மது பிரியர்களில் பெரும்பாலானோர் “பீர்” குடிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஏனெனில் அதில் குறைந்த அளவில் ஆல்கஹால் கலக்கப்பட்டிருப்பதாக கருத்து தெரிவிக்கின்றனர்.
அதில், உண்மை இருந்தாலும், தற்போது மற்ற மதுபானங்களை விட பீர் சிறந்தது. உடல் நலத்திற்கு கேடு விளைவிக்காதது என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
லண்டனில் உள்ள பீர் அகாடமி சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டது. பீரில் வைட்டமின்கள், நார்ச் சத்து, தாது பொருட்கள் போன் றவை அதிகம் உள்ளது. மற்ற மது பானங்களை விட நச்சுத் தன்மை வாய்ந்த ரசாயன பொருட்கள் இதில் மிக குறைவாக உள்ளது. மேலும் பீரில் உள்ள வைட்ட மின்கள் உடல் நலத்தை பேணி காக்கிறது.
இதில் உள்ள சிலிகான் போன்ற தாது பொருட்கள் இருப்பதால் எலும்பை உறுதிப்படுத்துகிறது என்பது அந்த ஆய்வில் தெரியவந்துள் ளது. எனவே இங்கிலாந்தில் உள்ள 68 சதவீதம் பேர் பீர் குடிப்பதாகவும் ஆய்வறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.
பீரில் கொழுப்புச்சத்து இருப்பதாக 10 சதவீதம் பேரும், ரசாயன பொருட்கள் இருப்பதாக 13 சதவீதம் பேரும் கருதுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் இங்கிலாந்தில் மூன்றில் இரண்டு மடங்கு மக்கள் பீரை தங்கள் தேசிய பானமாக கருதுவதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
1 comments:
//மொத்தத்தில் இங்கிலாந்தில் மூன்றில் இரண்டு மடங்கு மக்கள் பீரை தங்கள் தேசிய பானமாக கருதுவதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.// :)
Post a Comment