அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

Rudy Koertzen

சர்வதேச கிரிக்கெட்டில் புகழ் பெற்ற நடுவர்களில் ஒருவரான தென் ஆப்பிரிக்காவின் ரூடி கொயர்ட்சன் ஜூலை மாதம் ஓய்வு பெறவுள்ளார்.

ஆயிரம் பேட்ஸ்மேன்களுக்கு மேல் அவுட் கொடுத்தவர் கொயர்ட்சன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி பேனல் நடுவராக இருந்து வரும் ரூடிக்கு வயது 61 ஆகிறது. கடந்த 18 வருடங்களாக நடுவராக செயல்பட்டு வரும் இவர், 106 டெஸ்ட், 14 டுவென்டி 20 போட்டிகள், 209 ஒரு நாள் போட்டிகளில் நடுவராக செயல்பட்டுள்ளார்.

அவுட் கொடுக்கும்போது இவர் செய்யும் ஸ்டைல் பிரசித்தி பெற்றது. இந்த நிலையில், ஜூலை மாதம் நடக்கும் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார் கொயர்ட்சன்.

தற்போது ஜிம்பாப்வேயில் நடந்து வரும் இந்தியா, இலங்கை, ஜிம்பாப்வே இடையிலான முத்தரப்பு தொடரில் நடுவராக பணியாற்றி வரும் கொயர்ட்சன் ஓய்வு குறித்து கூறுகையில், 

சர்வதேச போட்டிகளில் 18 ஆண்டுகளாக அம்பயராக இருந்தது வியக்கத்தக்க வகையில் உள்ளது. இந்த காலத்தில் நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் மறக்கமுடியாதவை. எதிர்காலத்தில் இளம் அம்பயர்களுக்கு எனது அனுபவம் தேவைப்படும் பட்சத்தில், அவர்களுக்கு, மகிழ்ச்சியுடன் உதவத் தயாராக இருக்கிறேன் என்று கூறினார்

Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.