
பக்கவாதம் தாக்கியவர்களுக்கு கை, கால்கள் இழுத்து கொள்ளும் மூளை செயல்பாடு பாதிப்பு தான் பக்க வாதம் நோயை ஏற்படுத்துகிறது.மூளை இடும் கட்டளைகள் சரியான முறையில் செயலாற்றாமல் போகும் போது இந்த நோய் ஏற்படும்.
இப்போது பக்கவாத நோய் பாதித்தவர்களுக்கு மூளையை இயக்கும் மைக்ரோ சிப்சை கனடா நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். கால் சேரி பல்கலைக் கழகத்தை சேர்ந்த நவீத் சயித் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு இதை உருவாக்கி இருக்கிறது.
மைக்ரோ சிப்சை மூளை செல்களோடு பொருத்தி செயல்படாமல் இருக்கும் மூளையை இயக்க செய்கின்றனர்.
மூளையின் பல்வேறு பாதிப்புகளையும் இதன் மூலம் சரி செய்து விடலாம் என்று விஞ்ஞானிகள் குழு தெரிவித்தது.
0 comments:
Post a Comment