உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் போர்ச்சுக்கல் 7-0 என்ற கோல் கணக்கில் வடகொரியாவை வீழ்த்தியது.
முதல் பாதி ஆட்டத்தில் ஒரு கோல், இரண்டாவது பாதி ஆட்டத்தில் அடுத்தடுத்து 6 கோல்கள் என மொத்தம் 7 கோல்கள் அடித்து போர்ச்சுக்கல் அணி கோல் மழை பொழிந்தது. இதன்மூலம் இந்த உலகக்கோப்பையில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த அணி என்ற பெருமையைப் பெற்றது போர்ச்சுக்கல்.
முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் ஒரு கோல் மட்டுமே அடித்திருந்த போர்ச்சுக்கல், இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியதும் வெளுத்து வாங்கியது. 59-வது நிமிடத்தில் ஷிமோவும், 56-வது நிமிடத்தில் அல்மெய்டாவும், 60-வது நிமிடத்தில் தியாகோவும் கோல் அடித்து கால்பந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர்.
81-வது நிமிடத்தில் லீட்சனும், 87-வது நிமிடத்தில் ரொனால்டோவும், 89-வது நிமிடத்தில் தியாகோவும் கோல் போட்டனர்.
இறுதியில் போர்ச்சுக்கல் அணி 7 கோல்களை போட்டு 7-0 என்ற கோல் கணக்கில் வடகொரியாவை வீழ்த்தியது. இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் மிகச்சிறந்த ஆட்டமாக இந்த ஆட்டம் அமைந்தது.
1 comments:
அருமையான பதிவு...
உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_20.html
Post a Comment