அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

புதிய ஆன்டி வைரஸ் - Panda Cloud AntiVirus


இதனுடைய பெயர் Panda Cloud AntiVirus. இதன் முதல் சிறப்பு என்னவென்றால், வைரஸ் டெபனிஷன்ஸ் எனப்படும் குறியீடுகள் நம் கம்ப்யூட்டரில் பதியப்படுவதில்லை. அவை பண்டா சர்வரிலேயே இருக்கும். இவை அனைத்தும், இதன் சர்வரிலேயே இருப்பதால், அப்டேட் செய்யப்படுவதும் அங்கேயே தான். எனவே தாமதமாக அப்டேட் என்ற பேச்சிற்கே இடமில்லை. லேட்டஸ்ட் வைரஸ் அப்டேட் நாம் செய்யவில்லையே என்ற பயமும், தூக்கமில்லா இரவுகளும் நமக்கு இல்லை. 

இன்னொன்றையும் இங்கு குறிப்பிட வேண்டும். இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை, பன்னாடுகளில் ஒரு கோடி பேருக்கு மேல் பயன்படுத்தி வருகின்றனர். எனவே எந்த ஒரு கம்ப்யூட்டரில் ஒரு வைரஸ் கண்டறியப்பட்டாலும், உடனே அது பண்டா சர்வருக்கு அனுப்பப்பட்டு, உடனடியாகத் தீர்வு காணப்படுகிறது. 


வைரஸ் காணப்பட்ட சில நிமிடங்களில் அதனைத் தீர்த்துக் கட்டும் தொகுப்பு தயாராகிவிடுகிறது. எனவே தற்போதைக்குப் பயன்படுத்தப்படும் இலவச ஆண்ட்டி வைரஸ் மற்றும் கட்டணம் செலுத்திப் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில் இது மிகவும் சிறந்ததாகவே தெரிகிறது. இலவசம் என்பதால், இறக்கிப் பயன்படுத்திப் பார்க்கலாமே! 


http://www.cloudantivirus.com/en/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் இதனைக் காணலாம். இதற்கான அழகான விளக்க வீடியோவும் இதில் தரப்பட்டுள்ளது 
இதன் சிறப்பு. 


இல்லை எனக்கு வழக்கமான ஆண்ட்டி வைரஸ் தான் வேண்டும் என நீங்கள் விரும்பினால், பத்து கோடிப் பேருக்கு மேல் பயன்படுத்தும் அவாஸ்ட் (Avast)  மற்றும் அதே போலப் பலரால் பயன்படுத்தப்படும் அவிரா (Avast)  ஆகிய தொகுப்புகளில் ஒன்றைப் பயன்படுத்தலாம். அவாஸ்ட் தேவைப்படுபவர்கள் செல்ல வேண்டிய இணையதள முகவரி http://www.avast.com/ freeantivirusdownload. அவிரா வேண்டும் என்றால் http://www.softpedia.com/progDownload/AntiVirPersonalEditionDownload6527.html என்ற முகவரிக்குச் செல்லுங்கள்.Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.