அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

படிமம்:Ape skeletons tamil.jpg
உயிரியலில் படிவளர்ச்சிக் கொள்கை (தமிழ்நாட்டு வழக்கு: பரிணாம வளர்ச்சிக் கொள்கை; இலங்கை வழக்கு: கூர்ப்புக் கொள்கை) என்பது ஓர் உயிரினத்தின் பண்புகள், தலைமுறை தலைமுறையாக மரபணுவழி எடுத்துச் செல்லும் பொழுது காலப்போக்கில் அவ்வுயிரினத்தின் தேவை, சூழல், தன்னேர்ச்சியான நிகழ்வுகள் ஆகியவற்றால் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி விளக்கும் ஒன்று. உயிரினத்தின் படிப்படியான மாற்றங்கள், எதனால் எவ்வாறு மாறுபடுகின்றன என்று ஆய்ந்து அறிந்து கூறுகிறது இக்கொள்கை. 


இவ்வாறாகஉள்ளது சிறந்து மிகுதலை தொல்காப்பியம் தொட்டு பல பண்டைத் தமிழிலக்கியங்களில் கூர்ப்பு என்று வழங்கியுள்ளனர்.
பொதுவாக இப் படிவளர்ச்சி மாற்றங்கள் இரு பெரும் வழிகளில் உந்தப்படுகின்றன. முதல் வகை உந்துதலுக்கு இயற்தேர்வு என்று பெயர். இது ஓரினத்தில் வழிவழியாய் (தலைமுறை தலைமுறையாய்) பரவிவரும் பண்புகளில் தங்கள் இனத்தின் நல்வாழ்வுக்கும் இனப்பெருக்கத்திற்கு உதவியாய் இருக்கும் பயனுடைய பண்புகள் அவ் இனத்தில் பரவலாக காக்கப்பட்டும், கெடுதி தரும் பண்புகள் அருகியும் அற்றும் போகின்றன. 
இப்படிப் பயனுடைய பண்புகள் இருந்தால் அவை அடுத்த தலைமுறையிலும் பிழைக்க வாய்ப்பிருப்பதால், இவை பரப்பப்பட்டு நிலைபெறுகின்றன. பல தலைமுறைகளாக வளர்ச்சியுறும்பொழுது ஓர் உயிரினத்தின் பண்புகள் தேவைக்கும் சூழலுக்கும் ஏற்ப, தக்க, இசைவான மாற்றங்கள் அடைகின்றன. இவற்றை இயல் தேர்வு அல்லது இயற்தேர்வு என்று அழைக்கிறார்கள். படிவளர்ச்சி மாற்றத்திற்கு இரண்டாவது உந்துதலாக (ஏதுவாக) அமைவது தன்னேர்ச்சியாய் ஏற்படும் மாற்றங்கள், நிலைபெறும் வாய்ப்பைப் பொறுத்தது. இதற்குத் தகவமைவு அல்லது மரபணு பிறழ்வு நகர்ச்சி (Genetic drift) என்று பெயர்.
இக்கொள்கை புவியிலுள்ள உயிர்களின் பொது மூலத்திலிருந்து எல்லா உயிரின்ங்களின் தோற்றத்தை விளக்குவதால், உயிரியல் பிரிவின் மையக்கொள்கையாகத் திகழ்கிறது.

வரலாறு


பொது மூலம் மற்றும் மரபு பற்றிய எண்ணங்கள் கிரேக்க காலங்கள் தொட்டே குறிப்பிடப்பட்டிருந்தாலும், இலமார்க் எனும் பிரான்சிய
மெய்யியலாளரின் இனமாற்றம் பற்றிய 
சிந்தனைகள் மூலமே முதலில் புகழ்பெற்றது. 1859 ஆண்டு சார்லஸ் டார்வின் என்னும் ஆங்கிலேய இயற்கையியலாளர், On the Origin of Speciesஎன்னும் அறிவியல் கட்டுரையின் மூலம் தற்கால படிவளர்ச்சிக் கொள்கையை அறிமுகப்படுத்தினார். டார்வின் காலத்தில் உயிரியல் பண்புகள் மரபுவழியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குப் பரப்பப்படுவது தெரிந்திருந்தாலும், அவை எவ்வாறு பரப்பப்படுகின்றன என்பதன் விளக்கம் அறியப்படவில்லை. 1865ல் கிரெகர் மென்டல் எனும் பாதிரியார் பட்டாணிச் செடிகளின் கலப்பினங்களை ஆராயும் பொழுது மரபணுக்களைப் பற்றிக் குறிப்பிட்டார்.
படிமம்:Charles Darwin aged 51.jpg
படிவளர்ச்சிக் கொள்கையை நிலைநிறுத்திய சார்ள்ஸ் டார்வின், தனதுஉயிரினங்களின் தோற்றம் என்னும் ஆய்வுநூலை வெளியிட்டபோதுள்ள தோற்றம்
அதற்குப் பின்னர் 1940ம் ஆண்டில் ஜேம்ஸ் வாட்ஸன் மற்றும் பிரான்சிஸ் கிரிக் என்பவர்கள் மரபணு விரிபரப்புச்சுருளி வடிவம்(double helix) கொண்டதை நிறுவினர் இந்த கண்டுபிடிப்புக்காக அவர்களுக்கு 1962 ஆம் ஆண்டிற்கான மருத்தவ நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதன் மூலம் மரபுரிமைப் பற்றி புலனாயிற்று.
அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை மதம் மற்றும் அரசியல் பிரிவுகளிலிருந்து பலத்த எதிர்ப்புகள் வந்தபோதிலும், படிவளர்ச்சி அறிவியல் துறையில் அறிவியலாளர்களால் ஏற்ற்ருப் போற்றப்பட்டு வந்துள்ளது.

மரபு

மாந்தர்களின் கண் நிறம், அவர்களின் சில நோய்களுக்கு எதிரான எதிர்ப்புத்தன்மை போன்ற பல உயிரியல் பண்புகளைப் பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து பெறுதல்மரபு என்று கூறப்படும். எந்தப் பண்புகள் அடுத்த தலைமுறைக்குச் செல்கின்றன என்பது பெற்றோர்களின் மரபணுக்கள் எவ்வாறு இணைகின்றன என்பதைப் பொறுத்தது. இவ்வாறான மரபுரிமை மரபணுக்களின் கட்டுப்பாட்டில் நடக்கிறது.

இயற்தேர்வு


அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ்வதற்கு ஒன்றோடொன்று போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன. மற்ற இனத்து உயிரினங்களுடன் உணவு மற்றும் இடம் ஆகியவற்றுக்கு போட்டி (சிங்கம் மற்றும் கழுதைப்புலி ஒரே இடங்களில் வாழ்ந்து, ஒரே இரையை வேட்டையாடுபவை), மற்றும் தனது இனத்துள் உணவு மற்றும் துணைக்காகப் போட்டி (சிறந்த ஆண் சிங்கமே மற்ற பெண் சிங்கங்களுடன் உறவாடி குட்டிகள் இடும்) என பல்வேறு நிலைகளில் போட்டி உள்ளது. இவ்வாறான போட்டி எனும் இயக்கத்துடன், இயற்கைச் சூழல்களின் இயக்கங்களும்(வறட்சி, குளிர், வெய்யில் போன்றவை) உயிரினங்களைப் பாதிக்கும்.
படிமம்:Darwin's finches cropped.jpeg
கலாபகசுத் தீவில் தனித்து வளரவேண்டிய சூழலினால் அங்குள்ள குருவியினங்கள் தங்களுக்குள் 10-12 வகையான குருவியினங்களாக வளர்ந்தன

இவ்வாறாகப் பல்வேறு இயக்கங்களின் தாக்கங்களைச் சமாளிக்கவல்ல தனிப்பட்ட உயிர் மற்றும் உயிரினங்கள் செழித்து, தனது நன்மைபயக்கும் உயிர் பண்புகளை தனது அடுத்த தலைமுறைக்குச் செலுத்தும். சமாளிக்க இயலா உயிர் மற்றும் உயிரினங்கள் அற்றுப்போகும். எடுத்துக்காட்டாக, மற்ற பூச்சிகளைவிட மேம்பட்டஉருமறைப்பு (camouflage) கொண்ட ஒரு பூச்சி தன்னை உணவாகக் கொள்ளவரும் பறவையின் கண்களுக்குத் தென்படாததால், மற்ற பூச்சிகளைவிட அதிகமாக வாழ்ந்து, தனது வழித்தோன்றல்களுக்கு தனது மேம்பட்ட உருமறைப்பு எனும் உயிரியல் பண்பிணைக் கொடுக்கும். அதேபோல், பறவைகளிலும், மேம்பட்ட உருமறைப்பு பெற்ற பூச்சிகளைக் கண்டுபிடிக்கவல்ல மேம்பட்ட கண்பார்வை எனும் உயிரியல் பண்புபெற்ற பறவை, மற்ற பறவைகளை விட அதிக உணவு பெறுவதால், செழித்து, தனது குஞ்சுகளுக்கும் அப்பண்பினைச் செலுத்தும். கோடுகள் எனப்பட்ட தந்தங்களுக்காக மாந்தர்களால் மிகுதியாக வேட்டையாடப்பட்ட ஆப்பிரிக்க யானைகளிடையே தந்தங்கள் அற்ற தன்மை மேலோங்குவதாக அறியப்பட்டுள்ளது.
போட்டி மற்றும் இயற்தேர்வு என்பவை தொடர்ந்து இயங்கி உயிரினங்களின் உயிரியல் மற்றும் நடத்தைப் பண்புகளை மாற்றிக்கொண்டே இருக்கும்.

உயிரணு மரபுப்பிறழ்வு

உயிரணுக்கள் இழையுறுப்பிரிவு (mitosis) எனும் செயல்பாட்டின் மூலம் நகலாக்கம் (replication) செய்கின்றன. இச்செயல்பாட்டில், கதிரியக்கம் (radiation), கிருமிகள் போன்ற பல காரணங்களினால், நகலாக்கத்தில் பிழைகள் ஏற்படக்கூடும். இப்பிழைகள் உயிரணு மரப்பிறழ்வு எனக் கூறப்படும். இப்பிறழ்வுகளால், உயிரினங்களின் உயிர்ப்பண்புகள் மற்றும் நடத்தைப்பண்புகளில் மாற்றங்கள் ஏற்படும்.
உயிரணுப்பிறழ்வுகள் திசையற்றவை (random). இவ்வாறான பிறழ்வுகளினால் ஏற்படும் மாற்றங்கள், பெரும்பாலானவை உயிரினத்திற்குத் தீங்கானவை, அல்லது நடுநிலையானவை. அரிய ஒருசில மாற்றங்கள் மட்டுமே அப்போதைக்குள்ள சூழல்களுக்கு பயனுள்ளவை. பயனுள்ள பிறழ்வுகள் கொண்ட உயிரினங்கள் பிழைத்துச் செழிக்கும். தீங்கிழைக்கும் பிறழ்வுகள் கொண்ட உயிரினங்கள் மாண்டு போகும்.

தகவமைவு

உயிரினங்களுக்கிடையே உள்ள போட்டி மற்றும் இயற்கை இயக்கங்கள் உயிரினங்களின்மேல் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கும். இத்தகைய சூழலில், உயிரணுப் பிறழ்வுகளினாலான நடக்கும் ஒருசில மாற்றங்கள் உயிரினங்கள் தங்கள் சூழலுக்குத் "தக்க"வகையில் அமைய வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறான மாற்றங்கள் தகவமைவு எனக்கூறப்படும்.

Post Comment


4 comments:

Victor Suresh said...

தகவமைவு = adaptation?

சில இடங்களில் இணையான ஆங்கிலப் பதங்களை கொடுக்கிறீர்கள். சில இடங்களில் கொடுப்பதில்லை. கொடுத்தால் நன்றாக இருக்கும்.

டார்வின், மெண்டல், வாட்சன் என்று ஒரே தாவாக தாவி விட்டீர்கள். முன்னும், இடையிலும், பின்னும் பல முக்கியமான கண்டுபிடிப்புகள் உண்டே.

டிலீப் said...

நன்றி ஏவிஎஸ்..........
கொடுப்பதற்கு முயற்சி செய்கிறேன்..

முழுவதும் எழுதுவதற்கு நேரம் போதாதா படிய தான் சுருக்கமாய் எழுதினேன்.
முயற்சி செய்கிறேன் விரிவாக எழுதுவதற்கு ....

Harinarayanan said...

முதல்ல உங்க முயற்ச்சியை பாராட்டனும். பரிணாமம் பற்றி ஒரு பதிவில் எழுதுவது என்பது அவ்வளவு சுலபமல்ல. முக்கியமாக தகுந்த தமிழ்ச்சொற்களை பயன்படுத்தி எழுதுவது. அதை நன்றாகச் செய்திருக்கிறீர்கள் திலீப். வாழ்த்துக்கள். வரும் காலங்களில் உங்கள் அறிவியல் பதிவுகள் மெறுகேறும் என்பதில் ஐயமில்லை! இன்னும் நிறைய அறிவியல் பதிவுகளை எழுதுங்க. உங்க பதிவில் இருக்கும் ஆங்கிலத்துக்கு இணையான தமிழ் சொற்களை மிகவும் ரசித்தேன். அவை எனக்கு புதியவை என்பதால். நன்றிகள்! அறிவியலை எழுதும் என் வலையையும் பார்த்துவிட்டு உங்க கருத்தைச் சொல்லுங்க திலீப்.மீண்டும் சந்திப்போம்!
பத்மஹரி,
மேலிருப்பான்
http://padmahari.wordpress.com

டிலீப் said...

நன்றி பத்மஹரி
இன்னும் அறிவியல் சம்பந்தமான ஆக்கங்களை எழுத முயற்சி செய்கின்றேன்

உங்கள் தளத்தை பார்த்தேன் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.