
இந்தியா, இலங்கை, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
முதல் “லீக்” ஆட்டத்தில் இந்திய அணி 200 ரன்னில் நியூசிலாந்திடம் தோற்றது. 2-வது ஆட்டத்தில் இலங்கை அணி 3 விக்கெட்டில் நியூசிலாந்தை வென்றது. 3-வது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
இலங்கை-நியூசிலாந்து அணிகள் மோதிய 4-வது “லீக்” ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.
5-வது “லீக்” ஆட்டம் இன்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தை பற்றி இந்தியா அணி கேப்டன் நிருபர்களிடம் கூறியது:-

நோபால் சர்ச்சையால் இந்திய அணி வீரர்கள் மேலும் ஆக்ரோஷமாக ஆடுவார்கள். ஆனால் ஆடுகளத்தில் உணர்ச்சிகளை வெளிபடுத்த மாட்டோம். எங்களது ஆட்டத்தின் மூலம் தான் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவோம்.
இறுதிப்போட்டியில் நுழைய அடுத்த ஆட்டம் வரை காத்திருக்க மாட்டோம். இன்றைய ஆட்டத்திலேயே வெற்றி பெற்று முன்னேறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆனால் நடந்ததோ தலைகீழாக….
இந்தியா அணி ஆடுவதில் ஆக்ரோஷத்தை காட்டுவதற்கு பதிலாக ஆவுட் ஆகுவதில் தனது ஆக்ரோஷத்தை காட்டியது.
இலங்கை பந்து வீச்சாளர்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் இந்தியா அணி 103 ரன்களுக்கு சுருண்டது.
கடந்த ஆட்டத்தில் 99 ரன்களை எடுத்த சேவாக் குலசேகரவின் பந்து வீச்சில் எல்பி டபிள்யுவில் வந்த வேகத்தில் பிவிலியன் திரும்பினார்.
தொடர்ந்து வந்த கார்த்திக் சார்மா ஆட்டமிழக்க இந்தியா அணி 50 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்திருந்தது.
யுவராஜ் சிங் ரய்னா இந்தியா அணியை கரை சேர்ப்பார்கள் என்று பார்த்தால் பெரேராவின் விக்கெட் வேட்டை ஆரம்பமானது.
பெரேராவின் பந்து வீச்சில் ரெய்னா ஆட்டமிழந்து செல்கையில் அதன் பிறகு வந்த டோனி ஜடேஜா குமார் பெரேராவின் பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் ஆட்டமிழந்தனர்.

அதன் பின் இசான் சார்மாவோட யுவராஜ் சிங் 19 ரன்களை இணைப்பாட்டமாக பெற்றாலும் அதற்கு மேல் யுவராஜ் சிங்கால் தாக்கு பிடிக்க முடியாமல் மலிங்கவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் இந்தியா அணி 103க்கு சகல விக்கெட்களையும் இழந்தது.
பெரேரா தனது சிறந்த பந்து வீச்சை இவ் ஆட்டத்தில் பதிவு செய்தார்
28 ரன்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார்

இந்தியா அணி இத் தொடரில் தனது இரண்டாவது குறைந்த ஒட்டங்களை பதிவு செய்தது.
நியுசிலாந்திடம் 88
இலங்கையிடம் 103
தொடர்ந்து இலகுவான இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி சிறந்த ஆரம்ப இணைப்பாட்டத்தின் மூலம் 15.1 ஒவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 104 ரன்களை எடுத்து போனஸ் புள்ளியுடன் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

"இறுதிப்போட்டியில் நுழைய அடுத்த ஆட்டம் வரை காத்திருக்க மாட்டோம். இன்றைய ஆட்டத்திலேயே வெற்றி பெற்று முன்னேறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது."
இந்தியா அணி சாதனை
இந்தியா அணி மிகபரந்த பந்து வித்தியாசத்தில்
( 209 பந்துகள்) தோல்வியடைந்த போட்டியாக இப் போட்டியை பதிவு செய்தது.
போட்டியின் ஆட்ட நாயகனாக 28 ரன்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்திய பெரேரா தெரிவானார்.
அடுத்து இந்தியா நியுசிலாந்து இடையில் நடைபெறும் கடைசி லீக் போட்டியில் வெற்றி பெறும் அணி இலங்கையுடன் இறுதி போட்டியில் மோதும்.
7 comments:
அன்று இந்தியா வென்ற நேரம் கொண்டாடிய என் room mate இருவரும் (இண்டியன்) தீர்ப்புகள் பிழையாக வழங்கப்பட்டுவிட்டன என்று சண்டை பிடிக்கின்றனர். நான் என்ன செய்ய முடியும்?
அம்யாரிடம் போய் அதை கேட்கக் சொல்லுங்கள் முகமட்,
இல்லாவிட்டால் பொலீஸிடம் புகார் பண்ண சொல்லுங்கள் lol
4 desicions are wrong... so this match not a lanka win..man of t match not a perara... original man of t match was ampire dharmasena...
Ohh really ??? so funny....... thx Anonymous
your posted is wrong...because is ampire decided wrong...mr.thrmasena is better resign him job...one wicket ok he's is three time make the mistake so win indians only you can posted must watch the match after can write ur blogger....ok .....
dats da umpire's nature, and 1st of all indians shud hve their talents 2 win da match....
I thnk u hve nt watch matches b4..... :p
Post a Comment