அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube


“ஆழ்கடல்ல இருக்கிறதைக்கூட கண்டு பிடிச்சுடலாம். ஆனா ஒரு பெண்ணோட மனசுல இருக்கிறதை கண்டே பிடிக்க முடியாது”ன்னு சொல்லுவாங்க. அது ஓரளவுக்கு உண்மைதாங்க. அவங்க என்ன நினைக்குறாங்களோ, அதை சூசகமா வார்த்தைகள்'ல வெளிப்படுத்துவாங்க. ஆனா நம்மளாலதான் அதை புரிஞ்சுக்க முடியறது இல்லை. உதாரணத்துக்கு அவங்க சூசகமா சொல்லக்கூடியா வார்த்தைகளையும், அதுக்கு பின்னணியில இருக்கிற “உண்மையான” அர்த்தத்தையும் இப்போ நாம பார்க்கலாம்.

1 1 உங்களுக்கு என்ன பிடிக்கும்? = இந்தக் கேள்வையை அவங்க கேட்டாங்கன்னா உடனே நாம வரிஞ்சுகட்டிக்கிட்டு நமக்கு பிடிச்சதை எல்லாம் ஒப்பிப்போம். ஆனா இந்தக்கேள்விக்கு பின்னாடி இருக்கிற அர்த்தம் என்ன தெரியுமா? உனக்கு பிடிக்கிற விஷயத்தை எல்லாம் என்னால ஃபாலோ பண்ண முடியாது, அப்படிங்கிறதுதான் இந்த கேள்விக்கு விளக்கம்..


2 அந்த பொண்னு எவ்ளோ அழகா புடவை கட்டி இருக்கா இல்ல = அப்படின்னு எதாவது ஒரு விளம்பரத்தை பார்த்திட்டு சொன்னா, உடனே நாம் அந்த பொண்ணோட அழகைப்பத்திதான் யோசிப்போம். ஆனா, அவங்க நம்மகிட்ட சொல்லவர்றது என்னன்னா, அந்த கடைக்கு கூட்டிட்டு போய் அதே மாதிரி புடவையை எனக்கும் வாங்கிக்குடுடா அப்படிங்கிறதுதான் இதுக்கு அர்த்தம்


3. இன்னைக்கு என்ன சமையல் பண்ணட்டும்? = இந்தக்கேள்வியைக் கேட்டுட்டா அடடா நமம பொண்டாட்டி நம்மகிட்ட கேட்டுகிட்டுத்தான் சமையலே செய்யுறாளே அப்படின்னு நீங்க புளங்காகிதம் அடையக்கூடாது. டேய்! இன்னைக்கு உன்னைக்கேட்டுதான் சமைக்குறேன். மிச்சமாச்சுன்னா என்னால நாய்'க்கு எல்லாம் துக்கிப்போட முடியாது. எல்லாத்தையும் நீதான் சாப்பிட்டு தொலைக்கணும். இதுதான் இந்த கேள்விக்கு அர்த்தம்.4. உங்களுக்கு எத்தனை ஃபிரண்ட்ஸ் இருக்காங்க? = இந்த கேள்விக்கு அர்த்தம் என்ன தெரியுமா? உங்க பிரண்ட்ஸுங்கன்னு சொல்லி ஒருத்தன் கூட வீட்டுக்கு வரக்கூடாது. உனக்கு வடிச்சு கொட்டுறதே தண்டம், இதுல அவனுங்களுக்கு வேற என்னால் வடிச்சு கொட்ட முடியாது. இதுதான் இந்த கேள்விக்கு அர்த்தம்.

5. என்னமோ பண்ணுங்க = பரவாயில்லை நம்ம சாய்ஸுக்கு விட்டுட்டாளே’ன்னு நீங்க யோசிச்சீங்கன்னா, உங்களை விட இளிச்சவாயன் இந்த உலகத்துலேயே இருக்க முடியாது நீயெல்லாம் திருந்தவே மாட்டே. எனக்கு இது பிடிக்கலை. இதுக்கு மீறி எதாவது செஞ்சேன்னா, மவனே தொலைச்சு கட்டிடுவேன். அப்படிங்கிறதுதான் இந்த வார்த்தைக்கு அர்த்தம்.

6. எல்லாத்தையும் நான் பொறுப்பா பார்த்துக்குறேன் = இந்த வார்த்தைய சொன்ன உடனே உங்களுக்கு உச்சி குளிர்ந்திடுமே. அப்படியெல்லாம் சின்னப்புள்ளத்தனமா யோசிக்கக்கூடாது. இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் தெரியுமா? எப்பபார்த்தாலும் தண்டத்துக்கு ஊர் சுத்திகிட்டு இருக்குறதே உனக்கு பொழப்பா இருக்கு. இதுல குடும்பத்தை எங்கே கவனிச்சுக்க போறே? மொதல்ல சம்பளக்கவரை என் கையில கொடு. இதுதான் இந்த வார்த்தைக்கு அர்த்தம்


7. நம்ம பையன் ஸ்கூல்'ல பேரண்ட்ஸ் மீட்டிங் இருக்காம் = அக்கறையா நம்ம கூப்பிடுறாங்கன்னு நீங்க தப்பா திங்க் பண்ண கூடாது. இந்த வார்த்தக்கு என்ன அர்த்தம் தெரியுமா? உன் புள்ளையோட லட்சணத்தை நீயும் தெரிஞ்சுக்க வேணாம் ? ஸ்கூல்ல மிஸ்’கிட்ட நான் மட்டும் திட்டு வாங்கினா போதுமா?. நீயும் ஒரு நாள் வந்து வாங்கிப்பாரு. அப்பத் தெரியும்.


8. இந்த ஃபோன்'ல சரியாவே சிக்னலே கிடைக்கமாட்டேங்குது = இந்த வார்த்தையை சொன்ன உடனே, ஏதாவது நெட் வொர்க் பிராப்ளமா இருக்கும்ன்னு நீங்க சொல்லுவீங்க. ஆனா அவங்க என்ன சொல்ல வர்றாங்க தெரியுமா? நட்டு கழண்டவனே! நீ மட்டும் ஸ்டைலா ஃபோன் வாங்கி வெச்சிருக்கே. எனக்கு மட்டும் செகண்ட் ஹாண்ட்'ல, அதுவும் இத்துப்போன மொபைல் வாங்கிக் கொடுத்திருக்கே. மொதல்ல இதை மாத்திட்டு நோக்கியா N 95 வாங்கிக்கொடு. அப்படிங்கிறதுதான் இதுக்கு அர்த்தம்.


9. இந்த நகைபோட்டா கழுத்துல ஒரே அரிப்பா இருக்கு = அப்படின்னா உடனே கழட்டி வெச்சிடுன்னு நீங்க சொல்லக்கூடாது கவரிங்'ல வாங்கிக்கொடுத்தா இப்படித்தான் இருக்கும். நகை வாங்கிக்கொடுத்து எத்தனை வருஷம் ஆச்சு? மொதல்ல ஒரு நகைக்கடைக்கு கூட்டிட்டு போய், 916 ஹால்மார்க் நகையா வாங்கிக்கொடு. அப்படின்னுதான் அவங்க சொல்ல வர்றாங்க.


10. எவ்ளோ வேலைதாங்க நீங்க செய்யுவீங்க ? = உடனே நம்ம மேல எவ்ளோ பரிதாபப்படுறாங்க'ன்னு நீங்களா ஒரு செண்டிமெண்ட் உருவாக்கிக்காதீங்க. அட அறிவுகெட்டவனே.. உன் வேலையுண்டு, வீடு உண்டுன்னு வந்து சேர வேண்டியதுதானே. கண்டவன் பிரச்சனையில எல்லாம் நீ ஏன் தலையிட்டு ஓவரா சீன் போடுறே? அப்படிங்கிறதைத்தான் அவங்க சொல்லாம சொல்றாங்க.


11. ஏங்க! இந்த சத்யம் தியேட்டர் எங்கே இருக்கு? = நீ மட்டும் உன் ஃபிரண்ட்ஸுங்களோட போய் கண்ட படத்தையும் பார்த்திட்டு வந்திடுறே. என்னை என்னைக்காவது அந்த தியேட்டருக்கு எல்லாம் கூட்டிட்டு போயிருக்கியா? - அப்படின்னு உங்களை கேட்கறதுக்கு பதிலாத்தான் இந்தக் கேள்வியை அவங்க கேட்குறாங்க.

நண்பர்களே... இந்த உண்டான அர்த்தத்தை எல்லாம் மனப்பாடம் பண்ணி வெச்சுக்குக்குங்க. ஒருவேளை உங்க மனைவியோ, இல்லை காதலியோ இந்த மாதிரி கேள்வியை உங்ககிட்ட கேட்டாங்கன்னா, அதுக்கு என்ன அர்த்தம்'ன்னு தெரியாம நீங்க முழிக்க கூடாது இல்லை. 


Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.