அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube


சூரிய ஒளிக்கதிர்கள் இருதய நோய் மற்றும் சில வகைப் புற்று நோய்களிலிருந்து பாதுகாப்பளிக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். வெய்யிலில் போகாதிர்கள் தோல் புற்று நோய் ஏற்பட்டு விடும். 

குடையைப் பிடித்துக் செல்லுங்கள் என்பது சில தசாப்த காலமாக முதியோர் சொல்லும் தாரகமந்திரம். இருப்பினும் முதியோரது அறிவுரையை மீள் பரீசீலனை செய்யும் கால கட்டத்திற்கு நாம் வந்துள்ளோம். சூரிய ஒளி எங்கள் மேனியில் விற்றமீன் டி யை உருவாக்கும் ஆரோக்கிய தன்மையை விளைவிப்பதால் நமது உடலை வெய்யில்படும்படியாக விடுவது நியாயம் போல் தோன்றுகிறது என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. 

சில வகைப்புற்று நோய்களிலிருந்து பிற பிணிகளிலிருந்தும் விற்றமீன் டி பாதுகாப்பளிக்கிறது என்றும் சூரிய ஒளியினால்தீமைகளைவிட நன்மைகள் அதிகமாக பெறப்படுகின்றதா என சீர்தூக்கிப்பார்த்து சூரிய ஒளியில் உடல் காய்வதுதவிர்க்கப்படவேண்டுமா என தீர்மானித்து அறிவுரை வழங்குவது மிக முக்கியம் என்று கூறுகிறார் 

சூரிய ஒளிக்கும் தோல் புற்று நோய்க்கும் உள்ள தொடர்பில் நிபுணராகிய றிச்சர்ட் செட்லா, மேலும் விற்றமீன் டி அதிகளவு மட்டத்தை கொண்டிருப்பவர்களை குடல், ஈரல் ,மற்றும் மார்பகங்களில் ஏற்படும் புற்று நோய் அதிகளவு பாதிப்பதில்லை என்கின்றார் றிச்சர்ட் அவரது ஆய்வு அறிக்கை அமெரிக்க தேசிய விஞ்ஞான செழுங்கலை நிலைய அமர்வுகளிலன் புதிய நூலில் வெளியிடப்படுகிறது. அதிகளவு சூரிய புற்று நோய் ஏற்படும் சாத்தியத்தை குறைவடையச் செய்கிறது. பிரதிகூல ஆரோக்கியத்தைபாதுகாப்பதற்கான வழியை வழங்குகிறது என அச்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

மேலும்விட்டமீன் டி ஆரோக்கியமான எலும்புகளை பேணி பாதுகாத்து வருவதுடன் குடல், நுரையீரல், கருப்பை மற்றும்இருதய நோய்கள் போன்ற பல நோய்களிலிருந்து எம்மை பாதுகாக்கிறது. கூடவே சமது உடலில் நோய் எதிர்கப்புச்சக்தியை தூண்டல் அடையச் செய்கிறது.இருப்பினும் மக்கள் தங்கள் ஆகாரத்தின் முழுப் பயனையும் பெற முடியாது இருப்பதன் காரணத்தினால் அவர்களுக்கு தோல் புற்றுநோய் பற்றிய பீதியும் விட்டமீன் டி குறைப்பாடும் ஏற்படுகின்றது. 

சூரிய ஒளி பாதுகாப்பானது என்னும் செய்தி புதியதல்ல என்கிறார் இங்கிலாந்து புற்று நோய் ஆராச்சி மைய ஆரோக்கிய தகவல் மேலாலர் எட் யங் , விட்டமீன் டி சக்து புற்று நோய் பீடிக்கும்சாத்தியத்தை குறைவடைய செய்யும் ஆரோக்கிய தன்மையை தருகிறது என்பது மிக தெளிவாக தெரியவருகிறது.இருப்பினும் உடலை காயவிட்டு எரிவை உண்டாக்குவதற்கு அல்லது பளுப்பு நிறமாக மாற்றுவதற்கு தேவையான சூரிய ஒளியை விட விட்டமீன் டி யை உடலில் உருவாக்குவதற்கு தேவையான அளவு சூரிய ஒளி குறைவானதாகும். 

இங்கிலாந்து தேசத்தின் முதியோர் சூரிய ஒளியை பெறமுடியாது காரணமாக அவர்களுக்கு விட்டமீன் டி குறைப்பாடு ஏற்படுகிறது. தினசரி 5-25 மைக்கிரோகிராம் விட்டமீன் டி பெறவேண்டியவர்கள் பொதுவாக 3 மைக்கிரோகிராம் சத்தையே பெறுகின்றனர் என்கின்றார் கீழ் அங்கிலியார் பல்கலைகழக சூழலியல் விஞ்ஞானி கிரகாம் பெண்தம். இன்றைய நாகரிக வாழ்க்கை முறையால் விட்டமீன் டி குறைப்பாடு அதிகரித்து செல்கிறது. குழந்தைகளுக்கு வீட்டினுள்ளே விளையாடுவதற்கு பொம்மை மற்றும் விளையாட்டு சாதனங்களை வாங்கி கொடுப்பதாலும் தோல் புற்றுநோய் பற்றிய அச்சத்தால் வெளியே வெயிலில் போக விருப்பம் அற்றவர்களாக இருப்பதாலும் அவர்கள் உடலில் சூரிய ஒளி படுவது அறுகி வருகிறது. 

சூரிய ஒளியை முற்றிலும் தவிர்ப்பதை விடித்து உணர கூடிய அளவு சூரிய ஒளியை மேனியில் புலப்படவிடுதல் நன்மையை பயக்கும் இருப்பினும் எடம்பை காயவிட்டு எரி காயம் வராது பார்த்துக் கொள்ளுதல் அவசியம். அவ்வகை எரிக்காயம் புற்று நோய் உருவாகும் சாத்தியத்தை இரட்டிப்பாக்குகிறது என்கிறார் யங். ஆக்கிறமிப்பு இயல்பை உடைய உயிராபத்துள்ள தோல்புற்று நோய்க்கு சிகிச்சை அளிப்பது மிக கஸ்டமானது. இவ்வகை நோயால் பீடிக்கப்பட்டவர்கள் பொதுவாக நோய் கண்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டு 9 மாதங்களுள் மரணத்தை தழுவுகிறார்கள். மீதி பேர் இருவருடங்களுள் மரணித்துவிடுகிறார்கள். 

இது இச்சமுதாயத்தை பெரிதும் பாதிக்கின்றது. வருடாந்தம் சுமார் 900 புதிய நோயாளிகள் கண்டுப்பிடிக்கப்படுகின்றார்கள். 2004ம் ஆண்டு மட்டும் இவ்வகை நோயளாளிகளில் 1777 பேர் மரணித்திருப்பதாக யங் தெரிவிக்கின்றார். சூரிய ஒளியில் இருந்து விட்டமீன் டி சத்தை பெறுவதை தவிர்த்து பால், மீன்,மீன்எண்ணை மற்றும் விட்டமீன் டி சேர்ந்த தாணிய உணவு வகைகள் மிதலிய சத்துணவுகளை உண்பது இன்னொரு வழியாகும் என யங் குறிப்பிட்டார்.பூமியில் வெவ்வேறு அட்ச ரேகை பகுதியில் வசிப்பவர்கள் அதிக சூரிய ஒளி அவர்கள் மீது படுவதால் இங்கிலாந்தில் வாழும் மக்களை விட 2-3 மடங்கு அதிகளவு விட்டமீன் டி யை பெறுகின்றனர் என தெரியவந்துள்ளது. 

மேலும் அவுஸ்ரேலியாவில் இருந்து இங்கிலாந்து வரை குடல், நுரையீரல் மற்றும் கருப்பை புற்று நோய் வீதம் அதிகரித்து செல்வதாக அந்த ஆய்வில் கண்டுப்பிடிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க ஹார்வாட் மெடிக்கல் கல்லூரி ஆய்வாளர்கள் ஆண், பெண்கள் உட்பட 1739 பேரை வைத்து நாடாத்திய ஆராடசியில் விட்டமீன் டி குறைப்பாடு உள்ளவர்களுக்கு இருதய நோய்கள் ஏற்படும் சாத்தியம் அதிகம் காணப்படுவதாக தெரியவந்திருக்கின்றது. எனவே ஆரோக்கியமாக வாழ்வதற்கு உங்கள் டாக்டரின் ஆலோசணையை பெற்று சூரிய ஒளியை அனுபவியுங்கள் அளவுடனும்! சந்தோசத்துடனும்!.

Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.