அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube


முத்தரப்பு தொடரின் இன்றைய லீக் போட்டியில் இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து அணி, தனது வெற்றிநடையை தொடர காத்திருக்கிறது.
இலங்கையில், இந்தியா-நியூசிலாந்து-இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் தம்புலவில் இன்று நடக்கும் 2வது லீக் போட்டியில் நியூசிலாந்து அணி, இலங்கையை சந்திக்கிறது.

பேட்டிங் பலம்:
இந்தியாவுக்கு எதிரான முதல் லீக் போட்டியில் அசத்தல் வெற்றி கண்ட நியூசிலாந்து அணி, இன்றைய போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி பைனல் வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளது. முன்னணி வீரர்களான பிரண்டன் மெக்கலம், ஜெசி ரைடர், டேனியல் வெட்டோரி இல்லாத நிலையில், நியூசிலாந்து அணியின் பேட்டிங் வரிசை பலமாக காட்சி அளிக்கிறது. கடந்த போட்டியில் அபாரமாக ஆடிய கேப்டன் ரோஸ் டெய்லர், ஸ்டைரிஸ் இன்றும் சாதிக்கலாம். 

இவர்களுக்கு மார்டின் கப்டில், ஜேக்கப் ஓரம், வில்லியம்சன், எலியாட் உள்ளிட்டோர் கைகொடுத்தால் நல்லது.
வேகப்பந்துவீச்சில் கைல் மில்ஸ், டேரல் டபி, ஆன்டி மெக்கே, ஜேக்கப் ஓரம் சிறப்பாக செயல்படுகின்றனர். சுழலில் நாதன் மெக்கலம், ஜீதன் படேல் 
கைகொடுத்தால் கூடுதல் பலம்.
சொந்த மண் சாதகம்:
இலங்கை அணி, அதன் சொந்த மண்ணில் விளையாடுவது சாதகமான விஷயம். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அசத்திய கேப்டன் சங்ககரா, தில்ஷன், மகிலா ஜெயவர்தனா, சமரவீரா ஆகியோர் முத்தரப்பு தொடரிலும் சாதிக்கலாம். தவிர "ஆல்-ரவுண்டர்' ஏஞ்சலோ மாத்யூஸ், சமரசில்வா, கபுகேதரா, உபுல் தரங்கா ஆகியோர் இருப்பது கூடுதல் பலம்.
வேகத்தில் மலிங்கா சாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இவருக்கு குலசேகரா, பெர்னாண்டோ, பெரேரா உள்ளிட்டோர் ஒத்துழைப்பு கொடுத்தால் நல்லது. சுழலில் மெண்டிஸ், ரந்திவ், ஹெராத் மிரட்டும் பட்சத்தில் சொந்த மண்ணில் அசத்தல் வெற்றி பெறலாம்.

இதுவரை இவ்விரு அணிகள்
 ஒருநாள் அரங்கில், இலங்கை-நியூசிலாந்து அணிகள் இதுவரை 70 போட்டியில் மோதியுள்ளன. இதில் நியூசிலாந்து 35, இலங்கை 31 போட்டியில் வெற்றி பெற்றன. மூன்று போட்டிக்கு முடிவு இல்லை. ஒரு போட்டி "டை' ஆனது.


* கடந்த 2009ல் ஜோகனஸ்பர்க் நகரில் நடந்த போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி அதிகபட்சமாக 315 ரன்கள் எடுத்தது. கடந்த 1998ல் கொழும்புவில் நடந்த போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை அணி அதிகபட்சமாக 293 ரன்கள் எடுத்தது.


* தம்புலா மைதானத்தில் இவ்விரு அணிகள் 2 போட்டியில் மோதின. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை ருசித்தன.


* தம்புலா மைதானத்தில் இலங்கை அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி அதிகபட்சமாக 50 ஓவரில் 156 ரன்கள் (2003) எடுத்தது. இதேபோட்டியில் இலங்கை அணி 49.1 ஓவரில் 147 ரன்கள் எடுத்து, நியூசிலாந்துக்கு எதிராக இங்கு தனது அதிகபட்ச ஸ்கோரை பெற்றது.


ஜேக்கப் ஓரம் சந்தேகம்
 இன்றைய போட்டியில் நியூசிலாந்து "ஆல்-ரவுண்டர்' ஜேக்கப் ஓரம் விளையாடுவது சந்தேகமாக உள்ளது. இதுகுறித்து கேப்டன் ரோஸ் டெய்லர் கூறுகையில், ""பின் தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜேக்கப் ஓரம் இன்று விளையாடுவது கேள்விக்குறியாக உள்ளது. காயத்தின் தன்மையை பொறுத்து இவர் விளையாடுவது இன்று காலை முடிவு செய்யப்படும்,'' என்றார்.
அணிகளின் விபரம்:
நியூசிலாந்து
ரோஸ் டெய்லர்(கேப்டன்), கைல் மில்ஸ்(துணை கேப்டன்), கிராண்ட் எலியட், மார்டின் கப்டில், கேரத் ஹாப்கின்ஸ், நாதன் மெக்கலம், ஆன்டி மெக்கே, ஜேக்கப் ஓரம், ஜீதன் படேல், பீட்டர் இன்கிராம், டிம் சவுத்தி, ஸ்டைரிஸ், டேரல் டபி, வாட்லிங், வில்லியம்சன். 


இலங்கை
சங்ககரா(கேப்டன்), மகிலா ஜெயவர்தனா(துணை கேப்டன்), தில்ஷன், தரங்கா, மாத்யூஸ், சமரவீரா, கபுகேதரா, சமரசில்வா, ரந்திவ், அஜந்தா மெண்டிஸ், லசித் மலிங்கா, குலசேகரா, பெர்னாண்டோ, ஹெராத், பெரேரா.



Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.