
உலகின் புகழ் பெற்ற விண்வெளி ஆராய்ச்சியாளர் கலிலியோவின் காணாமல் போன சில உடற்பாகங்கள் மீண்டும் கிடைக்கப் பெற்றுள்ளதாக இத்தாலிய அருங்காட்சியக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிடைக்கப்பட்ட உடற்பாகங்கள் ஃபுளோரன்ஸ் அருங்காட்ச்சியத்தில் ஜுன் 10ம் (இன்று) தேதி முதல் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட இருப்பதாக அருங்காட்சியக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஞ்ஞானி கலிலியோ 1564ம் ஆண்டு முதல் 1642ம் ஆண்டு வரையில் வாழ்ந்தார் எனவும், அவரது உடல் 1737ம் ஆண்டு மீண்டும் நல்லடக்கம் செய்யப்பட்டதாகவும் வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கலிலியோவின் இறுதிச் சடங்கின் போது அவரது விரல்கள் லேமேன் மற்றும் மேசன் என்பவர்களால் கலிலியோவின் நினைவாக திருடப்பட்டதாக ஃபுளோரன்ஸ் அருங்காட்சியக இயக்குனர் பவுளோ கலூஸி தெரிவித்தார். கலிலியோவின் மிகப்பெரிய கண்டுபிடிப்பான தொலைநோக்கி மற்றும் காம்பஸ் ஆகியனவும் அருங்காட்சியத்தில் வைக்கப்பட இருப்பதாகவும் கலூஸி தெரிவித்தார்.
கடந்த 1905ம் ஆண்டு காணாமல் போன கலிலியோவின் கட்டை விரல் மற்றும் பற்கள் கலைப் பொருட்கள் சேகரிப்பாளர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் விஞ்ஞானி கலிலியோவின் உடற்பாகங்கள் அருங்காட்சியத்தில் வைக்கப்பட இருப்பதால் மக்களிடையே அருங்காட்சியத்தைப் பார்க்கும் ஆர்வம் அதிகமாகியுள்ளது.
நன்றி தினகரன்
0 comments:
Post a Comment