இந்தோனேசியாவில் யாவென் என்ற 3 வயதான சிறுமி ஒரு நாளைக்கு குறைந்தது 40 சிகரெட்டுகளை உபயோகிக்கிறாள். புகை பிடிப்ப துடன் மது அருந்தும் பழக்கத்தையும் இந்த சிறுமி கொண்டுள்ளாள்.
பாதுகாப்பான இடத்தில் வசிக்கும் இந்த சிறுமி தனது பெற்றோருக்குத் தெரியாமல் பணத்தை திருடி வாங்குவதுடன் தனது தந்தை வைத்திருக்கும் சிகரெட்டுகளையும் திருடி குடிக்கும் பழக்கத்தையும் கொண்டுள்ளாள்.
இந்தப் பழக்கத்திற்கு அடிமையானவுடன் தனது உடை அலங்காரத்தினையும் மாற்றிக் கொண்டாள்.
பெரும்பாலும் ஆண்கள் அணியும் உடைகளையே பயன்படுத்துகிறாள். மேலும் ஒரு நாளைக்கு 3 டம்ளருக்கு மேல் மது அருந்திய நிலையிலும் தனக்கு எந்த பிரச்னையும் இல்லை எனவும் சிறுமி தெரிவித்துள்ளாள். கடந்த ஒரு வருடமாக இருக்கும் இந்த பழக்கத்தை இப்போதுதான் அவளது பேற்றோர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் சிறுமியின் உடல்நலம் ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு நாளைக்கு 40 சிகரெட்டுகளை ஊதி தள்ளும் 2 வயது சிறுவன்!
கடந்த வாரத்தில், இதே இந்தோனேசியாவில் ஆர்டி ரிசால் என்ற சிறுவன் ஒரு நாளைக்கு 40 சிகரெட்டுகளை உபயோகித்து பரபரப்பை ஏற்படுத்தி விட்டான். மேலும் அச்சிறுவன் சிகரெட் பிடிக்கும் வீடியோ காட்சி யூ ட்யூப்பில் ஒளிப்பரப்பட்டது. வீடியோ காட்சி ஒளிப்பரப்பான சிறிது நேரத்தில் சுமார் 39 லட்சம் உலக மக்கள் பார்த்து வியந்தனர். இந்நிலையில் தனது உடல் நிலை கெட்டு விடுமோ என எண்ணி 40 சிகரெட்டுகளுக்கு பதிலாக 15 சிகரெட்டுகளை உபயோகிக்கின்றான்.
பரபரப்பு வீடியோ காட்சி: http://www.dinakaran.com/Indonesian-baby-on-40-cigarettes-a-day.asp
நன்றி தினகரன்
0 comments:
Post a Comment