
மனித மூலையின் அலைவு கொலத்தை ஆராய்ச்சியாளர்கள் நான்கு விதமாக வகுக்கின்றார்கள். டெல்டா நிலை 0.5-3.5 தீட்டா நிலை 3.5-7.0 அல்பா நிலை 7.0-14.0 பீட்டா நிலை 14.0-30.0 சரு இனி இங்குள்ள ஒவ்வொரு நிலை பற்றியும் ஒரு அலசல் போடுவொம்.
முதலாவது டெல்டா நிலைஇந்த நிலையிலெயே நாம் நல்ல தூக்கம் போடுகின்றோம். இந்த நிலையில் நம் மூளை ஆழ்ந்த அமைதியான ஓய்வை எடுத்துக்கொள்கின்றது. தொடர்ந்து மனிதன் 72 மணிநெரம் தூங்காமல் விட்டால் என்னாகும் தெரியுமா? வேறென்ன தெய்வ ஜோதியில் கலக்க வேண்டியது தான். இரண்டாவது தீட்டா நிலை இதுவே மனிதனுக்கு புத்தாக்கத்தை தூண்டும் நிலையாகும்.
இதற்கு உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். நியூட்டன் புவியீர்புப் பற்றி கண்டு பிடித்தது எப்படி? ஒரு நாள் அவர் அப்பிள் மரத்தின் கீழ் ஓய்வெடித்துக் கொண்டு இருந்தப் போது ஒரு அப்பிள் நிலத்திலே டப் என்று வீழ்ந்தது. அரை தூக்கத்திலிருந்த சேர் ஜசாக் நியூட்டன் விழித்துக்கொண்டான். ஏன் மேலே போகாமல் கீழே வீழ்ந்தது.
என்று யோசிக்கத் தொடங்கினார். முழு விழ0ிப்பில் இருந்ததால் கட்டாயம் அந்த அப்பிளை சாப்பிட்டு இருப்பார். ஆனால் அவர் அவ்வாறு செய்யாமல் நீண்ட யோசனையில் ஈடுபட்டார். அன்றைய அந்த அப்பிளே பூமியின் புவியீர்ப்பு சக்தி பற்றி உலகம் அறிய வழி வகுத்தது. மூன்றாவது அல்பா நிலைஅதாவது நீங்கள் விழித்து உள்ளீர்கள். ஆனால் நீங்கள் பதற்றம் இல்லாமல் இருக்கின்றீர்கள்.
உதாரணமாக காலையில் வேலைக்கு சென்றவுடன் எப்படி இருக்கும் யோசித்துப் பாருங்கள். அதுதான் அல்பா நிலை. வினைத்திறனுடன் உற்பத்தியை மேற்கொள்ளக் கூடிய நிலை. இந்த நிலை பொருளாதார முக்கியத்துவமுடைய நிலையாக கொள்ளப்படுகின்றது. நான்காவது பீட்டா நிலைஇது மிக ஆபத்தான நிலை.
இந்த நிலை தொடர நாம் அனுமதிக்கக்கூடாது. காரணம் உங்களை மன நோயாளி ஆக்குவது இந்த நிலைக்கு நீங்கள் வரும்போதெ ஆகும். அதிகளவான மன அழுத்தம். உங்களை இந்த நிலைக்கு இட்டுச்செல்லும் அதிக மன உளைச்சலுக்குட்ப்பட்டு நீங்கள் இருந்தாலும் பெரும்பாலானவர்கள் பரபரப்பாக இருப்பார்கள் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து ஆகும். இவ்வாறு மனித மூளையின் அலைவுக்கோலங்கள்.
3 comments:
அருமை நண்பா..இதை போல் பதிவுகளின் தேவை நிறைய இருக்கிறது. இன்னும் எழுதுங்கள்
நன்றி முகமட்
தொடர்ந்து உங்கள் ஆதரவை எமக்கு நல்கவும்
பழங்காலத்து யோக நூல்களில் எண்ணத்தை ‘வாக்’ என்று குறிப்பிடுகிறார்கள்.இந்த ’வாக்’எனப்படுகிறது 4 வகைப்படும் அதாவது
1.பரா 2.பஸ்யந்தி 3.மத்யமா 4.வைகரி எனப்படுபவை
இதற்கும் மேலே உள்ள டெல்டா,தீட்டா,ஆல்பா,பீட்டா என்ன வித்யாசம்.
நியூட்டனைதாண்டி இங்கும் உள்ளது
Post a Comment