
அல்லது அதிக அளவில் தளப் பக்கத்தைக் காண, சிறியதாக்கலாம்.இதற்குக் கண்ட்ரோல் கீ அழுத்தி, அதனுடன் + கீ அழுத்தினால், பக்கம் பெரிதாவதையும், – கீ அழுத்தினால் சிறியதாக மாறுவதையும் காணலாம். மீண்டும் தொடக்க நிலைக்குக் கொண்டு வர கண்ட்ரோல் கீயுடன் 0 (பூஜ்யம்) கீயினை அழுத்த வேண்டும்.
இந்த கீ தொகுப்புகள் எல்லாம் நமக்கு உதவுகின்றன. ஆனால், இவற்றை நாம் சில வேளைகளில் நாம் அறியாமலேயே அழுத்தி விடுகிறோம். அப்போது ஏன் அழுத்தப்பட்டது என எரிச்சல் அடைவோம். இந்த கீ தொகுப்பு செயல்படு வதனையே நிறுத்திவிட்டால் என்ன என்று தோன்றும். ஆனால் அதற்கான நேர் வழியை பயர்பாக்ஸ் தரவில்லை. சுற்று வழியில் இதனை மேற்கொள்ளலாம்.
பயர்பாக்ஸில் உள்ள பிரிபரன்ஸ் பைலில் இந்த மாற்றத்தினை மேற்கொள்ளலாம். இந்த பைல் உங்களின் பயர்பாக்ஸ் பிரவுசரின் இயக்கத்திற்கான திறவு கோல் என்பதால், இதில் மாற்றத்தினை ஏற்படுத்தும் முன், சேவ் செய்து கொள்வது நல்லது.
இனி அட்ரஸ் பார் சென்று, அங்கு about:config என டைப் செய்து என்டர் செய்திடவும். எச்சரிக்கை செய்தி ஒன்று கிடைக்கும். அங்கே நான் கவனமாய் இருப்பேன் என்பதற்குI’ll be careful, I promise! என்பதில் கிளிக் செய்து தொடரவும்.
அடுத்து செட்டிங்ஸ் பட்டியல் ஒன்று காட்டப்படும். இந்த பக்கத்தின் மேல் பகுதியில் Filter என்று ஒரு பிரிவு இருக்கும். இதில் zoom என டைப் செய்திடவும். இப்போது பட்டியல் சிறியதாகச் சில ஆப்ஷன்களை மட்டும் காட்டும். இதில் நமக்கு zoom.maxPercent மற்றும் zoom.minPercent என்ற இரண்டு பிரிவுகளில் வேலை உள்ளது. இதில் நாம் ஸூம் செய்திடும் அளவு தரப்படும். 300 மற்றும் 30 என இரு அளவுகள் காட்டப்படும். அதாவது நாம் 300 சதவிகிதத்திற்கு மேல் ஸூம் செய்திட முடியாது. 30% க்குக் குறைவாகச் சிறியதாக ஆக்கவும் முடியாது. இந்த இரண்டையும் 100 என மாற்றிவிட்டால், சிறியதாகவும், பெரியதாகவும் மாற்ற முடியாது. இணையப் பக்கங்கள் எப்படி உள்ளனவோ அப்படியே காட்டப்படும். இனி செட்டிங்ஸில் டபுள் கிளிக் செய்து வெளியேறவும். பயர்பாக்ஸ் பிரவுசரை மூடிப் பின் மீண்டும் இயக்கவும். அப்போது தான் நாம் ஏற்படுத்திய மாற்றம் அமலுக்கு வரும்.
ரெஜிஸ்ட்ரி பேக் அப்:
பயர்பாக்ஸ் பிரவுசரில் நாம் பல மாற்றங்களை நம் வசதிக்கேற்றபடி அடிக்கடி மாற்றங்களை மேற்கொள்வோம். சில வேளைகளில் நாம் அதன் செட்டிங்ஸ் அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவோம். இதில் தவறு ஏற்பட்டால் மீண்டும் பழைய நிலைக்கு பிரவுசரைக் கொண்டு செல்ல வேண்டும். அதிக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டு விட்டால், அவற்றை நினைவில் வைத்து இந்த பைலை மீண்டும் முந்தைய நிலைக்குக் கொண்டு வருவது சிரமம். எனவே தான் இதில் ஏதேனும் மாற்றங்களை ஏற்படுத்தும் முன், இந்த செட்டிங்ஸ் பைலை சேவ் செய்து வைத்துக் கொள்வது நல்லது.
பயர்பாக்ஸ் தன் பிரவுசரில் ஏற்படுத்தப்படும் செட்டிங்ஸ் மாற்றங்களை ஓரிடத்தில் சேவ் செய்து வைக்கிறது. இந்த செட்டிங்ஸ் அமைப்பில் சிலவற்றினை மாற்ற, ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸ் வழி தருகிறது. மற்ற மாற்றங்களை மேற்கொள்ள about:config என்ற வழியில் செல்ல வேண்டும். இதில் மாற்றங்களை மேற்கொள்கையில் கவனத்துடன் கையாள வேண்டும். அதனால் தான், இதில் மாற்றங்களை மேற்கொள்கையில் "I’ll be careful, I promise!" என்ற உறுதிமொழியைத் தர வேண்டியதுள்ளது. இது கிட்டத்தட்ட விண்டோஸ் இயக்கத்தின் ரெஜிஸ்ட்ரி போல இயங்குகிறது. எனவே தான் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியில் மாற்றங்கள் ஏற்படுத்தும் முன், அதனை சேவ் செய்வது போல, இந்த செட்டிங்ஸ் அமைப்பு பைலையும் பேக் அப் செய்து சேவ்செய்திட வேண்டியுள்ளது. இதனை எப்படி மேற்கொள்வது என்று பார்ப்போம்.
முதலில் பயர்பாக்ஸ் பிரவுசரை மூடவும். பின் ஸ்டார்ட் கிளிக் செய்து, அதில் ரன் பாக்ஸ் பெற்று, அந்த பாக்ஸில் %appdata%\Mozilla\Firefox\Profiles என டைப் செய்து என்டர் தட்டவும். இப்போது கிடைக்கும் விண்டோஸ் எக்ஸ்புளோரர் விண்டோவில் ஒரே ஒரு போல்டர் கிடைக்கும். இதில் prefs.js என்ற ஒரு பைல் இருக்கும். இதனைக் காப்பி செய்து அப்படியே இன்னொரு ட்ரைவில் சேவ் செய்து வைக்கவும். பைலின் பெயர், புதிதாய் சேவ் செய்த இடம் ஆகியவற்றை நினைவில் வைக்கவும். அல்லது குறித்து வைத்துக் கொள்ளவும். இந்த பைலைக் காப்பி செய்தே சேவ் செய்திட வேண்டும்.
இன்னொரு இடத்திற்கு அப்படியே நகர்த்தக்கூடாது. இனி செட்டிங்ஸ் பைல்களில் மாற்றங்களை ஏற்படுத்துங்கள். ஏற்படுத்திய பின்னர், பயர்பாக்ஸ் இயங்குவதில் பிரச்னை ஏற்பட்டால், காப்பி செய்து சேவ் செய்த பைலை, மீண்டும் பழைய டைரக்டரியில் காப்பி செய்துவிட்டால், மறுபடியும் பழைய செட்டிங்ஸ் அமைப்பில் பயர்பாக்ஸ் இயங்கத் தொடங்கும்.
2 comments:
super friend
thxx saciiii
Post a Comment