அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube






“ராமாயணம்” விஞ்ஞான யுகத்தில் நடப்பது மாதிரியான கதை...








கட்டப் பஞ்சாயத்துக்கள் நடத்தி ஊரையே கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் விக்ரம். ஒரே தங்கை பிரியாமணி உயர் சாதி இளைஞனை காதலிக்கிறார். இரு குடும்ப சம்மதத்துடன் திருமணம் நடக்கையில் மண மேடையில் அசம்பாவிதம். என் கவுண்டர் போலீஸ் சூப்பிரண்டு பிருதிவிராஜ் மண்டபத்தில் புகுந்து விக்ரமை சுடுகிறார். பிரியாமணியை போலீசார் இழுத்து சென்று கற்பழிக்கின்றனர். அவமானத்தில் அவர் தற்கொலை செய்கிறார்.


பழிதீர்க்க பிருதிவிராஜ் மனைவி ஐஸ்வர்ராயை விக்ரம் கடத்தி காட்டுக்குள் வைக்கிறார். அவரை மீட்க போலீஸ் படையுடன் பிருதிவிராஜ் காட்டில் நுழைகிறார். அங்கு இருவருக்கும் நடக்கும் யுத்தமும் ஐஸ்வர்யாராய் மீட்கப்பட்டாரா என்பதும் கிளைமாக்ஸ்.


முரட்டுத்தனமாக இருவருக்குள் நடக்கும் மோதலில் கவித்துவமான காதலை வைத்து இதயங்களை கனக்க செய்துள்ளார் இயக்குனர் மணிரத்னம்.


போலீசாரை விக்ரம் உயிரோடு எரித்து கொல்வது போல் எதிர்பார்ப்போடு கதை ஆரம்பிக்கிறது. படகில் செல்லும் ஐஸ்வர்யாராயை கடத்தியதும் சூடு பிடிக்கிறது. பிறகு போலீஸ் சேசிங் சண்டை என நீள்கிறது.
கட்டுமஸ்தான முரடனுக்குள் விக்ரம் வாழ்கிறார். டப டப வென்ற கூச்சலுடன் மண்டையில் அடித்து எதிரிகளை ஆவேசமாக துவம்சம் செய்கையிலும் ஐஸ்வர்யாராயை கை கால்கள் கட்டி இம்சிப்பதிலும் அசல் ராவணனாகவே தெரிகிறார். ஐஸ்வர்யாராயை சுட்டுக் கொல்ல துணிவது திக்.
 
ஐஸ் அழகில் கிறங்குவது அவரை தொடாமலேயே ரசிப்பது அழுத்தமானவை. காட்டில் என்னுடனேயே இருந்து விடுகிறாயா என கேட்கும் ஏக்கமும் பிருதிவிராஜ் மேல் காட்டும் பொறாமையும் நடிப்பில் உச்சம் தொடுபவை...


சந்தேகித்த கணவனை உதறி விட்டு ஐஸ்வர்யாராய் காட்டுக்குள் திரும்பி வந்ததை பார்த்து உருகுவதில் உயிரைத் தொடுகிறார். அப்போது இருவருக்கும் நடக்கும் வசன உரையாடல் ஜீவன். தொங்கு பாலத்தில் பிருதிவிராஜுடன் மோதும் சண்டை காட்சி சீட் நுணிக்கு இழுக்கிறது.
ஐஸ்வர்யாராய், அழகிலும் விக்ரமுடன் போட்டி போடும் நடிப்பிலும் ஜொலிக்கிறார். மழையில் சகதி காட்டில் எதிரிகளிடம் சிக்கி ஜீவமரண போராட்டம் நடத்துகிறார். குழிகள், குகைகள் சறுக்கு பாறைகளில் ஏறி இறங்கி நிறைய மெனக்கட்டுள்ளார். கணவன் சந்தேகத்தில் உடைவதும் விக்ரமுக்குள் ராமன் இருப்பதை உணர்ந்து காப்பாற்ற துடிப்பதும் வலுவானவை..


பிருதிவிராஜ் மிடுக்கான வில்லன் போலீஸ். விக்ரம் அண்ணனாக பிரபு, தங்கையாக பிரியாமணி, தம்பியாக முன்னா வலுவான கேரக்டர்கள். வன ஊழியராக வரும் கார்த்திக் கலகலப்பு.... ராசாத்தி என்ற அரவாணியாக வையாபுரி வருகிறார்.

 
ஏ.ஆர். ரகுமான் இசையும், வைரமுத்துவின் பாடல் வரிகளும் நீர் வீழ்ச்சி, பசுமைகளை அள்ளி கண்களில்அப்பும் சந்தோஷ் சிவன், மணிகண்டன் ஒளிப்பதிவும் தூக்கி நிறுத்துகின்றன.


விக்ரமின் கட்ட பஞ்சாயத்துகளும் அங்கு வசிக்கும் மக்களும் வட இந்திய சாயலில் தமிழுக்கு அன்னியப்படுகின்றனர். ஆரம்ப சீன்கள் பிரமாண்டத்துக்குள் மெதுவாய் நகர்கிறது. ஆனாலும் இடைவேளைக்கு பிறகு வரும் விறு விறுப்பும் முத்திரை பதிக்கும் கிளைமாக்சும் குறைகளை மறக்கடிக்க செய்கின்றன.

மணிரத்னம் கட்டிய வலுவான ராவண ராஜ்ஜியம்.


நன்றி மாலை மலர்






Post Comment


2 comments:

ஆட்டையாம்பட்டி அம்பி said...

இங்கு பலரது விமர்சனங்களைப்படிதேன். அதில் ஐஸ் அவர்கள் சீதை கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார்கள் என்று.

அப்படி இருக்கும் போது சீதையை எப்பொழுதும் முழு மாரைக் காட்டிக்கொண்டு எப்படி? இது சீதையை அசிங்கமா காட்டுவது ஆகாதா? இந்து மத்ததை புண்படுத்துவது ஆகாதா?

சீதைக்கு ராவணன் மீது காதல் (மையல்) இருப்பதாக காட்டுவது இந்து மத்ததை புண் படுத்துவது ஆகாதா?

ராமாரை கோழையாகா காட்டுவது (பேடி என்று வால்மீகி சொல்லிருந்தாலும்) -ப்ரித்த்விக்கு ஐஸ் ராவானனிடமிருந்து உயர் பிட்சை வாங்கிக் கொடுப்பது இந்து மத்ததை புண் படுத்துவது ஆகாதா?

ராமர் தமிழனுக்கு ஒரு ஹீரோ தான்---ரஜினிகாந்த் மாதிர்! இது தமிழர் மனதைப் புன்படுத்தாதா? சரி அதை விடுங்கள.

இதே படத்தை அப்படியே நூற்றுக்கு நூறு---எதையும் மாற்றாமல்-அப்பபடியே ஒரு சீமானோ அல்லது மணிவண்ணனோ அல்லது சத்யராஜோ எடுத்து இருந்தால் நம்ம ராமகோபாலன் என்ன செய்திருப்பார்?

ramalingam said...

//நம்ம ராமகோபாலன் என்ன செய்திருப்பார்//
சரியான கேள்வி.

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.