உலக கோப்பை கால்பந்து தொடரை, மூன்று முறை "உலக சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி அணி வெற்றியுடன் துவக்கியது. நேற்று நடந்த லீக் போட்டியில் ஜெர்மனி அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, முதல் வெற்றியை பதிவு செய்தது.
தென் ஆப்ரிக்காவில், 19வது "பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் நேற்று டர்பனில் உள்ள மோசஸ் மபிடா மைதானத்தில் நடந்த "டி பிரிவு லீக் போட்டியில், உலக ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில் 6வது இடத்தில் உள்ள ஜெர்மனி அணி, ஆஸ்திரேலியாவை (20வது இடம்) எதிர்கொண்டது.

பொடோல்ஸ்கி அபாரம்:
துவக்கத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், 17வது முறையாக உலக கோப்பை அரங்கில் காலடி வைத்துள்ள ஜெர்மனி அணியினர் முன்பு, இவர்களது ஆட்டம் எடுபடவில்லை. ஆட்டத்தின் 8வது நிமிடத்தில் தாமஸ் முல்லர் "பாஸ் செய்த பந்தை லூகாஸ் பொடோல்ஸ்கி கோலாக மாற்ற, ஜெர்மனி அணி 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து அசத்திய ஜெர்மனி அணிக்கு, 26வது நிமிடத்தில் மிராஸ்லாவ் குளோஸ், 2வது கோல் பெற்றுத்தந்தார். ஆஸ்திரேலிய அணியினர் கிடைத்த இரண்டு "கார்னர் கிக் வாய்ப்புகளை வீணடித்தனர். இதனால் முதல் பாதி முடிவில் ஜெர்மனி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை வகித்தது.

முல்லர் நம்பிக்கை:
இரண்டாவது பாதியின் துவக்கத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள், தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இதற்கு எவ்வித பலனும் கிடைக்கவில்லை. தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய ஜெர்மனி அணிக்கு முல்லர் (68வது நிமிடம்), ககாயூ (70வது நிமிடம்) தலா ஒரு கோலடித்து நம்பிக்கை அளித்தனர். கடைசி வரை போராடிய ஆஸ்திரேலிய அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் ஆட்டநேர முடிவில் ஜெர்மனி அணி 4-0 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக பொடோல்ஸ்கி தேர்வு செய்யப்பட்டார்.

குளோஸ் "11"
நேற்றைய போட்டியில் ஜெர்மனி வீரர் மிராஸ்லாவ் குளோஸ், ஒரு கோல் அடித்ததன்மூலம், <உலக கோப்பை அரங்கில் அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில், 5வது இடத்தை ஹங்கேரியின் சான்டோர் கோக்சிஸ், ஜெர்மனியின் ஜர்ஜன் கிளின்ஸ்மன் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார். முதலிடத்தில் பிரேசிலின் ரொனால்டோ (15 கோல்) உள்ளார்.
0 comments:
Post a Comment