
உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜெர்மனிக்கு எந்த சிரமும் கொடுக்காமல் 4-1 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்ட இங்கிலாந்து உலகக் கிண்ணத்தை விட்டு வெளியேறியது. ஜெர்மனி கால் இறுதி போட்டிக்கு முன்னேறியது.
உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியில் இன்று புளுயம்பான்டைன் நகரில் நடைபெற்ற போட்டியில் ஐரோப்பாவின் வலுவான அணிகளான ஜெர்மனி,இங்கிலாந்து அணிகள் மோதின.
சுலோவேனியா அணிக்கு எதிராக விளையாடிய இங்கிலாந்து அணியின் அதே 11 வீரர்கள் இந்த போட்டியிலும் களம் இறங்கினார்கள். செர்பியாவுக்கு எதிரான போட்டியில் ஜெர்மனி ஸ்டிரைக்கர்,குளோஸ் சிவப்பு அட்டை பெற்றதால்,அவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து முதல் சுற்றில்,கானாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் குளோஸ் களம் இறங்கவில்லை.

20ஆவது நிமிடத்தில் அடிக்கப்பட்ட ஜெர்மனியின் முதல் கோல் இது. தொடர்ந்து 32ஆவது நிமிடத்தில் முல்லர் கொடுத்த பாசை பெற்ற புடோஸ்கி ஜெர்மனிக்கான இரண்டாவது கோலை அடிக்க இங்கிலாந்து வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனாலும் பேராடிய இங்கிலாந்து 37ஆவது நிமிடத்தில் பதில் கோல் திருப்பியது. ஸ்டீவன் ஜெரார்டு அடித்த 'ப்ரீகிக்'கை தலையால் முட்டி அப்சன் இந்த கோலை அடித்தார்.
முதல் பாதி ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் பிராங்க் லேம்பர்டு அடித்த பந்து கோல்கம்பத்தில் மோதி எல்லைக் கோட்டை தாண்டி தரையில் குத்தியது. ஆனால் அதனை உருகுவே நாட்டு நடுவர் ஜார்ஜ் லோரியான்டோ கோல் என்று அறிவிக்காதது இங்கிலாந்தின் துரதிருஷ்டமே. இதற்காகதான் பல நாடுகள் எல்லைக் கோட்டை பகுதியில் அறவியலை பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றன. ஆனால் 'பிபா' அதை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.
பிற்பாதி ஆட்டத்தில் இங்கிலாந்து கோல் அடிக்கும் முயற்சியில் இறங்கி தடுப்பாட்டத்தில் கோட்டை விட்டது. இங்கிலாந்து வீரர்கள் கையில்தான் பெரும்பகுதி நேரம் பந்து இருந்தது. பல வாய்ப்புகளும் அந்த அணிக்கு கிடைத்தன. ஜெர்மனி கம்பத்தில் கோலாக தவறிய பந்துகள் அதே வேகத்தில் இங்கிலாந்தின் முன்களத்திற்கு வந்தது.
அந்த சமயத்தில் இங்கிலாந்து பின்களத்தில் இரு தடுப்பாட்டக்காரர்களே இருந்தனர். பிற இங்கிலாந்து வீரர்கள் பின்களத்திற்கு வருவதற்கு முன் அவை கோல்களாக மாறின.அப்படிதான் பிற்பாதியின் 67 மற்றும் 70வது நிமிடங்களில் ஜெர்மனியின் இளம் வீரர் தாமஸ் முல்லர் இரு கோல்களை அடித்தார்.
தாக்குதல் ஆட்டத்தை நம்பி தடுப்பாட்டத்தில் கோட்டை விட்டதால் வந்த விளைவு இது.தொடர்ச்சியான இரு கோல்கள் வாங்கிய இங்கிலாந்து வீரர்கள் சோர்வடைந்தனர்.ஆட்ட நேர இறுதியில் ஜெர்மனி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறியது.
0 comments:
Post a Comment