அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube


Upul Tharanga hits one hard through the off side 
தரங்கா அரை சதம் அடிக்க, முத்தரப்பு தொடரின் 2 வது போட்டியில், இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
இந்தியா, இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடக்கிறது. 


முதல் போட்டியில் இந்திய அணியை, நியூசிலாந்து வீழ்த்தியது. நேற்று தம்புலாவில் நடந்த 2 வது போட்டியில் நியூசிலாந்து, இலங்கை அணிகள் மோதின.
கப்டில் சொதப்பல்:
முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. மலிங்கா வேகத்தில் டக்-அவுட்டானார் கப்டில். கேப்டன் ரோஸ் டெய்லர் (16) இந்த முறை ஏமாற்றினார். அடுத்து வந்த வில்லியம்சன், இத்தொடரில் 2 வது முறையாக டக்-அவுட்டானார்.
வாட்லிங் அரைசதம்:
ஒரு புறம் விக்கெட்டுகள் விழ, மறுமுனையில் அறிமுக வீரராக களமிறங்கிய வாட்லிங், பொறுப்புடன் ஆடினார். இவருக்கு சற்று நேரம் ஒத்துழைப்புக் கொடுத்தார் ஸ்டைரிஸ் (24). ஒரு நாள் அரங்கில் முதல் அரை சதம் கடந்த வாட்லிங் 55 ரன்களுக்கு வெளியேறினார்.
மெக்கலம் ஆறுதல்:
சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழ, ரன் சேர்க்க திணறியது நியூசிலாந்து அணி. மிடில் ஆர்டரில் நாதன் மெக்கலம் 36 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார். கடைசி கட்டத்தில் மில்ஸ் (11), சோதி (13) ஓரளவு ரன் சேர்க்க, 48.1 ஓவரில் "ஆல்-அவுட்டான' நியூசிலாந்து அணி 192 ரன்கள் சேர்த்தது.
தில்ஷன் "அவுட்':
எளிய இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு, நியூசிலாந்து பந்து வீச்சில் நெருக்கடி கொடுத்தது. துவக்க வீரர் தில்ஷன் (5) சொற்ப ரன்களுக்கு அவுட்டானார். பின்னர் தரங்கா, சங்ககரா இணைந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி 2 வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், சங்ககரா (48) அவுட்டானார்.
தரங்கா அபாரம்:
மறுமுனையில் ஒரு நாள் அரங்கில் 17 வது அரை சதம் கடந்தார் தரங்கா. இவருடன் இணைந்த ஜெயவர்தனா (5) ஏமாற்றம் அளித்தார். 9 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் சேர்த்து தரங்கா பெவிலியன் திரும்பினார். மாத்யூஸ் (0), குலசேகரா (7), ஹெராத் (2) கைகொடுக்க வில்லை. இதனால் இலங்கை அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இருப்பினும் சமரவீரா, கபுகேதரா இணைந்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். மில்ஸ் பந்து வீச்சில், சமரவீரா ஒரு சூப்பர் பவுண்டரி அடிக்க, 40.5 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 195 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சமரவீரா (36), கபுகேதரா (9) அவுட்டாகாமல் இருந்தனர். இவ்வெற்றியின் மூலம் இலங்கை அணி 4 புள்ளிகள் பெற்றது.

100 விக்கெட்
நேற்றைய போட்டியில், நியூசிலாந்து வீரர் கப்டிலை அவுட்டாக்கிய இலங்கை வீரர் மலிங்கா, ஒரு நாள் போட்டிகளில் 100 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். தவிர, இந்த இலக்கை எட்டும் இலங்கையின் 11 வது வீரரானார்.
* இதுவரை 68 போட்டிகளில் பந்து வீசிய மலிங்கா, 102 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் மிகக் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்டுகளை எட்டிய முதல் இலங்கை வீரர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் சக வீரர் மகரூப் 75 போட்டிகளில் இந்த இலக்கை எட்டியிருந்தார். சுழல் ஜாம்பவான் முரளிதரன் கூட, 76 போட்டிகளில் தான் 100 விக்கெட் கைப்பற்றினார்.

ஸ்கோர் போர்டு
நியூசிலாந்து
வாட்லிங் (கே) சங்ககரா (ப) மாத்யூஸ்    55 (68)
கப்டில் (கே) கபுகேதரா (ப) மலிங்கா    0 (1)
டெய்லர் எல்.பி.டபிள்யு., (ப) மாத்யூஸ்    16 (34)
வில்லியம்சன் (கே) சமரவீரா (ப) மாத்யூஸ்    0 (2)
ஸ்டைரிஸ் (கே) ஜெயவர்தனா (ப) ஹெராத்    24 (33)
ஹாப்கின்ஸ் (கே) கபுகேதரா (ப) மலிங்கா    11 (22)
நாதன் (கே) ஹெராத் (ப) மெண்டிஸ்    36 (64)
டபி (ப) மலிங்கா    0 (1)
மில்ஸ் (கே) மாத்யூஸ் (ப) ஹெராத்    11 (25)
சவுத்தி (கே) தில்ஷன் (ப) குலசேகரா    13 (30)
மெக்கேய் -அவுட் இல்லை-    4 (12)
உதிரிகள்    22
மொத்தம் (48.1 ஓவரில் "ஆல்-அவுட்')    192
விக்கெட் வீழ்ச்சி: 1-2 (கப்டில்), 2-47 (டெய்லர்), 3-47 (வில்லியம்சன்), 4-99 (ஸ்டைரிஸ்), 5-101 (வாட்லிங்), 6-123 (ஹாப்கின்ஸ்), 7-123 (டபி), 8-143 (மில்ஸ்), 9-178 (நாதன் மெக்கலம்), 10-192 (சவுத்தி).
பந்து வீச்சு: மலிங்கா 10-1-35-3, குலசேகரா 8.1-1-35-1, மாத்யூஸ் 10-1-36-3, மெண்டிஸ் 10-0-42-1, ஹெராத் 10-0-35-2.

இலங்கை
தரங்கா (கே) வாட்லிங் (ப) மில்ஸ்    70 (109)
தில்ஷன் (கே) + (ப) மில்ஸ்    5 (9)
சங்ககரா (கே) கப்டில் (ப) ஸ்டைரிஸ்    48 (62)
ஜெயவர்தனா (கே) டெய்லர் (ப) மெக்கலம்    5 (11)
சமரவீரா -அவுட் இல்லை-    36 (38)
மாத்யூஸ் (கே) டெய்லர் (ப) மில்ஸ்    0 (1)
குலசேகரா (கே) ஹாப்கின்ஸ் (ப) சவுத்தி    7 (3)
ஹெராத் (கே) டெய்லர் (ப) மில்ஸ்    2 (3)
கபுகேதரா -அவுட் இல்லை-    9 (9)
உதிரிகள்    13
மொத்தம் (40.5 ஓவரில் 7 விக்., இழப்பு)    195
விக்கெட் வீழ்ச்சி: 1-11 (தில்ஷன்), 2-96 (சங்ககரா), 3-119 (ஜெயவர்தனா), 4-162 (தரங்கா), 5-164 (மாத்யூஸ்), 6-177 (குலசேகரா), 7-180 (ஹெராத்).
பந்து வீச்சு: மில்ஸ் 9.5-1-41-4, டபி 5-0-31-0, சவுத்தி 6-0-41-1, மெக்கேய் 4-0-26-0, நாதன் மெக்கலம் 7-0-23-1, வில்லியம்சன் 1-0-6-0, ஸ்டைரிஸ் 8-0-22-1. 


Post Comment


1 comments:

tamildigitalcinema said...

உங்களது பதிவுகள் இன்னும் ஏராளமான வாசர்களை சென்றடைய http://writzy.com/tamil/ ல் உங்கள் பதிவுகளை இணையுங்கள்...

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.