
கொழும்பு டெஸ்டில் வெற்றி பெற்று இந்தியா தொடரை சமன் செய்தாலும், இத்தொடரில் இலங்கை அணி தான் சிறப்பாக செயல்பட்டது,'' என இலங்கை கேப்டன் சங்ககரா தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியது: டெஸ்ட் தொடரில் இந்தியாவை விட, அதிக ரன் மற்றும் அதிக விக்கெட் வீழ்த்திய அணி இலங்கை தான். மூன்றாவது டெஸ்டின் கடைசி நாள் ஆட்டத்தில், சச்சின் மற்றம் ரெய்னா கொடுத்த "கேட்ச்' வாய்ப்புகளை தவறவிட்டோம். இது பின்னடைவாக அமைந்து விட்டது.
இரண்டாவது இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்திருந்தோம் என்றால், இந்தியாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்திருக்கலாம். லட்சுமண் சிறப்பாக ஆடி இந்தியாவுக்கு வெற்றி தேடி தந்துவிட்டார். நெருக்கடியான நிலையில், மிகவும் "ரிலாக்சாக' ஆடி ரன் குவித்தார். கடந்த 2 ஆண்டுகளாக இம்மைதானத்தில் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணி தான் வெற்றி பெற்றுள்ளது. இது இன்று இந்தியாவுக்கும் சாதகமாக அமைந்து விட்டது.
ரந்திவ் அசத்தல்:இலங்கை சுழற் பந்து வீச்சார் ரந்திவ் அசத்தலாக செயல்படுகிறார். தன்னம்பிக்கையுடன், அதிரடியாக பந்து வீசி விக்கெட்டுகள் கைப்பற்றி கலக்கினார். இனி வரும் டெஸ்ட் தொடர்களில், ரந்திவ் இலங்கை அணியின் வெற்றிக்கு வழிவகுப்பார் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு சங்ககரா தெரிவித்தார்.
0 comments:
Post a Comment