அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube




ஆசிய கோப்பை பைனலில் இன்று இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே லீக் சுற்றில் இலங்கையிடம் சந்தித்த தோல்விக்கு, இம்முறை இந்தியா பழிதீர்க்க காத்திருக்கிறது. கடந்த இரு முறை கோப்பை வென்ற இலங்கை அணி "ஹாட்ரிக்' பட்டம் பெற முயற்சிக்கலாம்.


ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடக்கிறது. இதில் பாகிஸ்தான், வங்கதேசம் வெளியேறின. இன்று நடக்கும் பைனலில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.

பேட்டிங் சிக்கல்:
இந்திய அணியின் பேட்டிங் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. பாகிஸ்தான், வங்கதேசத்துக்கு எதிராக அசத்திய காம்பிர், இலங்கையுடனான போட்டியில் ஏமாற்றினார். சேவக் இல்லாத நிலையில் தினேஷ் கார்த்திக் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. கேப்டன் தோனி, ரோகித் சர்மா மற்றும் ரெய்னா மிகப் பெரும் ஸ்கோரை எட்ட வில்லை. இவர்கள் இன்று எழுச்சி கண்டால் மட்டுமே இலங்கையை வீழ்த்த முடியும்.
தவறான தேர்வு:
அணியின் "மிடில் ஆர்டரில்' சொதப்பல் தொடர்கிறது. விராத் கோஹ்லி, ரவிந்திர ஜடேஜாவின் ஆட்டம் மட்டமாக <உள்ளது. துவக்க வீரர் சச்சின் இல்லாத நிலையில், லீக் போட்டிகளில் சவுரப் திவாரியை தேர்வு செய்ய தவறினர். இதே போல அஷ்வினுக்கு பதில் பிரக்யான் ஓஜாவுக்கு வாய்ப்பு அளித்தனர். இது போன்ற குளறுபடிகள் காரணமாகவே இலங்கைக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. தொடர்ந்து ஏமாற்றும் ரவிந்திர ஜடேஜாவுக்கு பதிலாக சவுரப் திவாரிக்கு வாய்ப்பு அளித்து பார்க்கலாம்.
பந்துவீச்சை பொறுத்தவரை அனுபவ ஜாகிர், ஹர்பஜன், பிரவீண் குமார் ஆகியோர் விக்கெட் வீழ்த்துவதோடு, ரன்களையும் கட்டுப்படுத்த வேண்டும். ஆஷிஷ் நெஹ்ரா காயத்தில் இருந்து குணமடைந்து விட்டது மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.

இலங்கை அபாரம்:
சொந்த மண்ணில் இலங்கை அணி கலக்கி வருகிறது. லீக் சுற்றில் நூறு சதவீத வெற்றியை பதிவு செய்தது. கேப்டன் சங்ககரா, தில்ஷன், ஜெயவர்தனா, ஏஞ்சலோ மாத்யூஸ் ஆகியோர் சூப்பர் "பார்மில்' உள்ளனர். தரங்கா, கபுகேதரா பொறுப்பாக பேட் செய்கின்றனர். மலிங்கா, குலசேகரா, வெலகேதரா, முரளிதரன் ஆகியோர் இருப்பதால், பந்துவீச்சு பலமாக உள்ளது. கடந்த போட்டியில் இந்தியாவுக்கு எதிராக "ஹாட்ரிக்' சாதனை படைத்த மகரூப் மீண்டும் வாய்ப்பு பெறலாம். ஒட்டுமொத்தமாக இலங்கை அணி அசுர பலத்துடன் காட்சி அளிக்கிறது.
தோனிக்கு சோதனை:
சமீபத்தில் நடந்த "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் இந்திய அணி சாதிக்க தவறியது. இதையடுத்து தோனியின் கேப்டன் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டது. ஆசிய கோப்பையில் மோசமாக செயல்பட்டால், இவர் நீக்கப்படலாம் என்ற பேச்சு அடிபட்டது. தனது கேப்டன் திறமையை நிரூபிக்கும் வகையில், இம்முறை கோப்பையுடன் நாடு திரும்புவாரா தோனி?

15 ஆண்டு ஏக்கம்
ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி கடைசியாக 1995ல் கோப்பை வென்றது. இதற்கு பின் தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. இம்முறை 15 ஆண்டுகள் ஏக்கம் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அணி கடந்த 2004(எதிர், இந்தியா), 2008ல் (எதிர், இந்தியா) தொடர்ந்து கோப்பை வென்றுள்ளது. இம்முறை "ஹாட்ரிக்' கோப்பை வெல்ல காத்திருக்கிறது.

இது வரை...
ஆசிய கோப்பை பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் இதுவரை 7 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 4 முறை(1984, 88, 90-91, 95) கோப்பை வென்றுள்ளது. இலங்கை 3 முறை (97, 2004, 08) சாதித்துள்ளது.
* ஆசிய கோப்பையில் இவ்விரு அணிகளும் மொத்தம் 16 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்தியா 7, இலங்கை 9 போட்டிகளில் வென்றுள்ளன.
* தம்புலா மைதானத்தில் இலங்கை 5, இந்தியா 2 போட்டிகளில் வென்றுள்ளன.


Post Comment


2 comments:

சசிகுமார் said...

நம்ம அணி தான் வெற்றி பெரும் நண்பா, நல்ல பதிவு உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

டிலீப் said...

நன்றி சசி...

அஹ அஹ சசி நான் ஸ்ரீலங்கா ..
நம்ம அணிக்கு தான் வெற்றி..

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.