமுடியாத முன்னிலை பெற்றது.பிரேசில் வெற்றி:
ஆட்டநேர முடிவில் இரு அணியும், மேலும் எதுவும் கோல் அடிக்கவில்லை. இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில், பிரேசில் அபார வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது. ஒரு கோல் கூட அடிக்க முடியாத சோகத்தில், சிலி அணி பரிதாபமாக வெளியேறியது.
வரும் ஜூலை 2ம் தேதி, போர்ட் எலிசபெத்தில் நடக்கும் காலிறுதியில் பிரேசில் அணி, நெதர்லாந்தை சந்திக்கவுள்ளது.


நடுவர் மோசம் தொடர்கிறது
தென் ஆப்ரிக்காவில் நடக்கும் உலக கோப்பை தொடரில் நடுவர்கள் செயல்பாடு படுமோசமாக உள்ளது. "ஆப் சைடில்' அடிக்கப்பட்ட கோல்களை சரி என்றும், சரியாக அடிக்கப்பட்ட கோல்களை தவறு என்றும், அறிவித்து பலரது வெறுப்பை சம்பாதித்து வருகிறார்கள். நேற்று பிரேசில், சிலி அணிகள் மோதிய போட்டியிலும் இது தொடர்ந்தது. போட்டியின் 27வது நிமிடத்தில், தங்கள் கோல் ஏரியாவுக்குள் வைத்து, சிலியின் இஸ்லா, பிரேசில் கேப்டன் லுசியாவை பவுல்செய்தார். கால்பந்து விதிப்படி இதற்கு "பெனால்டி-கிக்' கொடுத்திருக்க வேண்டும். ஆனால் சரியாக கவனிக்காத நடுவர் ஹோவர்டு வெப் (இங்கிலாந்து), "கார்னர் கிக்' மட்டும் கொடுத்தார்.
Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.