அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

ஜிமெயில் ( G Mail )



ஜிமெயில், ஏப்ரல் 1, 2004 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகப் படுத்தப்பட்ட காலப்பகுதியில் இச்சேவைகளைப் பெற்றுக்கொள்ள ஜிமெயில் மின்னஞ்சல் சேவையை ஏற்கனவே பயன்படுத்துபவரின் அழைப்பிதழ் தேவை. ஆரம்பதித்தில் அமெரிக்காவில் அழைப்புக்கள் குறுஞ்செய்திகள் 
வழியாகவும் வழங்கப்படுகின்றது. 





சிலர், இச்சோதனை நிலை முடிவடைந்தாலும் கூட, எரிதங்களை (Spam mail) இல்லாதொழிக்க அழைப்பிதழ்கள் மூலமாக மட்டுமே இச்சேவையில் இணைய முடிவதை தொடர வேண்டும் என நம்பினார்கள்
ஜிமெயில் இன்னும் முழுதாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராதபோதும் பெரும்பாலான ஜிமெயில் பயனர்கள் தேவைக்கு மேலதிகமான அழைப்பிதழ்களை வைத்துள்ளனர். ஜிமெயில் பயனர்களுக்கு 0-100 இற்கும் இடையிலான அழைப்புக்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. 
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஜப்பான், எகிப்து மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் நேரடியாக இச்சேவையினைப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, 
துருக்கி, பிலிப்பைன்ஸ் அமெரிக்கா ஆகிய நாடுகளில் 
நகர்பேசியூடாகவும் அல்லது அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிகளில்.edu என்று முடிகின்றவர்களும் ஜிமெயிலில் இணைந்து கொள்ளமுடியும். ஜிமெயில் அழைப்புக்களை பல்வேறு இணையத்தளங்களில் காணமுடியுமெனினும் ஜிமெயில் மின்னஞ்சல் முகவரிகளை விற்பது சட்டப்படி பிழையானது.
தொடர்ந்து வளர்ந்து கொண்டேயிருக்கும் இச்சேவை, மின்னஞ்சல்களைச் சேமித்து வைக்க 6.7 GB 11 மே 2008 அன்றைய நிலவரப்படி) இடத்தை தற்போது வழங்குகிறது. தொடக்கத்தில், 1 GB அளவாக இருந்த சேமிப்புத் திறன் முட்டாள்கள் நாளான ஏப்ரல் 1, 2005 முதல், ஜிமெயிலின் ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக 2 GB ஆக கூட்டப்பட்டது. ஆரம்பத்தில் இதன் வளர்ச்சிவீதம் கூடுதலாகவே இருந்தது. இதன் தற்போதைய வளர்ச்சி விகிதம் நாளுக்கு 3.348 மெகாபைட் ஆகும்.
ஜிமெயில் ஏஜாக்ஸ்ஸை மிகப்பெருமளவில் பாவிக்கின்றது (பயன்படுத்துகின்றது). தற்கால உலாவிகளின் ஜாவாஸ்கிரிப்ட் முறையைப் பயன்படுத்தி சிறந்த பயனர் அனுபவத்தைத் தருகின்றது. இதற்குஇன்டநெட் எக்ஸ்ப்ளோரர் 5.5, பயர்பாக்ஸ் 0.8+, மொஸிலா அப்ளிக்கேசன் ஸ்யூட் 1.4+, சவாரி 1.2.1+, நெட்ஸ்கேப் 7.1+, ஒபேரா 9+, உலாவிகள் அவசியம். பழைய உலாவிப் பதிப்புகளில் இன்ரநெட் எக்ஸ்ளோளர் 4.0+, நெட்ஸ்கேப் 4.07+, ஒபேரா 6.03+ அடிப்படை HTML பார்வையைத்தரும். ஜிமெயில் நகர்பேசிகளில் WAP முறையிலும் அணுகக்கூடியது.
ஏப்ரல் 12, 2006 முதல் கூகிள் காலண்டர் சேவையையும் ஒருங்கிணைத்துக் கொண்டது.
ஜிமெயிலின் அந்தரங்கத் தன்மை (Privacy policy) குறித்துக் கேள்விகள் எழுந்துள்ளன. ஜிமெயில் மின்னஞ்சல் கணக்குகள் அழிக்கப்பட்ட பின்னரும் சிறிது காலத்திற்கு இவை பேணப்படும். இது மட்டுமன்றி பொதுப் பாதுகாப்பிற்காக மின்னஞ்சல் படிக்கக் கூடக் கொடுக்கப்படும்.




ஜிமெயிலின் வசதிகள்

உரையாடற் பார்வைகள்

ஏனைய மின்னஞ்சல்கள் போன்றல்லாது ஜிமெயில், மறுமொழிகளை உரையாடற் பார்வையில் வைத்திருக்கும்  இப்புதிய புரட்சிகரமான சிந்தனையானது மின்னஞ்சல்களுக்கு ஓர் ஒழுங்குடன் விடையளிப்பதை இலகுவாக்கியுள்ளது. இதை கூகிள் செயற்படுத்தும் விதம் முற்றும் சரியெனக் கூறமுடியாதெனினும் இது சிறந்ததொரு முறையாகும். சிலசமயங்களில் மின்னஞ்சல் தலைப்பை மாற்றும் போது உரையாடல்கள் பிரிந்துவிடுகின்றன. சில சமயங்களில் தொடர்பில்லாத உரையாடல்கள் ஒன்று சேர்ந்து விடுகின்றன. அண்ணளவாக 100க்கு மேற்பட்ட உரையாடல்கள் இருப்பின் அவை இரண்டாக்கப்படும்; சில சமயங்களில் பல துண்டுகளுமாக்கப்படும். இச்சேவை தொடங்கப்பட்டபோது, ஓர் உரையாடலின் ஒரு மின்னஞ்சலை அழித்தபோது முழு உரையாடலும் அழிந்துவிடும் எனினும்,Trash This Message எனும் பொத்தான் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், இக்குறை சரிசெய்யப்பட்டுவிட்டது.

அடைவுகளுக்குள் வைப்பதை விடுத்து மேலொட்டு இடுதல்

அடைவுகளினுள் மின்னஞ்சல்களை வைத்தல் என்னும் நடவடிக்கையில் ஒரு படி மேலே போய் மேலொட்டு. (label) இடுதல் என்னும் நடவடிக்கையை ஜிமெயில் பயனர்கள் மேற்கொள்ள முடியும். ஏனெனில் ஒரு மின்னஞ்சல் பல மேலொட்டுக்களை கொண்டிருக்கலாம்; ஆனால், அடைவுகளுள் போட்டால் ஒரு மின்னஞ்சலை ஒரு அடைவில் மட்டும் தான் போடமுடியும். ஜிமெயிலில் குறித்த ஒரு மேலொட்டு உள்ள எல்லா மின்னஞ்சல்களையும் ஓரே நேரத்தில் பார்வையிடமுடியும். அத்துடன் இந்த மேலொட்டை கொண்டு மின்னஞ்சல்களைத் தேடவும் முடியும். ஜிமெயில் பயனர்கள், பிற மின்னஞ்சல் சேவைகளில் அடைவுகளில் போடும் முறையைப் போலவே இங்கும் மேலொட்டுகளை கையாளலாம். ஏனைய மின்னசல்களைப் போலவே இதுவும் மின்னஞ்சல்களை வடிகட்ட (filter) உதவும்.

தானாகவே சேமிக்கும் வசதி

உலாவிகளின் பிழை அல்லது மின்சாரத் தடை போன்றவற்றில் இருந்து உங்கள் மின்னஞ்சல்களைப் பாதுகாக்க நிமிடத்திற்கு ஒருமுறை தானாகவே சேமித்துக் கொள்ளும். மின்னஞ்சலில் இணைப்புகள் ஏதும் இருப்பின் அவற்றையும் தானாகவே சேமித்துக் கொள்ளும். ஜிமெயில் நிமிடத்திற்கு ஒருமுறை சேமிக்க முயலுமெனினும் மின்னஞ்சலின் அளவைப் பொறுத்து சேமிக்கும் நேரமானது மாற்றமடையும்.Ctrl+S (ஆப்பிள் கணினிகளில் Cmd+S) மூலமும் சேமிக்கலாம்.

விசைப்பலகை குறுக்குவழிகள்

சொடுக்கி (mouse) வழியாக அன்றி விசைப்பலகை வழியாகவும் ஜிமெயிலை பயன்படுத்தமுடியும். இந்தவசதிகளை நீங்கள் பயன்படுத்த விரும்பினால் விசைப்பலகைக் குறுக்குவழிகளைப் பார்க்கவும்

விருப்பதிற்கேற்ப புள்ளிகள்

ஜிமெயில் பயனர் பெயர்கள் யாவும் ஆறில் இருந்து முப்பது வரை (ஆறும் முப்பதும் உட்பட) எழுத்துக்கள், இலக்கங்கள் மற்றும் புள்ளிகளால் மாத்திதிரமேயானவை. உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப புள்ளிகளையிட்டுக் கொள்ளலாம். அதாவது ஜிமெயில் புள்ளிகளைக் கணக்கில் கொள்ளாது. அதாவது நீங்கள் விரும்பிய வண்ணம் புள்ளிகளைச் சேர்க்கவே இல்லாமற் பண்ணவோ இயலும். உதாரணமாக google@gmail.com எனும் மின்னஞ்சலானது goo.gle@gmail.com, g.o.o.g.l.e@gmail.com போன்ற எல்லாக் கணக்குகளிருந்தும் மின்னஞ்சலைப் பெற்றுக்கொள்ளும். எனினும் பயனர் கணக்கொன்றைப் புள்ளிகளுடன் உருவாக்க விரும்பினால் கணக்கை தொடங்கும் போதே புள்ளியை தர வேண்டும்.
எனவே புள்ளிகளால் மாத்திரம் மாறுபடும் பயனர் கணக்கை தொடங்க அனுமதிக்காது. எடுத்துக்காட்டுக்கு, john.doe@gmail.com, johndoe@gmail.com எனும் இரண்டு பயனர்களை எடுத்துக் கொண்டால் இரண்டு பயனர்களும் மற்ற பயனருக்கு வரும் மின்னஞ்சல்களைப் பெற்றுக் கொள்வர். (இப்பிரச்சினை ஜிமெயிலின் தொடக்கத்திலேயே ஏற்பட்டது.)


+ முகவரிகள்

ஜிமெயில் + முகவரிகளை ஆதரிக்கும். அதாவது மின்னஞ்சல்கள் ஜிமெயில்பயனர்+மேலதிகசொற்கள்@gmail.com இங்கே மேலதிகசொற்கள் எதுவாகவும் இருக்கலாம்.

கூகிள் டாக்குடன் கூட்டிணைவு

கூகிள் டாக் ஜபர் வலையமைப்பூடாக ஏனைய இணைப்பிலுள்ளவர்களுடன் நிகழ்நிலையில் உரையாட முடியும். கூகிள் டாக் உட்பட ஜபர் தொழில் நுட்பத்தை ஆதரிக்கும் வலையமைப்புக்களுடன் தொடர்பிலிருக்கமுடியும் (ஜிஸ்மோ திட்டம், Psi, Miranda IM மற்றும் iChat). வார்தைகளூடான நிகழ்நிலை உரையாட்களையே நிகழ்த்தமுடிவதோடு ஆக்கக்க்கூடியது 4 பேருடன் மாத்திரமே ஒரே நேரத்தில் உரையாடலை நிகழ்த்த முடியும். ஒலியூடான அழைப்புக்கள் கூகிள் டாக்கின் ஓர் குறிப்பிடத்தக்க வசதியாகும்.
2006ஆம் ஆண்டு பிற்பகுதியில் ஒலியஞ்சல் வசதியானது சேர்க்கப்பட்டது. இணைய இனைப்பொன்றை நிகழ்நிலையில் இல்லாத பயனர் ஒருவரிற்கு மின்னஞ்சல் ஊடாக ஒலியஞ்சலை அனுப்ப இயலும். கிடைக்கின்ற ஒலியழைப்புக்களை ஜிமெயிலில் சுட்டியிட்டுச் சேமித்துக் கொள்ளும். இது கூகிள் டாக்கைக் கணினியில் நிறுவாத பயனர்களுக்கு உதவுவதற்காகும். இன்னுமோர் வசதியானது கூகிள் டாக்கை கணினியில் நிறுவிய பயனர்கள் ஜிமெயிலில் இருந்தவாறே ஒலியழைப்புக்களை மேற்கொள்ளலாம். ஆயினும் இது கூகிள் டாக்கைக் கணினியில் நிறுவி அழைப்பை இணையமூடாக மேற்கொண்ட பயனருக்கே உதவும்.
ஜிமெயில் உரையாடல்களை ஜிமெயிலில் ஆவணப்படுத்த முடியும்.
ஜிமெயில் தொடர்புப் படங்கள் மற்றும் ஜிமெயிலில் ஒலியோசைகளைச் சேர்துக் கொண்டு உரையாடல்களில் ஈடுபடலாம்.
ஜிமெயில் உரையாடல் இல்லாத சாதாரண பார்வையொன்றையும் வழங்கும். இதுவே சாதாரணமாக உரையாடல் இன்றிய சாதாரண பார்வையாகும்.

கூகிள் காலண்டருடன் கூட்டிணைவு

ஏப்ரல் 13, 2006 கூகிள் காலண்டர் சேவையானது ஆரம்பிக்கப்பட்டது. இது பயனர்களுக்கு பல நாட்காட்டிகளை (காலண்டர்களை) உருவாக்கப் பயன்பட்டது. அதில் appointments போன்றவற்றைச் சேமித்து பிரத்தியேகப் பாவனைக்கோ அல்லது குறிபிட்டவர்களுடன் பகிரவோ அல்லது முற்றுமுழுதாக எல்லாரும் பார்கக்கூடியதாக இணையத்திலோ வைக்கலாம்.
இது முற்று முழுதாக ஜிமெயிலுடன் சேமிக்கப்படக்கூடியதுடன் மின்னஞ்சலை எழுதும்போதே நிகழ்வுகளைச் சேமித்துக் கொள்ளலாம். ஜிமெயிலைப் பாவிப்பவர்கள் இதற்கான அழைப்பைப் பெற்றுக் கொள்வார்கள் அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவோ மறுக்கவோ இயலும். மேலும் ஜிமெயில் மின்னஞ்சலிலுள்ள முகவரிகள் மற்றும் திகதி போன்ற விடயங்களைப் அறியமுயன்று பயனர்களுக்கு காலண்டரில் அந்நிகழ்வைச் சேமிப்பதற்கு உதவும்.

வடிகட்டுதல்

ஏனைய மின்னஞ்சல் சேவைகளைப் போலவே வருகின்ற மின்னஞ்சல்களை அவை யாரிடமிருந்து வருகின்றன, யாருக்கு வருகின்றது, என்ன விடயமாக வருகின்றன, ஏதாவது இணைக்கப்பட்ட கோப்புக்கள் உள்ளனவா என்பவற்றை வைத்து ஜிமெயிலானது வடிகட்டும். ஜிமெயில், ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட நடவடிக்கைகளைக் கையாண்டு இதை நிறைவேற்றும். ஆவணப்படுத்தல், மேலொட்டிடுதல், குப்பைத் தொட்டிக்குள் அனுப்புதல், மற்றோர் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புதல் போன்ற நடவடிக்கைகளையும் செய்யலாம்.

தேடுதல்

ஜிமெயிலை கீழ் வரும் அடிப்படைகளைக் கொண்டு தேடலாம்.
  • மின்னஞ்சல் உரை மற்றும் அல்லது பொருள்
  • ஏதேனும் சொல்லைக் கொண்டுள்ளதா இல்லையா
  • மின்னஞ்சல் யாரிடமிருந்து வந்தது அல்லது யாருக்கு அனுப்பப்பட்டது
  • மின்னஞ்சல் இருக்கும் இடம் (அனைத்து மின்னஞ்சல்கள், பெற்ற மின்னஞ்சல்கள், நட்சத்திரக் குறியிடப்பட்டவை, அனுப்பப்பட்ட மின்னஞ்சல்கள், குப்பைத்தொட்டியில் உள்ளவை, வாசிக்கப்பட்ட அஞ்சல்கள், வாசிக்கப்படாத அஞ்சல்கள்)
  • குறிப்பிட்ட திகதிக்குள் வந்த அஞ்சல்கள்

தொடர்புகள்
ஜிமெயில், ஒரு மின்னஞ்சலை அனுப்பும் போதே அனுப்பப்படும் முகவரியைத் தானாகவே சேமித்துவிடும். ஒரு மின்னஞ்சலை அனுப்பும்போது பெயரில் ஏதேனும் மாற்றங்களிருப்பின் அதனையும் தானாகவே செய்து கொள்ளும்.
ஜிமெயில், பயனர் அனுப்பும் முகவரி, நகல் சென்று சேரும் முகவரி, மறை நகல் அனுப்பப்படும் முகவரி போன்றவற்றில் தட்டச்சிட தொடங்கும் போது அதனுடன் தொடர்புடைய முகவரிகளைக் காட்டும். சிறிய கூகிளின் தேடலானது மிகவும் திறன் வாய்ந்ததன்று எனினும் பெயர் மற்றும் பிரதான மின்னஞ்சல் முகவரிக்ளைத் தேட உதவும். எனினும் இது சிறந்த இலகுவான இடைமுகத்தையே தருகின்றது.
ஜிமெயிலின் தானாகவே சேமிக்கும் வழக்கத்தினால் ஒவ்வோர் மின்னஞ்சலிற்கும் உரியவர் யார் எனக் கண்டுபிடிக்காது ஒவ்வோர் பயனரை உருவாக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல் உடையவர்களிற்கு இது ஜிமெயில் தொடர்புகளைத் தேவையற்ற விதத்தில் அதிகரிக்கும். ஜிமெயில் பயனர்கள் தொடர்புகளுக்குப் போய்த் தொடர்புகளை மேம்படுத்தவும் முடியும். யாகூ மெயில்,ஹொட்மெயில், யூடோறா, அவுட்லுக் மேலும் பல மின்னஞ்சற் சேவைகளில் காற்புள்ளியினால் வேறுபடுத்தப்பட்ட கோப்பு முறையில் தொடர்புகளைச் சேமிக்ககூடிய எல்லா மின்னஞ்சல்களிலிருந்தும்தொடர்புகளை இங்கே பெற்றுக் கொள்ளலாம். ஜிமெயிலில் இருந்தும் காற்புள்ளியினால் வேறுபடுத்தப்பட்ட கோப்பு முறையில் தொடர்புகளை ஏற்ற முடியும்.
அண்மையில் குழுத்தொடர்புகள் என்னும் வசதியானது அறிமுகப் படுத்தப்பட்டது. இம்முறையில் மேலொட்டுக்கள் மூலமாக ஒரு குழுவிற்கு மின்னஞ்சல்கள் அனுப்பமுடியும்.

உலகளாவிய மொழிகளுக்கான ஆதரவு

ஜிமெயில் தற்போது தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் இடைமுகத்தை அளிக்கின்றது. அரபு, பல்கேரிய, கற்றலன், குரோத்தியன், செக், டெனிஸ், டச்சு, எஸ்தோனிய, பினிஷ், பிரெஞ்சு, ஜேர்மன், கிரேக்கம், ஹீபுறு, ஹிந்தி, ஹங்கேரியன், ஐஸ்லாந்திக், இந்தோனேசிய, இத்தாலிய, ஜப்பானிய, கொரிய, லத்விய, லித்துவேனிய, போலிஷ், போத்துக்கீசிய, உரோமானிய, ரஷ்ய, சேர்பிய, இலகுவாக்கப் பட்ட சீனம், ஸ்லோவாக், ஸ்லோவேனியன், ஸ்பானிய, ஸ்சுவீடிஸ், ராகாலொக், தாய், சம்பிரதாய சீனம், துருக்கி, பிரித்தானிய ஆங்கிலம், அமெரிக்க ஆங்கிலம், உக்ரேனிய, வியட்நாமிய மொழிகளில் இடைமுகமானது வெளிவந்துள்ளது. எனினும் புதுப்புது வசதிகள் ஜிமெயிலில் அறிமுகம் செய்யப்படுவதால அமெரிக்க ஆங்கிலத்திற்கு இணையாக உடனடியாக ஏனைய மொழிகளில் அறிமுகப் படுத்தப்படுவதில்லை. இம்மொழிபெயர்ப்புக்கள் யாவும் தன்னார்வலர்களாலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிகழ்ச்சி கூகிள் உங்கள் மொழியில் (Google in your language) என்றழைக்கப்படுகின்றது.
ஜிமெயின் தமிழாக்கப் பணிகள் டிசெம்பர் 2005 அளவில் முடிவடைந்தன.பின்னர் கூகிள் அவ்வப்போது சொற்களைச் சேர்த்ததாலும் தமிழாக்கத்தில் ஈடுபடுவோரின் ஒருங்கிணைவு இன்மையாலும் அதாவது சொற்களைத் தமிழாக்கியவர்களின் விபரங்களை ஜிமெயில் வெளிவிடாததாலும் மைக்ரோசாப்ட் கலைச் சொல்லாக்தில் ஈடுபட்டோரை இணையமூடாகக் கௌரவித்தது போன்று கூகிள் நடந்து கொள்ளாமையினாலும் ஜிமெயில் தமிழில் இன்னமும் வெளிவரவில்லை.

செய்தியோடை படிப்பான்

ஜிமெயிலின் ஓராண்டு நிறைவை அடுத்து, பக்கத்தின் மேல் ஒரு வரியில் செய்தியோடைகளினூடு பெறப்படும் தகவல்களை காண்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயனர் திறந்து பார்வையிடும் மின்னஞ்சலில் காணப்படும் சொற்களுக்கு பொருத்தமான செய்தியோடைத்தகவல் எழுந்தமானமாக காண்பிக்கப்படும். இந்தத் தேர்வானது இப்போது எல்லா ஜிமெயில் கணக்குகளில் காணப்படுகின்றது, இது வலைத்துண்டு (web clip) என்று அழைக்கப் படுகின்றது.

இணைப்புக்கள்

ஆரம்பத்தில் 10 MB அளவிலான இணைப்பு (Attachment) வசட்தியினை வழங்கிய ஜிமெயில் ஆதரிக்கின்றது 22 மே, 2007 முதல் 20 மெகாபைட் இடவசதியாக இணைப்பு அளவை இருமடங்காக்கிக் கொண்டது. எனினும் பல மின்னஞ்சல் சேவை வழங்குனர்கள் இன்றளவும் 10 மெகாபடை அளவிலான இணைப்பளவையே ஆதரிப்பதால் வேறுசேவை வழங்குனர்களிற்கு அனுப்பப்படும் மின்னஞ்சல் 10 மெகாபைட் வரையிலான இணைப்புக்களை இணைப்பதே பொருத்தமானது. 20 மெகாபைட் இணைப்பு அளவெனினும் பிரச்சினைகள் ஏதுமின்றி உரியவரிடம் சேர்பதற்காக 17மெகாபைட் வரையிலான இணைப்பைச் சேர்ப்பதே உசிதமானது என கூகிள் குறிப்பிட்டுள்ளது.  விண்டோஸில் இயங்கும் .exe கோப்புக்களை ஆதரிக்காது. இக்கோப்பானது சுருக்கப்பட்ட zip, .tar, .tgz, .taz, .z, .gz கோப்புக்களில் இருந்தால் கூட அனுமதிக்காதெனினும் கோப்பின் நீட்சிப்பெயரை மேற்குறிப்பிட்ட நீட்சிகள் அல்லாமல் எடுத்துக்காட்டாக .book என மாற்றினால் அனுமதிக்கும்.

Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.