அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

Dinesh Chandimal clobbers the ball over long-on

முத்தரப்பு தொடரில் இந்திய அணியுடனான லீக் ஆட்டத்தில், இலங்கை 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.  அந்த அணியின் தினேஷ் சந்திமால் ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சதத்தை விளாசி (111 ரன்) அசத்தினார்.

ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீசியது. இந்தியா 50  ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 268 ரன் எடுத்தது. கார்த்திக் 27, கோஹ்லி 68, யூசுப் பதான் 44, ரோகித் 32, ரெய்னா, ஜடேஜா தலா 19,  அஷ்வின் 38 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இலங்கை பந்துவீச்சில் துஷாரா 3, ரந்திவ் 2, குலசேகரா, பெரேரா, தில்ஷன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இலங்கை  அணி 48.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 270 ரன் எடுத்து வென்றது. தரங்கா 27, தில்ஷன் 21, சந்திமால் 111 ரன் (118 பந்து, 6 பவுண் டரி, 5 சிக்சர்), கபுகேதரா 42 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஜீவன் மெண்டிஸ் 35, சமரவீரா 28 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்தனர். இந்த தோல்வியால் இந்திய அணி (4 புள்ளி)  முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் தகுதியை இழந்து பரிதாபமாக வெளியேறியது.
Thilan Samaraweera and Jeevan Mendis added 55 to close out the match

தலா 9 புள்ளியுடன் உள்ள ஜிம்பாப்வே, இலங்கை அணிகள் 9ம் தேதி நடக்கவுள்ள இறுதிப் போட்டியில் மோத உள்ளன.


Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.