அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube


விக்கிரம் அம்பாலால் சாராபாய் (Vikram Ambalal Sarabhai, ஆகஸ்ட் 12, 1919 – டிசம்பர் 31, 1971) இந்திய இயற்பியலாளர். இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை எனக் கருதப்படுகிறார்.

வாழ்க்கைச் சுருக்கம்

1919ஆம் ஆண்டு ஆகசுது 12 அன்று ஆமதாபாதில் ஒரு செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தார். அவர் எண்ணியிருந்தால் ஒரு தொழிலதிபராக உருவாகியிருக்கலாம். ஆனால் அவரது நாட்டம் எல்லாம் கணிதத்திலும் இயற்பியலிலும் தான் இருந்தது.

வாலிபப் பருவம்

அவருக்கு 23 வயதான நிலையில் இமயமலைக்கு சென்று அண்டக்கதிர்களைப் பற்றிய ஆய்வுகளை நடத்தினார் விக்கிரம். அந்த ஆய்வுகள் அவருக்கு மிகவும் பிடித்துப்போகவே, அங்கேயே ஒரு ஆய்வுக்கூடத்தை நிறுவினார்.

ஆய்வு நிலையங்கள் நிறுவுதல்

இங்கிலாந்தில் Ph.D. ஆராய்ச்சியை முடித்துத் திரும்பிய சாராபாயி, ஆமதாபாதில் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் |இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை (Physical Research Laboratory) நிறுவினார். 1955ல் காசுமீரம் குலுமார்கில் அதன் கிளை ஒன்றையும் நிறுவினார். பின்னர், திருவனந்தபுரம், கோடைக்கானல் ஆகிய இடங்களிலும் ஆய்வகங்களை நிறுவினார்.
படிமம்:Vikram Sarabhai.jpg

இந்தியாவை விண்வெளி யுகத்திற்கு இட்டுச்செல்லல்

இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவின் விண்ணேவுதலுக்கு முழுமுதல் காரணமானவர் விகிரம். SITE எனப்படும் ‘செயற்கைக்கோள் உதவியுடன் தொலைக்காட்சியில் பயிற்றுவிக்கும் முயற்சி’ மூலம் 2,400 இந்திய கிராமங்களிலுள்ள 50 லட்சம் மக்களுக்கு கல்வியை எடுத்துச்செல்ல உதவினார்.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை(ISRO) விரிவாக்கினார்.

விகிரமின் முதல் காதல்

பல விண்வெளித் திட்டங்களை இயற்றி அயராது பணியில் ஈடுபட்டிருந்தாலும் அவரது முதல் காதலான அண்டக்கதிர்கள் பற்றிய ஆய்வை சாராபாய் மறக்கவேயில்லை. அண்டக்கதிர்களைப் பற்றிய ஆய்வுகளின் மூலம் புவியின் காந்தப்புலம், வளிமண்டலம் மற்றும் சூரியன், சேய் விண்வெளி ஆகியன பற்றி அறிந்து கொள்ள முடியும் என திட்டமாக நம்பினார்.

விருதுகளும் பெருமைகளும்

  • பதும பூசண்
  • பதும விபூசண்
  • நிலவிலுள்ள அமைதிக்கடல்(Sea of Serenity) பகுதியில் உள்ள ஒரு பெருங்குழிக்கு விகிரமின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Post Comment


4 comments:

மதுரை சரவணன் said...

நல்லத் தகவல். வாழ்த்துக்கள்

டிலீப் said...

நன்றி சரவணன்

Anonymous said...

ரொம்ப நல்ல தகவல்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்

டிலீப் said...

நன்றி மயில்........
தொடர்ந்து உங்கள் ஆதரவை வழங்கி எங்களை ஊக்கபடுத்தவும் .....

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.