
உலகம் உருவாகி சுமார் 460 கோடி ஆண்டுகள் ஆகின்றன.அப்போது இளைய பூமியின் மையத்தில் இரும்பு குழம்பும், மேற்பரப்பில் மாக்மா(magma ) பெருங்கடலும். வான் வெளியில் சிலிக்காவின் வாயு முகில் வளிமண்டல மும் இருந்தன..பின்னர் இவையே பூமி மீது படிந்து பாறைகளாக உருவாயின.
பூமி வெப்பமாக இருந்ததுடன் விரிவடையவும் செய்தது. பூமியின் வளிமண்டலத்தில் மிச்சம் இருந்த , எடை குறைவான வாயுக்களான, ஹைடிரஜன், ஹீலியம் போன்றவற்றை சூரிய காற்றும். பூமியின் வெப்பமும் சேர்ந்து, இவற்றை வளிமண்டலத்தை விட்டு ஊதியே விரட்டி இருக்கலாம் என கருதப் படுகிறது.
இந்த பாதிப்பு / விளைவு தான்.பூமி 23 .5 டிகிரி சாய்வான அச்சு நிலைக்கும் காரணம் என நம்பப்படுகிறது. இதுவும் கூட, பூமி வேகமாக சுற்றுவதற்கு ஒரு காரணம் என்று சொல்லப் படுகிறது .
பெருங்கடலும்,எரிமலையும்
அசுரத்தனமான வெப்ப பாதிப்பால் வளிமண்டலத்தை விரட்டிவிட்டு மொட்டையான, பூமி வெகு வேகமாய் குளிர்ந்தது. 15 கோடி ஆண்டுக்குள் பூமியின் மேல். எரிமலை சாந்துள்ள பேசால்ட் (Basalt ) என்னும். பூமியின் மேலோடு உருவானது. பின்னர் பல்வேறு மாற்றங்கள் உண்டாகி, பூமியின் மேலோடு இறுகிப் போனது.
அப்போதைய வெப்ப நிலை, 1 ,600௦௦ டிகிரிக்கு மேல் இருக்கும்.புவியில் எரிமலைக் குழம்புகளால் சூடான பூமியிலிருந்து வெளியேறிய வாயுக்கள் வான்வெளியில் சேர்ந்து புதிய, இரண்டாவது வளிமண்டலத்தை உருவாக்கின. இப்படியான பூமி குளிர்ந்ததும், . அதிலிருந்து வெளியேறிய வாயுக்கள் வளிமண்டலத்தில்பரவி நின்று குளிர்ந்து நீரானது. இதெல்லாம் நடக்கும் காலம் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு . அப்போது , .உலகின் புவிப்பரப்பில் மெலிதான நீர்ப்படலம் உருவானது. இவைகளுடன். வால்மீன்கள் ,மற்றும் அஸ்டிராய்டு வளைய மோதல்கள் வியாழனின் ஈர்ப்பு விசையினால் நிகழ்ந்தது.
எரிமலை வெடிப்பு அதன் விளைவாக உருவான மேகங்களால்தான் பூமியின் நீரில் பெரும்பாலும் உண்டானது. சமீபத்திய ஆய்வுகளின்படி, பெருங்கடல்கள், 420 -440 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் உருவானதாம்.
நன்றி : மோகனா அக்கா
0 comments:
Post a Comment