நம்ம அம்மணிக எல்லாருக்கும் கோடுபோட்டா போதுமே! தானாவே ரோடு
போட்டுருவாங்க.
ஓகே அம்மணீஸ்? ஜொள்ளர்களை பல பிரிவா பிரிச்சு மேய்ஞ்சு
மகளிர்க்காக ஜடியாக்களை சுடச்சுட அள்ளித் தருவது..
ஒட்டக ஜொள்ளுப்பார்ட்டி:
இந்த மாதிரி ஆளுக
எல்லாம் பார்தீங்கன்னா தானாவே வலிய வந்து உங்களுக்கு உதவி செய்யற
மாதிரிதான் ஆரம்பிப்பாங்க. ‘அட இப்படி ஒரு ‘லாஜிக் லபக்குதாசா?!’
இருக்கானே! கேக்காததுக்கு மின்னாடியே நமக்கு உதவி செய்யுறானே ! இவன் ரொம்ம
நல்லவனா இருப்பான் போல இருக்கேன்னு ‘நம்பி’ ஒரு ரெண்டே ரெண்டு
மில்லிமீட்டர் அளவுக்கு உங்க ‘பல்லை’ காட்டினா போதும் அவ்வளவுதான் ‘
எக்ஸ்கூஸ் மீ மே ஐ கம் இன் !’ அப்படீன்னு உங்க பக்கத்திலேயே வந்து
பகிரங்கமா ‘டென்டை’ போட்டுருவாய்ங்க! அப்படியேக்கா ஒரு ரெண்டே நாள்ல
உங்ககிட்டே ‘ கொஞ்சம் தள்ளி உக்கார முடியுமா ? இடம் பத்தலை?! ‘ அப்படீன்னு
கேப்பாய்ங்க. நீங்களும் ‘பேத்தனமா’ உங்க ‘சேர்’ ரை நகர்த்தி போட்டு
உக்கார்தா உடனே ‘ அட என்னங்க நீங்க? உங்களைத்தானே நாகர்ந்து உக்கார
சொன்னேன் chair ஐ இல்லையேன்னு ! “ அப்படியேக்கா லேசா உங்க முகத்தை படிச்சு
பதமா ‘பல்ஸ்’ பார்ப்பாய்ங்க. அப்போ மட்டும் நீங்க ‘கெக்கே பிக்கே’ ன்னு
பெரிய ‘ஜோக்’ கை கேட்ட மாதிரி இளிச்சுட்டீங்கன்னு வைங்க! அவ்ளோதான் நீங்க
காலி !! வாரண்ட் இல்லாமலேயே உங்க மடியிலேயே வந்து பூனை மாதிரி
பதுங்கீடுவாய்ங்க ஜாக்கிறதை !
வாத்தியார் ஜொள்ளுபார்ட்டி :
இந்த
மாதிரி ஆளுக எல்லாம் பார்த்தீங்கன்னா கொஞ்சம் ‘கெத்’ து மெயின்டெய்ன்’
பண்ணிகிட்டு இருப்பாய்ங்க. ஆரம்பதுலே அப்படியே கஞ்சி போட்டு அயர்ன் பண்ணுன
கதர்சட்டை மாதிரி சும்மா வெரப்பா ( ரொம்ப ஸ்ரிட்டாம்! ) சுத்திகிட்டு
இருப்பாய்ங்க. உங்களை அப்படியேகா லேசா ஓரக்கண்ணுலே ‘மானிட்டர்’
பண்ணிகிட்டே இருப்பாய்ங்க. நீங்க எப்பவாசும் ஏதாசும் ‘சந்தேகம்’ இல்லை
‘வெளக்கம் ‘ அப்படீன்னு கேப்பீகளான்னு காத்துகிட்டு இருப்பாய்ங்க. ஆனா
வெளிய காட்டிக மாட்டாய்ங்க! நீங்களும் அட நம்ம அப்பாவாட்டம் இருகாரேன்னு
நம்பி நம்பிக்கையோட போய் பேசுவீங்க. இந்த மாதிரி பார்ட்டிக எல்லாம் ‘
என்னமா கொழந்தே ! ‘ அப்படின்னுதான் மங்களகரமா ஆரம்பிச்சு ‘ அட இந்த தோடு
நல்லா இருக்கேன்னு! ‘ ரொம்ப உரிமையோட உங்க காதை தடவுவானுங்க! இப்போ நீங்க
உஷாரில்லாம கேனை மாதிரி ‘ சார் நல்லா இருக்கா ! ‘ஜில்மில்’ ல வாங்கினேன்னு
இன்னோரு காதையும் காட்டிகிட்டு நின்னீங்கனா போதும் பார்ட்டி அப்படியே
வேறெங்கேயெல்லாம் தடவுலாம்னு மனசுகுள்ளே புதுசா ரெண்டு ‘ப்ராஜெக்ட்’ போட
ஆரம்பிச்சுடுவாய்ங்க ஜாக்கிரதை!!
திருவோடு ஜொள்ளுப்பார்ட்டி :
இந்த
‘கேட்டகரி’ ஆளுக பார்த்தீங்கனா பிச்சக்காரன் சுடசுட பிரியாணியை பார்த்த
மாதிரி உங்களை அப்படி ஒரு பார்வை பார்ப்பானுங்க. அடிக்கடி பக்கத்துல வந்து
உங்களைக் கண்ணாலயே தின்னுட்டு பக்கத்து ‘சீட்’ ஆளுகிட்டே அல்பத்தனமா
‘ஜோக்’ அடிச்சுகிட்டு உங்க வாயும் ‘இளிச்ச’ வாயா ஆகுமான்னு நோட்டம்
விட்டுகிட்டே இருப்பாய்ங்க! கவலையே படாம நீங்க கதறக் கதற ஜொள்ளுவிடுறது
இவனுங்க ஸ்பெஷாலிட்டி. இந்த பிரிவு ஜொள்ளு பார்ட்டிக தான் உங்க பொருமையோட
எல்லைய ‘டச்’ பண்ணுறதே ஒரு பெருமையா நெனச்சுகிட்டு கபடி ஆடுவானுங்க. கூடிய
மட்டும் இந்த ஆளுகள பார்க்குறப்பொ எல்லாம் பொணம் கணக்கா எந்த ஒரு
‘ரியாச்சன்’ னுமே காட்டாம தேவாங்கை பார்க்குற மாதிரி ஒரு ‘டெட் லுக்’
வுட்டு இருந்தீங்கன்னாதான் பொளச்சுக்குவீங்க. இல்லாட்டி அவ்ளோதான் சும்மா
சுனாமி கணக்கா ஜொள்ளை கண்ணாபினான்னு வாரி இரைச்சு உங்களை
நாறடிச்சுடுவானுங்க ஜாக்கிறதை !!
அப்பாவி ஜொள்ளுபார்ட்டி :
இந்த
மாதிரி ஆளுக எல்லாம் பார்த்திங்கண்ண இந்த ‘காதல் கொண்டேன்’ தனுஷ் மாதிரி
பரிதாபமா கையைக் கட்டிகிட்டு குனிஞ்ச தலை நிமிராம உங்க முன்னாடி ‘மார்ச்
பாஸ்ட்’ போவாய்ங்க ! அட என்னடா இது இவ்ளோ கூச்ச சுபாவமா இவனுக்கு?!
குனிஞ்ச தலைய நிமிரவே மாடேங்கறானே !! இவ்ளோ அப்பாவியா இருகானே! ன்னு நம்பி
ஏதோ ரெண்டு வார்தை நீங்களா பேசுனீங்கன்னு வைங்க உடனே ‘ உங்களை நிமிர்ந்து
பார்த்து ரேசன் மாதிரி எண்ணி எண்ணி நீங்க கேட்ட கேள்விக்குமட்டும் ரெண்டு
வார்த்தையிலே பதில் செல்லிட்டு போவாய்ங்க. அட ரொம்ப ‘கட் அண்ட் ரைட்’ டான
ஆளா இருப்பான் போல இருக்கேன்னு நீங்களும் நம்பி நம்பிக்கையோட
இருந்தீங்கன்னா அவ்ளோதான். நீங்க போறப்போ வர்றப்போ எல்லாம் லேசா
நிமிர்ந்து பாக்குறது ‘சைடு’ல பார்க்குறதுன்னு லேசா நம்மாளுக்குள்ள காதல்
உடுக்கை தரிகெட்டு அடிக்க நீங்க காரணமா இருப்பீங்க. இந்த கேட்டகரி ஜொள்ளு
எல்லாம் பாவங்க. நீங்களா போய் சும்மா இருக்குறவங்க நெஞ்சுல காதலை பெட்ரோல்
ஊத்தி பத்தவசுடாதீங்க.
3 comments:
experience???
எங்கிருந்து சுட்டது என போடவும்
அதுதான் பதிவரின் எழுத்து திறமைக்கு கொடுக்கும் குறைந்தபட்ச மரியாதை
http://jollupet.blogspot.com/2007/03/blog-post_31.html
http://www.eegarai.net/-f10/---t18827.htm
இங்க தான்.... உங்கட தளம் நீங்க போட்டா பிறகு தான் என்னக்கே தெரியும்
Post a Comment