
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முத்தரப்பு ஒரு நாள் தொடர் இன்று துவங்குகிறது. சமீபத்தில் இலங்கை மண்ணில் ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணி, மீண்டும் சாதிக்க காத்திருக்கிறது.
முதல் போட்டியில் இன்று இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. சச்சின், ஹர்பஜன், வெட்டோரி, பிரண்டன் மெக்கலம் போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெறாத நிலையில், இரு அணிகளும் இளமை பட்டாளத்தை நம்பி களமிறங்குகின்றன.
இந்தியா, இலங்கை, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள் தொடர் இலங்கையில் நடக்கிறது. தம்புலவில் இன்று நடக்கும் முதல் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
சச்சின் இல்லை:இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங் தான் பலம். ஆனாலும், இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் ரன் மழை பொழிந்த சச்சின்(ஓய்வு) மற்றும் காம்பிர்(காயம்) இடம் பெறாதது பின்னடைவு. சேவக்குடன் சேர்ந்து துவக்க வீரராக தமிழ வீரர் தினேஷ் கார்த்திக் களமிறங்க உள்ளார்.
சமீபத்திய டெஸ்ட் தொடரில் அதிரடியாக ஆடிய சேவக், தனது வாணவேடிக்கையை தொடர வேண்டும். யுவராஜ் சிங் திறமையை நிரூபித்து காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். "மிடில் ஆர்டரில்' சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, விராத் கோஹ்லி, ரவிந்திர ஜடேஜா ஆகிய இளம் வீரர்கள் உள்ளனர். இவர்கள் பொறுப்பற்ற "ஷாட்' அடிப்பதை தவிர்த்து, கவனமாக ஆடினால், வலுவான இலக்கை எட்டலாம். கேப்டன் தோனி மற்றும் சவுரப் திவாரி கைகொடுத்தால், தொடரை வெற்றியுடன் துவக்கலாம்.
பந்துவீச்சில் ஜாகிர்(காயம்) மற்றும் ஹர்பஜன்(ஓய்வு) இடம்பெறாதது சிக்கலை ஏற்படுத்தலாம். அனுபவ ஆஷிஷ் நெஹ்ரா, பிரவீண் குமார், மிதுன் ஆகியோர் "வேகத்தில்' சாதிக்க வேண்டும். டெஸ்ட் தொடரில் சுழலில் அசத்திய பிரக்யான் ஓஜா மீண்டும் கலக்கலாம். தமிழக வீரர் அஷ்வின் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ரோஸ் டெய்லர் அதிரடி:இந்தியாவை போல, நியூசிலாந்து அணியிலும் முன்னணி வீரர்கள் இடம் பெறவில்லை. மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் வெட்டோரி விலகினார். கேப்டன் பொறுப்பை ரோஸ் டெய்லர் ஏற்றுக் கொண்டுள்ளார். ஜெசி ரைடர்(காயம்), பிரண்டன் மெக்கலம்(சொந்த பிரச்னை) ஆகிய அதிரடி நாயகர்களும் இல்லாததால், களை இழந்து காட்சி அளிக்கிறது. ஆனாலும், "ஆல்-ரவுண்டர்களான' ஜேக்கப் ஓரம், ஸ்காட் ஸ்டைரிஸ் இருப்பது பலம். இவர்களுடன் சேர்ந்து கேப்டன் ரோஸ் டெய்லரும் அதிரடி காட்டினால், இந்திய அணிக்கு சிக்கல் ஏற்படலாம்.
பாண்ட் ஓய்வு பெற்ற நிலையில் வேகப்பந்துவீச்சுக்கு கைல் மில்சை தான் பெரிதும் சார்ந்துள்ளது. சுழலுக்கு ஜீதன் படேல், நாதன் மெக்கலம் உள்ளனர்.
இலங்கையுடனான டெஸ்ட் தொடர் முடிந்த இரண்டு நாளில் முத்தரப்பு தொடரில் இந்தியா பங்கேற்கிறது. இதனால் வீரர்கள் சோர்வாக இருந்த போதும், இலங்கை மண்ணில் அதிக நாட்கள் விளையாடிய அனுபவம் நமக்கு சாதகம். நியூசிலாந்து அணியோ தற்போது தான் இலங்கை வந்துள்ளது. ஒட்டுமொத்தமாக பார்த்தால், இன்றைய போட்டியில் இந்திய அணிக்கு தான் அதிக வாய்ப்பு உள்ளது.
இலங்கை சாதகம்:இத்தொடரில் மற்றொரு அணியாக களமிறங்கும் இலங்கை முழு பலத்துடன் காட்சி அளிக்கிறது. கேப்டன் சங்ககரா, தில்ஷன், ஜெயவர்தனா, சமரசில்வா, சமரவீரா ஆகியோர் பேட்டிங்கில் அசத்த காத்திருக்கின்றனர். "ஆல்-ரவுண்டராக' ஏஞ்சலோ மாத்யூஸ் உள்ளார். "வேகத்தில்' மலிங்கா மிரட்டலாம். முரளிதரன் இல்லாத நிலையில், மெண்டிஸ், ஹெராத், ரந்திவ் ஆகியோர் தங்களது "சுழல்' திறமையை நிரூபிக்க போராடலாம். சொந்த மண்ணில் விளையாடுவது இலங்கை அணிக்கு சாதகமான விஷயம்.
வரும் 2011ல் இந்திய துணை கண்டத்தில் நடக்க உள்ள உலக கோப்பை போட்டிக்கு, முத்தரப்பு தொடர் சிறந்த பயிற்சியாக அமையும். இதனால் ஒவ்வொரு போட்டியிலும் அனல் பறக்கும் ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.

பங்கேற்கும் அணிகள்:
இந்தியாதோனி(கேப்டன்), சேவக்(துணை கேப்டன்), விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, யுவராஜ், ரவிந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், அஷ்வின், பிரவீண் குமார், அபிமன்யு மிதுன், ஆஷிஷ் நெஹ்ரா, பிரக்யான் ஓஜா, சவுரப் திவாரி.
நியூசிலாந்துரோஸ் டெய்லர்(கேப்டன்), கைல் மில்ஸ்(துணை கேப்டன்), கிராண்ட் எலியட், மார்டின் கப்டில், கேரத் ஹாப்கின்ஸ், நாதன் மெக்கலம், ஆன்டி மெக்கே, ஜேக்கப் ஓரம், ஜீதன் படேல், பீட்டர் இன்கிராம், டிம் சவுத்தி, ஸ்டைரிஸ், டேரல் டபி, வாட்லிங், வில்லியம்சன்.
இலங்கைசங்ககரா(கேப்டன்), ஜெயவர்தனா(துணை கேப்டன்), தில்ஷன், தரங்கா, மாத்யூஸ், சமரவீரா, கபுகேதரா, சமரசில்வா, ரந்திவ், மெண்டிஸ், மலிங்கா, குலசேகரா, பெர்னாண்டோ, ஹெராத், பெரேரா.
அட்டவணை நாள் மோதும் அணிகள்ஆக., 10 இந்தியா-நியூசி.,
ஆக., 13 இலங்கை-நியூசி.,
ஆக., 16 இந்தியா-இலங்கை
ஆக., 19 இலங்கை-நியூசி.,
ஆக., 22 இந்தியா-இலங்கை
ஆக., 25 இந்தியா-நியூசி.,
ஆக., 28 பைனல்
* பகலிரவு ஆட்டமாக நடக்கும் போட்டிகள் பிற்பகல் 2.30 மணிக்கு துவங்கும்.
ஆக., 13 இலங்கை-நியூசி.,
ஆக., 16 இந்தியா-இலங்கை
ஆக., 19 இலங்கை-நியூசி.,
ஆக., 22 இந்தியா-இலங்கை
ஆக., 25 இந்தியா-நியூசி.,
ஆக., 28 பைனல்
* பகலிரவு ஆட்டமாக நடக்கும் போட்டிகள் பிற்பகல் 2.30 மணிக்கு துவங்கும்.
இதுவரைஇந்திய, நியூசிலாந்து அணிகள் இதுவரை 81 ஒரு நாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்தியா 40ல் வென்றுள்ளது. நியூசிலாந்து 36ல் வெற்றி பெற்றுள்ளது. 5 போட்டிகளில் முடிவு கிடைக்கவில்லை.
* இவ்விரு அணிகளும் இலங்கை மண்ணில் 7 முறை மோதியுள்ளன. இதில் தலா இரண்டு வெற்றிகளுடன், சமபலத்தில் உள்ளன. 3 போட்டிகளில் முடிவு கிடைக்கவில்லை.
* இவ்விரு அணிகளும் இலங்கை மண்ணில் 7 முறை மோதியுள்ளன. இதில் தலா இரண்டு வெற்றிகளுடன், சமபலத்தில் உள்ளன. 3 போட்டிகளில் முடிவு கிடைக்கவில்லை.
இஷாந்த் காயம்சச்சின், ஜாகிர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இல்லாமல் தவிக்கும் இந்திய அணிக்கு இன்னொரு பின்னடைவு. காயம் காரணமாக இன்றைய போட்டியில் இஷாந்த் சர்மா பங்கேற்க மாட்டார். இது குறித்து கேப்டன் தோனி கூறுகையில்,""கணுக்கால் காயத்தால் இஷாந்த் அவதிப்படுகிறார். இவர், இன்றைய நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார். காயம் ஏற்படுவதை ஒருவிதத்தில் வரமாக கருதலாம். இதன் மூலம் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இது உலக கோப்பை தொடருக்கு சிறந்த அணியை தேர்வு செய்ய உதவிகரமாக அமையும்
டெஸ்ட் தொடரில் விளையாடிய களைப்பில் வீரர்கள் உள்ளனர். உடலுக்கு ஓய்வு தேவைப்படும் பட்சத்தில் வீரர்கள் ஒரு சின்ன "பிரேக்' எடுக்க தயங்க கூடாது,''என்றார்.
டெஸ்ட் தொடரில் விளையாடிய களைப்பில் வீரர்கள் உள்ளனர். உடலுக்கு ஓய்வு தேவைப்படும் பட்சத்தில் வீரர்கள் ஒரு சின்ன "பிரேக்' எடுக்க தயங்க கூடாது,''என்றார்.
2 வது இடத்தில் நீடிக்குமா? இன்றைய முதல் போட்டியில், நியூசிலாந்திடம் இந்தியா தோல்வி அடைந்தால், ஒரு நாள் ரேங்கிங் பட்டியலில் தனது 2 வது இடத்தை இழக்க நேரிடும்.
தவிர, முத்தரப்பு தொடரின் அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில், ஒரு நாள் ரேங்கிங் பட்டியலில் 125 புள்ளிகளுடன் தனது 2 வது இடத்தில் நீடிக்கும். தற்போது இந்திய அணி 118 புள்ளிகளுடன் உள்ளது. மாறாக அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்தால், 111 புள்ளிகள் பெற்று 6 வது இடத்துக்கு தள்ளப்படும். ரேங்கிங் பட்டியலின் முதலிடத்தில் ஆஸ்திரேலியா (132 புள்ளிகள்) உள்ளது.
2 comments:
hi
Waiting Sewag's PLAY
India 88
Post a Comment