காலனி ஆதிக்கநாடுகள் சந்திரனிலும் கால் ஊன்றவேண்டும் என்று ஆசைப்படலாம். ஆனால் அந்த ஆசை நிறைவேறுவது அவ்வளவு எளிதல்ல.
சந்திரனில் வசிக்கவேண்டுமென்றால்
சுவாசிக்க காற்று வேண்டும்...
குடிக்க நீர் வேண்டும்...
உண்ண உணவுவேண்டும்...
சரியான காற்றழுத்தத்தில் வசிப்பிடம் வேண்டும்...
எரிபொருள் வேண்டும்...
இவ்வளவு வசதிகளையும் சந்திரனிலேயே தேடிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் பூமியிலிருந்து சந்திரனுக்கு கொண்டு செல்லும் ஒவ்வொரு பவுண்டு எடைக்கும் 50,000 டாலர்கள் செலவு பிடிக்கிறது. ஒரு காலன் தண்ணீரின் எடை எட்டு பவுண்டுகள். ஒரு காலன் தண்ணீரை பூமியிலிருந்து சந்திரனுக்கு கொண்டு செல்ல ஆகும் செலவு 400,000 டாலர்கள்.
சந்திரனில் உள்ள பாறைகளில் ஆக்சிஜன் அடக்கம். வெப்பத்தையும் மின்சாரத்தையும் பயன்படுத்தி ஆக்சிஜனை எளிதாக பெற்றுவிடலாமாம். சந்திரனில் தண்ணீர் அவ்வளவு எளிதாக கிடைத்துவிடாது. சந்திரனின் தென் துருவத்தில் பனிக்கட்டி வடிவத்தில் நீர் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தண்ணீர் சுரங்கங்களை வெட்டி நீரை எடுத்துக் கொள்ளலாம். நீரை ஹைட்ரஜனாகவும் ஆக்சிஜனாகவும் பிரித்து ராக்கெட்டுகளுக்கு தேவையான எரிபொருளை சம்பாதித்துக் கொள்ளலாம்.
சந்திரனில் தண்ணீர் கிடைக்காமற்போனால் பூமியிலிருந்துதான் நீரைக் கொண்டு செல்லவேண்டும். திரவ ஹைட்ரஜனை பூமியிலிருந்து கொண்டு போகவேண்டும். அதனுடன் சந்திரனின் பாறைகளில் இருக்கும் ஆக்சிஜனைக் கலந்து, நீரை தயாரித்துக் கொள்ளலாம். இந்த நீர் தயாரிக்கும் முயற்சியின் போதே மின்சக்தியையும் பெற்றுக் கொள்ளமுடியும் என்பது மகிழ்ச்சியான செய்தி.
இவையனைத்தும் சாத்தியமாகக் கூடிய செலவில் அமைந்தால், சந்திரனிலும் அமெரிக்கா தனது காலனி ஆதிக்கத்தை விரிவாக்கும்.
நன்றி தினகரன்
0 comments:
Post a Comment