
ஏதேனும் இணையதளம் ஒன்றினைப் பார்க்கையில், அதில் எப்1 கீயை அழுத்தவும் என்று செய்தி தரப்பட்டுள்ளதா; உடனே அதனை அழுத்த வேண்டாம் என மைக்ரோசாப்ட் நிறுவனம் எச்சரிக்கை வழங்கியுள்ளது.
இதன் மூலம் பல இணைய தளங்கள், கம்பூட்டர் பயன்படுத்துவோரை மோசமான தளங்களுக்கு இழுத்துச் சென்று, அவர்கள் கம்ப்யூட்டரில் பெர்சனல் தகவல்களைத் திருடும் புரோகிராம்களைப் பதிக்கின்றன. இதனால் தங்கள் கம்ப்யூட்டர்களில் உள்ள செக்யூரிட்டி சிஸ்டம் செட்டிங்குகளில், அவற்றை "high" என்ற அளவில் அமைக்குமாறும் மைக்ரோசாப்ட் கேட்டுக் கொண்டுள்ளது. இதன் மூலம் ActiveX Controls மற்றும்Active Scripting ஆகியவற்றைத் தடை செய்திட முடியும்.
இந்த மால்வேர் பெரும்பாலும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைப் பயன்படுத்துவோரையே இலக்காகக் கொண்டு இயங்கு வதாகவும் மைக்ரோசாப்ட் எச்சத்துள்ளது. விண்டோஸ் 2000, விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் சர்வர் 2003 ஆகியவற்றைப் பயன்படுத்து வோரே இதற்கு இலக்காகுகின்றனர்.
இந்த மால்வேர் பாதித்த கம்ப்யூட்டரில், இணைய தளங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கையில் எப்1 அழுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அழுத்தியவுடன் கம்ப்யூட்டர் ஹைஜாக் செய்யப்பட்டு, மால்வேர் புரோகிராம் பதியப்படுகிறது. இதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் தீர்வு ஒன்றை வழங்கியுள்ளது.
லிங்க் தரப்பட்டாலோ, அல்லது பாப் அப் விண்டோ வந்தாலோ, உடனே CTRL + ALT + DEL கீகளை அழுத்தவும். உடனே கிடைக்கும் கட்டத்தில் Internet Explorer task என்ற பிரிவு அல்லது உங்கள் பிரவுசர் பிரிவினைத் தேர்ந்தெடுத்து டெலீட் கீயினை அழுத்தவும்.பின் மீண்டும் பிரவுசரை இயக்கிப் பார்த்துக் கொள்ளலாம்.
0 comments:
Post a Comment