அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube



உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியில் நைஜீரிய வீரர் சைனிகயிட்டா கிரீஸ் வீரரை காலால் உதைத்ததால் சிவப்பு அட்டைக் காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் 10 வீரர்களுடன் விளையாடிய நைஜீரியா 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவி போட்டியை விட்டு வெளியேறியது.



உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியில் புளோம்பான்டீஸ் நகரில் நடைபெற்ற 'பி' பிரிவு போட்டியில் நைஜீரியா கிரீஸ் அணியை எதிர்கொண்டது.

ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியில் இந்த இரு அணிகளும் தோல்வி கண்டிருந்தன. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று தகுதிப் பெற முடியும். எனவே ஆரம்பம் முதலே போட்டி பரபரப்படைந்தது.

போட்டியின் 15ஆவது நிமிடத்தில் நைஜீரியா முதல் கோலை போட்டது. அணி வீரர் காலு உட்சி அடித்த பந்து கோல்கீப்பரை ஏமாற்றி வளைக்குள் புகுந்தது.

கோல் வாங்கிய கிரீஸ் வீரர்கள் பதில் கோல் அடிக்கும் முனைப்புடன் போராடினார்கள். இருப்பினும் போராட்டம் சண்டையில்தான் முடிவடைந்தது .33ஆவது நிமிடத்தில் நைஜீரிய வீரர் சைனிகயிட்டாவுக்கும் கிரீஸ் வீரர் டோராசிடிஸ்கும் மைதானத்தில் சண்டை ஏற்பட்டது. 

இதில் கோபமடைந்த சைனிகயிட்டா அவரை காலால் உதைத்தார். இதனால் நடுவர் சைனிகயிட்டாவுக்கு எந்த பாரபட்சமும் காட்டாமல் நேரடி சிவப்பு அட்டைக் காட்டினார். கோபத்தில் செய்த தவறால் நொந்து போன சைனிக்கயிட்டா தலையை தொங்க போட்டவாறே களத்தை விட்டு வெளியேற கிரீஸ் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள இதுவே சந்தர்ப்பமாக அமைந்தது. 

தொடர்ந்து நைஜீரியா 10 வீரர்களுடன் விளையாடியது. இது கிரீஸ் வீரர்களுக்கு சாதகமாக அமைந்தது. தொடர்ந்து 43ஆவது நிமிடத்தில் கிரீஸ் பதில் கோல் போட்டது. டோராசிடிஸ் மூலம் பெற்ற பந்தை சல்பிங்திஸ் அதனை கோலாக மாற்றினார்.




2004ம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியனான கிரீஸ், உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியில் போட்ட முதல் கோல் இது. இந்த கோலையடுத்து முதல் பாதி போட்டியில் 1-1 என்ற கோல் சமநிலையில் முடிவடைந்தது.

பிற்பாதி போட்டியில் நைஜீரிய அணிக்கும் பல வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அனைத்தையும் பயன்படுத்த வில்லை. இதே வேளையில் கிரீஸ் வீரர்களும் கோல் போட போராடிக் கொண்டிருந்தார்கள். 71ஆவது நிமிடத்தில் டோராசிடிஸ் ஒரு கோல் போட கிரீஸ் முன்னிலை பெற்றது.

இறுதிவரை போராடிய நைஜீரிய வீரர்களால் மேற்கொண்டு கோல் எதுவும் போட முடியவில்லை. இறுதியில் கிரீஸ் 2-1 என்ற கோல் கணக்கில் நைஜீரியாவை தோல்வியுற செய்தது. உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியில் கிரீஸ் அணி பெற்ற முதல் வெற்றி இது என்பது குறிப்பிடதக்கது.

நைஜீரிய வீரர் சைனிகயிட்டா செய்த தவறே அந்த அணியின் தோல்விக்கு காரணம். கடந்த உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட இறுதி போட்டியில் பிரான்சின் சினடேன் சிடேன் இத்தாலியின் மார்கோ மாட்டரசியை தலையால் முட்டித் தள்ளினார். இதனால் சிடேன் வெளியேற்றப்பட, பிரான்ஸ் அந்த போட்டியில் தோல்வியடைந்து உலகக் கிண்ணத்தை இழந்தது.
 


இதே போன்று சைனிகயிட்டாவும் எதிர் அணி வீரரை காலால் உதைத்ததால் களத்தை விட்டு வெளியேற்றப்பட்டார், 10 வீரர்களுடன் விளையாடிய நைஜீரியாவும் உலகக் கிண்ணத்தை விட்டு வெளியேறியது.

அடுத்த போட்டியில் கிரீஸ் அணி ஆர்ஜன்டினாவை சந்திக்கிறது. மற்றொரு ஆட்டத்தில் நைஜீரியா தென்கொரிய அணியை எதிர்கொள்கிறது. ஆர்ஜன்டினா ஏற்கனவே இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. கிரீசும் தென்கொரியாவும் தலா 3 புள்ளிகள் பெற்றுள்ளன. எனவே இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணியே இரண்டாவது சுற்றுக்கு முன்னேறும்.

கிரீஸ் அர்ஜென்டினாவை வீழ்த்துவது கடினம். தென்கொரியா சிறப்பாக விளையாடும்பட்சத்தில் நைஜீரியாவை வெற்றி கொள்ள வாய்ப்பு அதிகம்.




நன்றி வீரகேசரி 







Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.