உலககோப்பையில் விளையாடும் 23 பேர் கொண்ட பிரேசில் அணி வீரர்களை முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான துங்கா அறிவித்தார்.
நட்சத்திர வீரரான ரொனால்டினோவுக்கு அணியில் இடமில்லை.
பிரேசில் அணி வீரர்கள் விவரம்:-
கோல் கீப்பர்கள்:- ஜூலியோ சீசர், கோமஸ், டோனி.
பின்களம்:- மய்சான், டேனியல் அல்வெஸ், மைக்கேல் பாஸ்டாஸ், கில் பாட்டோ லுசியோ, ஜூயன், லுயிசா திசோ சில்வா.
நடுகளம்:- இளனோ, ககா, கில்பர்ட்டோ சில்வா, ஜோஸ்யூ, ரமிரஸ், பெலிப் மேலோ, கெல்பர்சன், பாபிஸ்டா.
முன்களம்:- லூயிஸ் பேபினோ, நில்மர், ரோபினோ, கிராபைல்.
பிரேசில் அணி 5 முறை உலககோப்பையை (1958, 1962, 1970, 1994, 2002) கைப் பற்றி உள்ளது.
6-வது முறையாக கோப்பையை வெல்லும் வேட்கையில் இருக்கிறது பிரேசில் அணி. தற்போது நடைபெற இருக்கும் போட்டியில் பிரேசில் அணி “ஜி” பிரிவில் இடம் பெற்று உள்ளது. போர்ச்சுக்கல், ஐவேரி கோஸ்ட், வட கொரியா ஆகிய நாடுகளும் அந்த பிரிவில் உள்ளன.
நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது. ஜிம்பாப்வே அணி உலககோப்பை போட்டிக்கு தகுதி பெறவில்லை.
மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் பராகுவே 2-0 என்ற கணக்கில் கிரீஸ் அணியை வென்றது.
0 comments:
Post a Comment