
இவ்விரு அணிகள் மோதிய ஆட்டம் இலங்கையின் தம்புல்லாவில் சனிக்கிழமை நடைபெற்றது.
முதலில் ஆடிய பாகிஸ்தான் 267 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 49.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பாகிஸ்தானின் துவக்க ஆட்டக்காரர் சல்மான் பட், சிறப்பாக ஆடி 74 ரன்கள் குவித்தார். கம்ரன் அக்மல் 51 ரன்கள் எடுத்தார்.

கம்பீர் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கேப்டன் தோனி 56 ரன்களில் சோயிப் மாலிக் பந்தில் போல்டு ஆனார். கடைசி ஓவரின் 2-வது பந்தில் ரெய்னா 37 ரன்களில் ரன் அவுட் ஆனார். இந்திய அணி 4 பந்துகளில் 6 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து களம்புகுந்த பிரவீன்குமார் தான் சந்தித்த முதல் பந்தில் 2 ரன்களும், இரண்டாவது பந்தில் ஒரு ரன்னும் எடுத்தார். கடைசி இரு பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்டபோது கடைசி ஓவரின் 5-வது பந்தில் ஹர்பஜன், சிக்ஸர் அடித்து இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்தார்.

இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் தோற்றதன் மூலம் போட்டியிலிருந்து வெளியேறியது. இரு ஆட்டங்களில் வென்ற இந்திய, இலங்கை அணிகள் இறுதி ஆட்டத்திற்கு தகுதிபெற்றுள்ளன.
இந்திய அணி, இலங்கையை லீக் ஆட்டத்தில் 22-ம் தேதியும், இறுதி ஆட்டத்தில் 24-ம் தேதியும் எதிர்கொள்கிறது.
நன்றி தினமணி
0 comments:
Post a Comment