மனைவி மார்க் போடுவாங்களா?????
மார்க் போட்டா..........எவ்வளவு போடுவாங்க, எதுக்கெல்லாம் போடுவாங்க, எப்படி போடுவாங்க, தெரிஞ்சுக்கனுமா??
நீங்க திருமணமான ஆணாக இருந்தால், உங்க மனைவி உங்களுக்கு மார்க் போட்டா நீங்க பாஸா? ஃபெயிலா ன்னு தெரிஞ்சுக்கலாம்!
நீங்க
திருமணமாகாத ஆணாக இருந்தால், எதிர்காலத்தில் உங்கள் மனைவியிடம் நூத்துக்கு
நூறு மதிப்பெண்கள் வாங்க தேவையான ரகசியம் அறிந்துக்கொள்ளலாம்!!
இதோ சில சாம்பிள்......
1. ராத்திரி நல்லா தூங்கிட்டு இருக்கும்போது "ஏங்க வெளியிலே ஏதோ சத்தம் கேட்குதுங்க" அப்படின்னு சொல்றார் மனைவி....
அ. உடனே நீங்க தைரியமா கதவை திறந்து வெளியே போய்ப் பார்த்துவிட்டு, ஒன்றுமில்லை என்று வந்து படுக்கிறீர்கள் [ மார்க் - 0, 'ஏன்
மார்க் பூஜ்ஜியம்னு முழிக்கிறீங்களா??.........காரணம் அப்படி வெளியே போய்
பார்த்துட்டு வரவேண்டியது உங்க கடமை, அதுக்கெல்லாம் மார்க் கிடையாது']
ஆ. "அங்கே ஏதோ அசையுற மாதிரி இருக்குதே.......ஹே யாரது.....எவன்டா அது......." அப்படின்னு சவுண்டு விட்டுட்டு வந்து படுக்கிறீங்க [ மார்க்: 10]
இ.சவுண்டு
விட்டதோடு நிறுத்தாம, கைல ஒரு தடியெடுத்துட்டுப் போய் தரையில ரெண்டு தட்டு
தட்டி சீன் போட நீங்க நினைக்க, நீங்க தடியால் போட்ட போடு உங்கள் மனைவிக்கு
பிரியமான பூந்தொட்டி, செல்ல பூனைகுட்டி இப்படி எதின் மீதாவது
பட்டால்......[மார்க் : -5 'மைனஸ் 5 நோட் பண்ணிக்கோங்க']
2.உங்க வைஃப்க்கு பர்த்டே கொண்டாட.....
அ. இரவு ஒரு நல்ல ஹோட்டலுக்கு.......[அவங்களோட ஃபேவெரேட் ரெஸ்டாரண்டுக்கு] டின்னர் சாப்பிட அழைச்சுட்டுப்போறீங்க [ மார்க்: 0 ' ஹலோ என்ன முழிக்கிறீங்க.....இதுவும் உங்க கடமைங்கோ, ஸோ நோ மார்க்குங்கோ!']
ஆ. டின்னர் முடிஞ்சதும், சர்ப்ரைஸா மனைவிக்கு ஒரு சூப்பர் கிஃப்ட் வாங்கி கொடுக்கிறீங்க ]மார்க்:10]
இ:
அவங்க பிறந்தநாளை கொண்டாட டின்னருக்கு கூட்டிட்டு போய்ட்டு.......நீங்க
பியர் அருந்திட்டு, ஆட்டம் பாட்டம்னு நடு ராத்திரிவரைக்கும் கொட்டம்
அடிக்கிறீங்க......அங்கே வந்திருக்கும் மற்றவர்களுடன் [ மார்க் : -100 'மைனஸ் நூறு']
3.உங்கள் உடலமைப்பு எப்படி????
அ. தொப்பை போட்டிருக்கிறீர்கள் [மார்க்: -50 'மைனஸ் ஐம்பது']
ஆ. தொப்பை வயிறாக இருந்தாலும், அதை குறைக்க தவறாமல் உடற்பயிற்சி பண்றீங்க [மார்க்: 0 'அட......தேகப் பயிற்சி பண்றது உங்க கடமைங்க, ஸோ மார்க் ஸீரோ தானுங்க']
இ. தொந்தி
பற்றிய கவலையே இல்லாமல், அசால்ட்டா ' என்னைப்பார் ! என் தொப்பையை பார்!!
என்று ஜீன்ஸ் பேன்ட்டும், டைட் டீ-ஷர்ட்டும் போட்டுக்கிறீங்க.[மார்க்: -100 ' மைனஸ் நூறு' ]
ஈ. எனக்கு மட்டுமா தொப்பை இருக்கு? உனக்கு தான் என்னைவிட பெரிய தொப்பை இருக்கு , ஹி ஹி ஹி !! என்று கிண்டல் பண்ணுகிறீர்கள்.[மார்க்: -1000 'மைனஸ் ஆயிரம்']
4. உங்க மனைவி தனக்கு பிடிச்ச ஸ்வீட் வாங்கிட்டு வர சொல்றாங்க....
அ. நல்லபுள்ளையா போய் உடனே வாங்கிட்டு வந்துடுறீங்க [ மார்க்:0 ' இப்படி சமர்த்தா வாங்கிட்டு வரவேண்டியது உங்க கடமை ராசா, ஸோ நோ மார்க் ' ]
ஆ.
உங்க மனைவி ஸ்வீட் வாங்க ஈவினிங் வெயில் தாள போய்ட்டுவாங்கன்னு
சொல்லியும்.........அந்த அயிட்டத்தைக் கடும் வெயிலில் போய் வாங்கிட்டு
வருகிறீர்கள்[ மார்க் : 10 ]
இ. மனைவிக்கு ஸ்வீட் மட்டும் வாங்காமல், கூடவே உங்களுக்கு பிடிச்ச பக்கோடா மிக்சர்ன்னு சில அயிட்டமும் சேர்த்து வாங்கிட்டு வர்ரீங்க [ மார்க்: - 5 ' என்ன முறைக்கிறீங்க?ஐந்து மார்க்தாங்க மைனஸ்.......இப்படி முறைச்சீங்கன்னா இன்னும் ஜாஸ்தி மார்க் மைனஸ் ஆகும், கவனம்']
5. " ஏங்க நான் ரொம்ப குண்டா தெரியறேனாங்க?" என்று கேட்கிறார் உங்கள் மனைவி....
அ. அதற்கு நீங்க ரியாக்ஷனே கொடுக்காம, காது கேட்காதது போல் நடிக்கிறீங்க....பதில் சொல்லாம தவிர்க்கிறீர்கள் [ மார்க்: -10 ' பின்ன இப்படி நைஸா நழுவினா?? மைனஸ் மார்க்தான்!!]
ஆ."ஆமாம்...கொஞ்சம்....இல்ல.........இல்லடா........ரொம்ப
இல்ல, கொஞ்சமாதான்.......ஆனாலும் அழகாதான்மா இருக்க" ஆமாம் ன்னு
ஆரம்பிச்சுட்டு அதுக்கப்புறம் நீங்க என்ன சொல்லி சமாளிச்சாலும், எவ்வளவு
சப்பைக்கட்டு கட்டினாலும்......[மார்க் : -25 ' மைனஸ் 25']
இ. அப்பாவி முகத்துடன் "தூரத்துல இருந்து பார்த்தாவா??...........இல்ல பக்கத்துலயா??" என நக்கலடிக்கிறீர்கள்.[மார்க்: -100 ' இந்த நக்கலுக்கெல்லாம் மைனஸ் மார்க் தானுங்க!!']
6. ஒரு பிரச்னை பற்றி சீரியஸா உங்க மனைவி உங்க கிட்ட வந்து பேசுறார். அதற்கு நீங்கள்…
அ. அவர் பேசி முடிக்கும்வரை வெகு உன்னிப்பாகக் கேட்பது போன்ற பாவத்தை உங்கள் முகத்தில் மெயிண்டேன் பண்றீங்க[மார்க்: 0 ' இதுதாங்க நீங்க செய்தே ஆகவேண்டிய முக்கிய கடமை , அதுக்கெல்லாம் மார்க் போட முடியாது']
ஆ.
உங்க மனைவி பேசி முடிக்க ஒரு மணி நேரம் ஆனாலும்.......குறுக்கே பேசாமல்,
எதிர்த்து பேசாமல், அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருக்கிறீங்க.[மார்க்: +100 ' இப்போ தெரிஞ்சிடுச்சா.........எப்படி நூறு மார்க் வாங்கனும்னு!!']
இ. உங்க மனைவி பேசி முடிப்பதற்குள் நீங்க அப்படியே தூங்கிட்டீங்கன்னு பேச்சின் முடிவில் தெரிஞ்சுக்கிறாங்க[ மார்க்: -1000 ' மைனஸ்
ஆயிரம் ஏன்னு பார்க்கிறீங்களா??.............பின்ன எவ்வளவு 'தில்'
இருந்தா, பேசிட்டு இருக்கும்போது பேச்சை கவனிக்காம இப்படி தூங்கி வழிவீங்க??]
மனைவியரின் மார்க் போடும் இரகசியம் புரிஞ்சுடுச்சா? பாஸாக வாழ்த்துக்கள்!
2 comments:
முன்பே படித்திருந்தாலும்.. படிக்கப் படிக்கத் திகட்டாதது..:))
(இந்தக் கமெண்டுக்கு மார்க் மைனஸில்தான் இருக்கும் என்பது தெளிவு)
அரபுத்தமிழன் உங்கள் கம்மேன்ட்கு +1000 மார்க்
Post a Comment