
இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதல் துடுப்பாட்ட வீரரின் அரை சதத்துடன் இந்தியா முதல் வெற்றியை தனதாக்கி கொண்டது.
இலங்கை , இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், அணிகள் பங்கேற்கும் ஆசியக் கிண்ண ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் நேற்று இலங்கையில் ஆரம்பமானது. இன்றைய இரண்டாம் நாள் போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின.
இரவு பகல் ஆட்டமாக தம்புள்ளை ரன்கிரிய விளையாட்டரங்கில் நடைபெற்ற இன்றைய போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி தலைவர் சகிபல் ஹஷேன் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மாணித்தார். இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ஓட்டங்களை பெற்றது.
பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய தமின் இஹ்பால் மற்றும் இம்ரல் கயிஸ் ஆகியோர் ஆரம்பதில் சிறப்பான துடுப்பாட்டத்தை ஏற்படுத்தினர். தமின் இஹ்பால் 22 ஓட்டங்களுடனும், இமருல் கயிஸ் 37 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய முஹமட் ஹஸ்ரபுல் மற்றும் ரஹிம் ஆகியோர் இந்திய அணியின் வீச்சாளர்களின் பந்துக்கு தடுமாற்றத்தின் மத்தியில் தனது அணிக்கு ஒவ்வொரு ஓட்டங்களை பெற்று கொடுத்தனர். இருப்பினும் அவர்களாலும் நீண்ட நேரத்துக்கு தாக்கு பிடிக்க முடியாது ஹஸ்ரபுல் 20 ஓட்டங்களுடனும், ரஹிகிம் 30 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய வீர்கள் 4க்கும் குறைவான ஓட்டங்களுடன் வந்த வேகத்தில் மீண்டும் திரும்பினர். இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர்களை விட இன்றை போட்டியில் ஷெவாக் தனது 2.05 ஓவர்களில் 6 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுகளை கைப்பற்றிருந்தமை குறிப்பிடதக்கது.

168 என்ற எளிதான வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 30.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 168 ஓட்டங்களை பெற்று வெற்றிப் பெற்றது.
துடுப்பாட்த்தில் ஆரம்ப துடுப்பாட் வீரராக களமிறங்கிய ஷெவாக் பந்து வீச்சில் தனது அபாரத்தை வெளிபடுத்தியது போன்று துடுப்பாட்டத்திலும் சிறப்பாக துடுப்பெடுத்தாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றார். மறுபுறத்தில் நிதானமாக துடுப்பெடுத்தாடிய கம்பீர் இறுதி வரை நின்று 82 ஓட்டங்களுடன் தனது 19 ஆவது அரைச் சதத்தை பெற்றதன் மூலம் அணியை இலகு வெற்றி பெறச் செய்தார்.
கடந்த மும்முனைத் தொடர்களிலும், இருபது-20 போட்டிகளிலும் சிறப்பாக பிரகாசித்த ரோஹித் சர்மா முதல் பந்திலே ஓட்டம் எதுவும் பெறாது சகிபுல் ஹஷேன் பந்து வீச்சில் போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். அணி தலைவர் தோனி 38 ஓட்டங்களையும் மற்றும் ரெய்னா ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழகாது பெற்றதோடு அணியின் வெற்றியையும் பெற்று கொண்டனர்.

இன்றைய போட்டி முடிவினையடுத்து இந்தியா அணி 05 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது. நாளை மறு தினம் பங்களாதேஷ் இலங்கையிடம் தனது வெற்றியை ஏற்படுத்திக் கொள்ள போராடும் வகையில் களமிறங்க உள்ளது.
நன்றி வீரகேசரி
0 comments:
Post a Comment