தோடர்கள் தமிழ் நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் வாழும் ஒரு பழங்குடி இனத்தவராவர். இவர்கள் தோடா மொழி பேசுகின்றனர். மந்து என்று அவர்களால் அழைக்கப்படும் அவர்களது வசிப்பிடம் பொதுவாக மூங்கில் கொண்டுச் செய்யப்படுகிறது.
எருமை வளர்ர்பு இவர்களது முதன்மைத் தொழிலாகும். எனவே பெரும்பாலும் இவர்கள் வாழ்க்கை எருமை மாடுகளைச் சுற்றியே அமைகின்றது. தற்போது பல தோடர்கள் மந்துகளை விடுத்து மேற்கத்திய வகை வீடுகளில் வசித்து வருகின்றனர்.
தோடர்குல ஆண்கள் வீரத்தினை வெளிக்காட்ட மந்துகளுக்கு எதிரே வைக்கப்பட்டிருக்கும் பெரிய கல்லை மார்புக்கு மேலே உயர்த்திக் காட்டுவர்.
தோடர்களில் இளையோர் வயதில் முதிர்ந்தோரைக் கண்டால் மண்டியிட்டு வணங்க வேண்டும். முதியவர் இளையவரில் நெற்றியில் தனது பாதத்தை வைத்து பதுக்-பதுக் என்று சொல்லி வாழ்த்துவார்
இவர்கள் முற்காலத்தில் பல்கணவ முறையைக் கொண்டிருந்தனர். இம்முறையின் படி தோடர் குலப் பெண் ஒருவனை மணந்து கொண்டால் அவனுக்கு மட்டுமன்றி, அவன் உடன் பிறந்தோருக்கும் மனைவியாகிறாள். திருமணம், மண முறிவு போன்றவற்றில் பெண்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு
தோடர்களின் 'விசித்திர' பழக்கம்
நீலகிரி மாவட்டம் முழுவதும், 135 மந்துகளில் வசித்து வந்த தோடரின மக்கள், தற்போது 62 மந்துகளில் தான் வசிக்கின்றனர். இம்மக்கள், "பொலிவெஸ்த்' என்னும் பாண்டவர் கோவிலில் வழிபாடு நடத்துகின்றனர். பழமையான கலாசாரங்களையும், நடைமுறைகளையும் கொண்ட வர்கள் தோடர்கள்.
இவர்களின் அன்றாட வாழ்வு முறை, உடை, வழிபாடு ஆகியவை மற்றவர்களுடன் ஒப்பிடும் போது வித்தியாசமானவை. இவர்களின் கோவில்கள், "அவ்வல்' என்ற புல் கொண்டு அமைக்கப்படுகிறது. இந்த கோவில் 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகிறது.
பாரம்பரிய முறைப்படி பால் சோறு சமைத்து உண்டு, பாண்டவர் கோவிலில் வழிபாடு நடத்துவது தோடர் இன மக்களின் வழக்கமாக உள்ளது. இந்த வழிபாட்டின் போது மந்தின் பெரியவர்கள், சிறியவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவர். மற்ற இனங்களில் உள்ளது போல் இல்லாது, குனிந்து வணங்கும் சிறியவர்களை தங்கள் கால்களால் ஆசீர்வாதம் வழங்கும் பழக்கம் தோடர்களிடம் நிலவுகிறது
நாகரீகமடைந்த தோடர் இனத்தவரின் வீடுகள் இவை:
2 comments:
Your blog is a fantastic one to read varieties.
Keep it up!!
thxxxxx manikkam...............
Post a Comment